29.02.2024
உண்ணா நிலைப் போராட்டத்தின் இரண்டாம் நாள்
தமிழைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழர்கள் என 25 பேர் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா நிலை போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான இன்று, உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கையை ஆதரித்தும் அதற்கான உண்ணா நிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 200க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர். பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞருமான பால் கனகராஜ் அவர்கள் , பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞருமான வேல்முருகன் அவர்கள், மக்கள் பாதை அமைப்பின் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆட்சியருமான திரு சகாயம் அவர்கள் ,சென்னை யூத் பார்ட்டியின் தலைவர் வழக்குரைஞர் தயாநிதி அவர்கள் ,தமிழர் விடுதலைக் கட்சியின் நிர்வாகி தமிழ் கார்த்திக் அவர்கள், பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் கிறிஸ்டோபர், ஆதர்ஷ் விவேக் மித்ரா , பாலசுப்ரமணியன், சாரதி ,சதீஷ், கிரி ஆகியோர், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த. பாண்டியன் அவர்கள், 108 ஆம்புலன்ஸ் சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் ,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன் அவர்கள், மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல இணைச் செயலாளர் திரு புவன் அவர்கள் ஆகியோர் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணா நிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உரையாற்றினர்.
உண்ணா நிலை போராட்டத்தில் பங்கு கொள்வோர் ;
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க பட்டினிப் போராட்டம்
- வழ. கு.ஞா.பகவத்சிங்
- வழ ஈ.மெய்யப்பன்
- வழ மு.வேல்முருகன்
- வழ திசை இந்திரன்
- வழ பாரதி
- வழ யாசர்கான்
- வழ அருண்குமார்
- தமிழ்பித்தன்
- சட்டக் கல்லூரி மாணவி நிறைமதி
- சட்டக் கல்லூரி மாணவர் வணங்காமுடி
- சிவகாளிதாசன்
- குருசாமி
- தொல்காப்பியன்
- இரமேசு
- வழ செல்வகுமார்
- வழ சங்கர்
- வழ புகழ்வேந்தன்
- வழ இராமு (எ) மருது
- வழ புளியந்தோப்பு மோகன்
- கிருஷ்ணமூர்த்தி (எ) கீர்த்தி
- வழ கலைச் செல்வன்
- சின்னப்பத்தமிழர்
- சட்டக் கல்லூரி மாணவி வளர்மதி
- வழ தெய்வம்மாள்
இவண்
உயர் நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்
உயர் நீதிமன்றத்தில் தமிழ் –
வழக்குரைஞர் செயற்பாட்டுக் குழு
Leave a Reply