ஹபீபி …புரிந்துணர்வின் திரையாக்கம் !!

தமிழ் சமூகபரப்பில் மத ரீதியாக
இன்னொரு மார்க்கத்தை தழுவிய தமிழர்கள் என்பதாலேயே அவர்களின் வாழ்வியல் ஏதோ ஒருவகையில் அன்னியப்பட்டு போனதை மறுக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். அதுவும்
இந்த BJP ஆதிக்கத்திற்கு பிறகு எல்லா மொழிவழி தேசிய இன மக்களுக்கும் இதே நிலைதான் …
இதனால் அவர்கள் கதவு தட்டும் தூரத்தில்
அல்லது திறந்தே இருந்து போதும்
எட்டி கூட பார்க்காத தலைமுறை உருவாக்கப்பட்டு விட்டதால் அங்கு உண்மையில் உள்ளபடி என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலை
அதிலும் 90களுக்கு பிறகு முழு அரசியல் பலி ஆடுகளாக மாற்றிய நிலமையால் அது இன்னும் இறுக்கமானது. சக ரத்த உறவுதான் என்ற போதும் இடைவெளி அதிகரித்தது அவர்களுக்குள்ளும் வெறுமை தொற்றி கொள்ள ஒதுங்கி புழுங்கி வாழ்நிலையே சகஜமானது.

அதுவும் திரைப்படங்கள் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்கள் அவர்களை பாவிகளாக்கி பழிதீர்த்தது குல்லா மனிதர்களை தீவிரவாதியாக சித்தரித்து
பார்ப்பனிய அரசியலுக்கு வலு சேர்த்தது.
விளைவு அவர்கள் எதார்த்த உளவியல் போக்கு என்னவென்றே தெரியாத நிலையால் மேலும் மேலும் வாழ்வு முறை சிக்கலுக்கு ஆனது

பருத்திவீரன் எடுக்கத் தெரிந்த பிரபல இயக்குனராக அறியப்பட்ட அமீர் கூட தமிழ் இஸ்லாமியர் வாழ்வு முறைகுறித்த படைப்பிற்கு ஏனோ முனைப்பு காட்டவில்லை.

இப்படியான சுதந்திர கால இந்தியாவிற்கு பிறகு எதுவும் இல்லை மலையாள சினிமாக்கள் தெளிவாகவே இருந்தன. அந்த பணியை செவ்வனே செய்தன தமிழில்தான் அந்த சிக்கல் தொடர்ந்தது அந்த பெரும் இடைவெளியை தோழர் இயக்குனர் மீராகதிரவன் ”ஹபீபி’‘ மூலம் தனது வரலாற்று கடமையை நிகழ்த்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் பெரும்பாலும் மதசண்டை நிகழாத தமிழ்நாட்டில் இஸ்லாமியர் வாழ்வு முறையை அவர்களின் எதார்த்த வாழ்வை படம் பிடிக்க ஏன் இவ்வளவு வருட தயக்கம்
என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை…
படம் முழுக்க வாழ்வின் எதார்த்தம் உறவுகளின் முரண், இணக்கம் அன்பு, பொருளாதார தேடலின் வலி என பாத்திரங்கள் அத்தனையும் பேசி மிக இயல்பாக நகர்கிறது கதையோட்டம்.

அதிலும் யூசுப் உண்மையில் ”கஸ்தூரி ராஜா’‘ என்றே நினைவே எழவில்லை பிறகுதான் தெரிந்தது உருக்கமான நடிப்பு.
அவரின் தம்பி மனைவியாக வரும் பாத்திரம் மெய் சிலிர்க்கிறது சண்டை செய்வதாக இருக்கட்டும் நகையை அள்ளி வந்து அபுதாகிரிடம் கொடுத்து வேதனை காலத்தில் உடன் இருக்கும் உணர்வாக இருக்கட்டும் அத்தனையும் ”அருமை”.

அழகி படத்திற்கு பிறகு இளமை கால காதலை அதிலும் இஸ்லாமிய வாழ்வுமுறையில் இவ்வளவு கவிதையாக அபுதாகிரின் காதல் நிலோபரின் நிலாமுகம்
அவ்வளவு அழகு அதிலும் தன் காதலி சிக்கிவிடக்கூடாது என்பதற்காக திருடத்தான் வந்தேன் என ஆயிரம் தாங்காது என கூறி ரூ 300 வரை அடிவாங்குவது கண்ணீர் கசியத் தொடங்கியது அதேபோல் வெளிநாடு சென்று வந்தால்தான் வாழ்க்கை என்றாகி போன போக்கிடம் இல்லற தாம்பத்ய தியாகங்கள் பிறகுதான் பொருளாதாரம் என்பது தனது அண்ணன் படுகுழிக்கு போனபோதுகூட வரமுடியாதநிலை என்பது
துயரங்களின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இளமை கடந்த சற்று நடு வயதின் துவக்ததில் இருக்கும் இளைஞனுக்கு வரன் என்பது எவ்வளவு பெரிய குதிரை கொம்பு என்பதையும் சொல்லி விதி விளக்காய் கிடைத்து அதுவும் தவிறி போனால் அந்து வெறுமை கொடூரமானது
அதை வெளிபடுத்தியதில் அபுதாகிர் நடித்த இளைஞனி நடிப்பு அபாரம்!!

எல்லாம் மனிதர்களுமே சூழலின் சுழற்சியில் நாயகளாக வில்லனாக நாயாகியாக வில்லியாக உருமாறுதல் என்பதும் முரண்கலந்த எதார்த்தம் தான் அது இந்த திரைவெளி நெடுகிலும் வெளிப்படுகிறது கிட்டதட்ட ஈரானிய சினிமாவின் சாயல் பிடிபடுகிறது.

இரண்டாவதாக அமைய விருந்த நாயகி சொல்லும் வசனம் கூர்மையானது அவரவர் தேவைக்கு அல்லது இயலாமை கருதி காக்கும் மௌனம் மோசமானது என்பதை இந்த திரைப்படத்தின் மொத்த மைய அச்சாக மார்டின் லூதர் கிங்கின் வாசங்கள்: “இறுதியில் நாங்கள் நினைவில் வைத்திருப்பது எதிரிகளின்
வார்த்தைகளை அல்ல நண்பர்களின் மௌனத்தை !!

இந்த வசனம்தான் நிகழ்கால இந்திய சமூகத்தின் முகமாகவும்
இருக்கிறது இன்று இஸ்லாமியர்களை பலி கடா ஆக்குவதை அதை விட பார்ப்பனியம் பழிதீர்ப்பதை கண்டும் காணாதது போல் நகரும் நட்புகள் வட்டாரம் மிக மோசமானது என்றே நான் அதனை அரசியலாகவே அசல் தன்மையோடு அதனை உணர்ந்து கொண்டேன்.

இப்படைப்பில் எந்த ஒரு பிரச்சார நெடியும் இன்றி இந்து இஸ்லாமிய ஒற்றுமை என்பது இரத்தமும் சதையுமாக பின்னப்பட்டுள்ளது கதையின் போக்கிலேயே இருப்பது கூடுதல் சிறப்பு கடைசியில் யூசுப் நண்பனுக்கு மண்ணள்ளி போடும் போது இதயம் கனக்கிறது !!

இப்படியான பல புரிதல்களை ”My Dear அதாவது ஹபீபி” அன்புத் தோழர் மீரா கதிரவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தமிழி கல்வெட்டு.


இதனை தொடர்ந்து முன்னெடுக்கும் பொறுப்பை கதிரவன் திசைவழி காட்டி இருக்கிறார் அதனை புரிந்து கொண்டு நிறைய படைப்பாளிகள் தமிழ் சினிமாவை அலங்கரிக்க வேண்டும், நினைவு தெளிவாக ஆற்றுபடுத்தவும் வேண்டும்.
தமிழ் சினிமாவை பிறை நிலவு முற்றத்திற்கு அழைத்துச் சென்ற கண்ணீர் ஒழுக தேம்பச் செய்த கலகக்கார இயக்குனருக்கு தோழருக்கு நன்றி …


தவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *