நீட் , தேசியத் தேர்வு முகமைத் தொடர்பாக அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் அதன் நம்பகத்தன்மையையும் புனித பிம்பத்தையும் கட்டுடைத்து வருகிறது.
தேசிய தேர்வு முகமை ஒன்றிய அரசின் நாடாளுமன்ற கண்காணிப்பில் இருந்து விலகி இருக்கும் வகையில் அது சட்டங்கள் இல்லாத ஒரு தனியார் கூட்டுறவு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டது முதல் வழக்கமாக இதே போன்று தன்னாட்சியுடன் இயங்கும் நிறுவனங்களைப் போன்று வெளிப்படையாக விதிமுறைகளை மக்கள் பார்வையில் இருந்து மறைத்து வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளைக் குலைக்கும் வகையில் தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகள் மர்மங்கள் நிறைந்த இருள் உலகம் போன்றதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை The Scroll இணைய செய்தி ஊடகம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல 2019 இல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறட்ட முறைகேடுகள் தொடர்பான தகவல்களைத் தேசியத் தேர்வு முகமை தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி காவல்துறைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இன்னும் குறிப்பாகச் சொன்னால் நீட் முறைகேடுகளை மூடி மறைக்க கடும் முயற்சி செய்து வருகிறது.
ஆறு இல்லாத ஒரு தேர்வர் இந்தியாவின் வெவ்வேறு மூன்று தேர்வு மையங்களில் தேர்வெழுதி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கு விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தேசியத் தேர்வு முகமை கலைக்கப்படுவதற்கும் நீட் தேர்வு நீக்கப்பட வேண்டியதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இப்போது தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் தரக்கோரிய கோரிக்கைகளை சனநாயக ஆற்றல்கள் வலுவாக எழுப்ப வேண்டிய காலம் என்பைதப் புரிந்து கடமை ஆற்ற வேண்டும்.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply