சவுக்கு சங்கர் கைது..

இளைய தலைமுறைக்கு வேண்டுகோள்..!

காவல்துறை மகளிர் குறித்து
கேவலமாகப் பேசியதற்காக
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறு விபத்துக்குப்பின் அவர்
கோவை கொண்டுசெல்லப் படுகிறார்.

சமூகத் தடைகளை எதிர்த்துநின்று
பெண்கள்
காவல்துறைப் பணியைத் தேர்வு செய்வதை
நாம் கொண்டாட வேண்டும்.

அதற்கு நேர் மாறாக,
காவல்துறையில் உள்ள பெண்களையும்
மூன்றாம் பாலினத்தவரையும் இழிவுபடுத்தி
அவர் பேசிய விதம் அருவருப்பானது.

சமூக ஊடகங்கள் என்பவை
சில வினாடி
வெற்று சவடால்களுக்கான
Theatrics மட்டுமே என்று
சவுக்கு சங்கர் நம்பினார்.

யார் மீதும் வாந்தி எடுப்பதற்கான இடமாக
சமூக ஊடகங்களை அவர் பயன்படுத்தினார்.
சிலர் இந்த போக்கினை
கொம்புசீவி வளர்த்து விட்டனர்.
அனைவருக்கும் இந்தக் கைது ஒரு பாடம்.

ஒன்றிய அரசின்
அதீத ஓரவஞ்சனையை மீறி,
பெரும் நிதிச் சிக்கல்களுக்கு இடையே
தமிழ்நாட்டில்
எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திட்டங்கள் செயலாக்கத்தில்
சிறு குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு.
அவற்றை சரி செய்வதற்கான
அருமையான mechanism இங்கு உள்ளது.

ஆனால் ஒப்பீட்டளவில்
Non issues அனைத்தையும்
ஊதிப் பெரிதாக்குவதையே
சவுக்கு சங்கர்
தனது தொழிலாக எடுத்துக்கொண்டார்.

140 கோடி மக்களின் எதிர்காலம்
மதவெறி பாசிசத்தின் பிடியில் சிக்கி இருப்பதை
மறைக்கும் வேலையை அவர் தனது
secret agenda வாக மேற்கொண்டார்.

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்
ஒன்றிய அரசின் அதீத ஓரவஞ்சனை பற்றி
பேசுவதை அவர் தவிர்த்தார்.

கொடநாடு கொலை பற்றி
நேரடியாக கள ஆய்வுக்குப்போன
புலனாய்வுப் புலியான அவர்,
தான் குற்றம் சாட்டிய நபரிடமே சரண் அடைந்து
புலனாய்வுப் புளியாக மாறிவிட்டார்.

“கட்சி ஆரம்பிப்பேன்
ஆனால் அதற்கு சித்தாந்தம் தேவையில்லை”
என்று தற்போது பிதற்றி வருகிறார் அவர்.

நேரத்துக்கு ஒரு தோதுப்பட்ட கருத்தை
உளறுவதற்கு மட்டுமே இந்த
No Ideology Stand உதவும்.

சவுக்கு சங்கரின்
வெற்று சவடால்களை, பொய் சிரிப்புகளை
நம்பி ஏமாந்த தம்பி தங்கைகள்
இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.

சவுக்கு சங்கர், மதன் கவுரி போன்றவர்களுக்கு
அதிக பாலோவர்ஸ் வந்துவிட்டதால்
அவர்கள் சொல்வது சரி என்று
ஒருபோதும் நினைக்காதீர்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு
நல்லது செய்கிறார்களா?
அல்லது நாடகம்போட்டு
கெடுதல் செய்கிறார்களா? என்பதை
அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்.

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், லெனின்
போன்ற தத்துவார்த்த தலைவர்களைத்
தேடிப் படியுங்கள்.
தெளிவுபெறுங்கள்.

பேரலை, அரண்செய்
U2Brutus, Tribes
தமிழ்க்கேள்வி, ஜீவா டுடே
மின்னம்பலம், லிபர்ட்டி தமிழ்
குலுக்கை, திராவிடம்100
அதர்மம், அறக்கலகம்
Onion roast, எனவே பேசுவோம்
போன்ற மக்கள் நலனுக்கான
YouTube ஊடகங்களை
அதிகம் பாருங்கள். பகிருங்கள்.

சமூக மாற்றத்துக்கான
வழிகாட்டும் சித்தாந்தம் இல்லாமல்
சமூக மாற்றம் சாத்தியம் இல்லை.

மின்னுவதெல்லாம் பொன் அல்ல.

கோட்பாடற்ற புரோக்கர்களுக்கு
fire விடுவதை நிறுத்துங்கள்.

எழுத்தாளர் :

திருஞானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *