பள்ளிக் கல்வித்துறையால் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது .ஒன்றிரண்டு இடங்களில் சில தேவையற்ற தலையீடுகளைத் தவிர அரசுப் பள்ளியின் மீதும் மாணவர்கள் மீதும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள்.
அதிகார வர்க்கங்கள் சூழ்ந்து இறுக்கமாகியிருந்த அரசுப் பள்ளிகளை பள்ளி மேலாண்மைக் குழு எனும் பெயரில் மக்கள் பங்கேற்பு நடவடிக்கைகள் வழி அரசுப் பள்ளிகளில் சனநாயகம் மலர அடித்தளம் இடப்பட்டிருக்கிறது.
சென்னை அசோக் நகரில் நடந்த விரும்பத் தகாத நிகழ்வின் காரணமாக பள்ளி நிகழ்வுகளில் இருந்து பள்ளி மேலாண்மைக் குழுக்களை விலக்கி வைக்க பள்ளி கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
பள்ளி மேலாண்மைக் குழுவை முறையாக செயல்படவிட்டிருந்தால் மகாவிஷ்ணுக்களை தொடக்கத்திலேயே பள்ளி வளாகங்களில் நுழைய விடாமல் தடுத்திருக்க முடியும்.
எனவே பள்ளி மேலாண்மைக் குழுவை பள்ளி நிகழ்வுகளில் இருந்து தடுத்து வைக்க நினைக்கும் முடிவுகள் இருந்தால் அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
நமது அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு வழியாக மக்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்வியாளர்கள் பங்கேற்புடன்
சனநாயகப் பூ பூக்கட்டும்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply