இஇந்தச் சொற்களை உதிர்த்தவர்கள் நகர்ப்புற நக்சல்களோ , சமூக விரோதிகளோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிமான்களான எஸ்எஸ் . சுந்தரும் , செந்தில்குமாரும் அடங்கிய அமர்வு .
தூத்துக்குடி துப்பாக்சூடு ஸ்டெர்லைட் வேதாந்தா என்ற நிறுவனத்தின் இலாப வெறிக்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்பதனை மக்கள் சிவில் உரிமைகள் கழகம்( PUCL) , மக்கள் கண்காணிப்பகம் ( Peoples Watch ) , குடியாட்சி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு ( PUDR) , மக்கள் உரிமைகள் கழகம் ( OCDR) ஆகிய அமைப்புகளின் உண்மை கண்டறியும் குழு அறிக்கைகள் திட்டவட்டமாக சான்றுகளுடன் அம்பலப்படுத்தின.
ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரியான தேவசகாயம் ஸ்டெர்லைட் வேதாந்தாவின் வேண்டுதலுக்கு இணங்க எவ்வாறு குற்றவியல் சட்டத்தின் 144 வது விதி தலைகீழாகப் பயன்படுத்தப்பட்டது . அதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எவ்வாறு உற்ற துணைவர்களாக செயல்பட்டார்கள். அதனையொட்டி எவ்வாறு மிகப்பெரிய காவல்படை தூத்துக்குடி நகரை மையப்படுத்தி குவிக்கப்பட்டது என்பதனை தனது தோய்ந்த மாந த உரிமைப் பார்வையிலும் சட்ட விதகளின் அடிப்படையிலும் அம்பலப்படுத்தினார்.
புகழ்பெற்ற ஊடகங்களான Reuters செய்தி நிறுவனம் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி விசை , துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மீது அது பாய்ந்த விதம் ஆகியவற்றை மையப்படுத்தி அமைதியாகக் கூடிய நிராயுதபாணி மக்கள் மீது கொடூரமாக அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச்சூட்டைச் சான்றுகளுடன் அம்பலப்படுத்தியது.
அதேபோல நீதிமான் அருணா ஜெகதீசன் அறிக்கை துப்பாக்கிச சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டி பரிந்துரை செய்தது.

The caravan இதழின் துப்பாக்கிசூடு அன்றைக்கு காவல்துறை வன்முறைகளை மயிர்க்கூச்செரியும் வகையில் அம்பலப்படுத்தியது.
நீதிமான் சிவஞானம் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்திய – தமிழக சுற்றுச்சூழல் அழிப்பு வரலாற்றில் பேரிடரை நிகழ்த்திய தொடர் குற்றவாளியான வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை நிலையாக மூடும் வகையில் அந்நிறுவனம் இழைத்த கேடுகளை அம்பலப்படுத்தி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பினை வழங்கியது.
இத்தனைச் சான்றுகளுக்கும் கொடுமுடியாக துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான 21 காவல்துறை அதிகாரிகளின் சொத்துக் கணக்கை துப்பாக்கிச்சூடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் ஆராய்து 2 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் ஊழல் கண்காணிப்புத் தடுப்புத் துறைக்கு ஆணைப் பிறப்பித்திருக்கிறது.
ஒன்றிய அரசின் புலனாய்வு முகமையான சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை நிறுவனத்திற்குச் சார்பான அறிக்கை என சாடியிருப்பதோடு அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குற்றஞ்சாட்டி கருத்துரைத்துள்ளது.
வேதாந்தாவிடம் அதிகமான நிதியைப் பெறும் பாசிஸ்டு கட்சியான பாஜக ஆட்சியில் இருக்கும் போதே , நீதித்துறையை அவர்கள் விருப்பங்களுக்கு வளைத்துக் கொண்டிருக்கும் போதே அவர்களின் கடந்த ஆட்சியில் நடந்த அவர்களின் உற்ற நண்பனுக்காக ,ஒரு தொழிலதிபருக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என நேர்மையின் மீது பற்று கொண்டு நீதிமான்கள் ஆணை பிறப்பித்தும் கருத்துக் கூறியும் உள்ளனர்.
ரசினி போன்ற குரிமூர்த்தியின் புரோக்கர் உதிர்த்த பொய்யும் புரட்டும் அம்பலமாகி நாறியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை உறுதியாக எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை உணர்ந்துகொள்ள வேண்டும்.
நீதியின் பக்கம் அவர் நிற்க வேண்டும். நீதிமான் அருணா ஜெகதீச ன் பரிந்துரைத்த துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது இனிமேலாவது காலந்தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து மக்களின் பக்கம் நின்று ஆணையும் கருத்தும் கூறியுள்ள சென்னை உய்நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.எஸ். சுந்தர் மற்றும் செந்தில்குமார் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகள்!
சிபிஐ யை எதிர்த்து வழக்கு நடத்தி வரும் மாந்த உரிமைப் போராளி ஹென்றி திபேன் அவர்களும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியவர்! அவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply