2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடி அயர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி கண்கூடாகத் தெரிகின்றது.
இவ்வேளையில், தோல்வியை ஒப்புக் கொள்வாரா மோடி என்கிற கேள்வியை எழுப்புகின்றவர்கள் யார்?
இந்திய ஜனநாயகத்தை, இந்தியக் குடிஅரசைக் கட்டிக் காத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பும் களச் செயல்பாட்டாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அதிகாரிகள் (senior bureaucrats) ஆகியோர்தான் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர்.
ஏன் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகின்றனர்?

மோடி-அமித்ஷா கும்பல் தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் தன்னாட்சி நிறுவனங்களைச் சீர்குலைத்துவிட்டன. ED, CBI முதலானவற்றை எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகின்றன என்று அப்பட்டமாகத் தெரிகின்றது. எதிர்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டனர். எதிகட்சி வேட்பாளர்களை மிரட்டியோ – ஆசைவார்த்தை காட்டியோ தன்பக்கம் வளைக்கின்றனர். இரண்டு முதலமைச்சர்களைத் தேர்தலுக்காகவே கைதுசெய்தனர்.
இவற்றையெல்லாம் கடந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தைத் தன்னிஷ்டம்போல ஆட்டுவிக்கின்றனர் என்று அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிகின்றது.
இந்திய வரலாற்றிலேயே, தேர்தல் ஆணையம், இதுவரை முடிந்த நான்கு கட்ட வாக்காளர் எண்ணிக்கையையும், வாக்குப் பதிவு எண்ணிக்கையையும் முழுமையாக, முறைப்பட வெளியிடவில்லை.
முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் வெளியிட்ட வாக்குப் பதிவு விவரம், 11 நாட்கள் கழித்து வெளியிடப்பட்ட, சரிபார்க்கப்பட்ட வாக்குப் பதிவு விவரத்துடன் 5 அல்லது 6 சதவிகிதம் மாறுபாடுகின்றது. எந்த விளக்கமுமில்லாமல், 11 நாட்கள் கழித்து, சுமார் ஒரு கோடி வாக்குப் பதிவை கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்று சொல்வது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லையா?

இதுபற்றி கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே அவர்களுக்கு, உரிய விளக்கம் கொடுக்காமல், அவநம்பிக்கையை விதைக்கின்றீர்கள் என்று ECI சாடுகின்றது.
எந்தத் தேர்தல் விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் கணக்கில்கொள்ளாமல், எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் தானடித்த மூப்பாக வெறுப்புப் பேச்சுகளையும் பொய்களையும் அவதூறுகளையும் மோடி-அமித்ஷா பேசிவருகின்றனர்.

~தமிழ் காமராசன்.
Leave a Reply