முடை நாற்றமடிக்கும் நீட் தேர்வு மோசடிகள்!

ஒன்றிய அரசே! மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து சமூக நீதியைப் புதைக்கும் ”நவீன வர்ணாசிரம நீ்ட் தேர்வு” முறையை இரத்து செய்! என வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது இன்று 28.06.2024, வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.மலரவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமை தாங்கினார்.

நீட் தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முறைகேடான நடவடிக்கையினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறி்த்தும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, இடைத்தரகர்களின் வினாத்தாள் விற்பனை, முதுநைிலை நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளினால் இரத்து செய்யப்பட்டது, நீட் தேர்வு மையங்களில் ஏற்பட்ட முறைகேடுகள், ஒன்றிய அரசின் பாராமுகம், நீட் தேர்வினால் ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்வி கனவு கானல் நீரானது குறித்தும், மாணவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவது குறித்தும்,

தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட வரைவிற்பு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து நீட் தேர்வு முறையினை இரத்து செய்திட வலியுறுத்தியும், கல்வியை மாநில அரசுகளி்ன் அதிகார வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்ட்டது, மேலும், மேற்படி செய்திகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட அமைப்புகள்/கட்சிகள்/இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அனைத்து தோழமை அமைப்புகளின் சார்பில் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

உரையாற்றியவர்கள்:

தோழர்.கு.ராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர்.இரவிக்குமார், பொது செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
தோழர்.வெண்மணி, தலைவர், திராவிடத் தமிழர் கட்சி
தோழர்.இளவேனில், பொதுச் செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி
தோழர்.காசு.நாகராசன், மாநில அமைப்பு செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை
தோழர்.கனகராஜ், மாவட்ட செயற்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
தோழர்.மௌ.குணசேகர், மாவட்ட துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர். அப்துல் காதர், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)
தோழர்.நிர்மல் குமார், மாநகர தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்,
தோழர்.சேகர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
தோழர்.நேருதாஸ், தலைவர், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்
தோழர்.பெரோஷ் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலை
தோழர்.சுர்ஜித், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார்
தோழர்.மகேஷ், மக்கள் அதிகாரம்
தோழர்.பார்த்திபன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
தோழர்.ஜீவா, மே 17 இயக்கம்
தோழர்.இராஜன், மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம்
தோழர்.தங்கராஜ், மாநகர் மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தோழர்.இரகுபதி, தலைவர் திராவிட மக்கள் இயக்கம்
பேரா.காமராஜ், ஒருங்கிணைப்பாளர், வெள்ளியங்கரி மலை பாதுகாப்பு இயக்கம்.
தோழர்.லூயிஸ், புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கம், இந்தியா
தோழர்.ஜோதிக்குமார், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்
தோழர்.அசோகன், தமிழ் தேச மக்கள் முன்னணி
தோழர்.சிராஜுதின், இந்திய தேசிய காங்கிரஸ்(மனித உரிமைப் பிரிவு)

புரட்சிகர இளைஞர் முன்னணி
கோவை -7502581294

Malaravan Arthur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *