ஒரு தலைமுறை பின்தங்கிய சமூகப் பொருளியல் சூழலில் பிறந்து கல்வி கற்று ஆசிரியாராக உயர்ந்து செல்வ வளம் பெற்ற பகுதியினராக மாறியிருக்கின்றனர். அவர்களுக்கு சமத்துவம் , சமநீதி என்ற கருத்துகள் கசப்பானதாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
கல்வி உரிமை , சமத்துவ உரிமை , பொது உரிமை ஆகியவற்றுக்காக நடந்த போராட்டங்கள் அறவே தெரியாத குருட்டுக் கூட்டமாகவும் வாட்சப் வதந்திகளை வாந்தி எடுக்கும் பிரிவினராகவும் மாறியிருக்கின்றனர். நாள்தோறும் பிற்போக்குக் கருத்துகள் பல திசைகளில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதனோடு ஊடாடி உண்மையைக் காணவெல்லாம் பலருக்கு நேரமோ ,பொறுமையோ , அக்கறையோ இருப்பதில்லை. இத்தகைய பிரிவினரிடம் இருந்து தான் சமத்துவமும் , சம நீதியும் கிடைக்கப் பெற வேண்டியவர்களுக்கு எதிராகப் போதனைகள் வழங்கப்படுகின்றன.
நீதிபதி சந்துருவின் அறிக்கையைக் காணும் பொழுது வகுப்புவாத ஆற்றல்களின் கருத்துகள் கல்வித்துறை , ஆசிரியர் சமூகம் , மாணவர்கள் ஆகியோரிடம் ஊடுருவியிருப்பதைக் காண முடிகிறது.
வேறு வழிநில்லை இது ஒரு சித்தாந்தப் போராட்டம். இந்தச் சித்தாந்தப் போராட்டத்தைப் பாடத்திட்டங்களில் சமநீதி , சமத்துவக் கருத்துகளைச் சேர்ப்பதன் மூலம் ஓரளவு செம்மை செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஒரு நூற்றாண்டு காலம் சமூகநீதி , சமநீதிக்காக நடந்த போராட்ட வரலாறை The Caste pride தாங்கி வெளிவந்துள்ளது. ஆளுநர் உள்ளிட்ட சநாதன கூப்பாடு போடுகிறவர்களுக்குத் தக்க பதிலடியாக அதனுடைய வரலாற்றுச் செய்திகள் அமைந்துள்ளன.
இந்த நூலின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்திட்டத்தில் சேர்க்க பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும்.
கீழிருந்தும் மேலிருந்தும் ஒரு சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு இந்நூல் பெருமளவு உதவி செய்யும்.வாட்சாப் வதந்திகளுக்கு முடிவுகட்டும்.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply