ஒரு பெருமைமிகு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது.

0 min read

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாசிச பாஜகவின் கொள்கைகளுக்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலவில்லை எனினும் ஒரு பெருமைமிகு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிருக்கிறது.

பாஜகவின் வெறித்தனமான மக்கள் பகை கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பைத் தந்துள்ளனர்.

கடுமையான வெறுப்புப் பரப்புரை , ஒன்றிய அரசின் முகமை அமைப்புகளை வைத்து எநிர்க்கட்சியினருக்கு மிரட்டல் , தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவன அமைப்புகளில் உள்ள பிற்போக்காளர்களின் கூட்டணி , அதானி உள்ளிட்ட கூட.டுக் களவாணி முதலாளிகளின் பொருளியல் பலம் ,ஊடகங்களின் தெளிவான பாஜக சார்புத் தன்மை இவற்றை எல்லாம் மீறி இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு நெருக்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இன்னும் சில மாநிலங்களில் கூட்டணி அணிசேர்க்கைகள் , விட்டுக் கொடுக்கும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றில் கவனம் குவித்திருந்தால் பெரும்பான்மைக்கான வெற்றிவாய்ப்பை இந்தியா கூட்டணி ஒருவேளை பெற்றிருக்கலாம் .

இந்தத் தேர்தலின் தனிச் சிறப்பாக பாஜகவின் பாசிச கொள்கைகளுக்கு எதிரான கொள்கை அறிவிப்பாக தமிழ்நாட்டின் சமூகநீதி , மாநில உரிமை மரபுகள் நாடு முழுக்க உரையாடலாக மாறியிருப்பதும் பாசிச பாஜகவை எதிர்த்து சனநாயக அமைப்புகள் ஓரணியில் அணிதிரள வேண்டிய உத்தி ஆகியவை நாடு தழுவியதாக மாற வேண்டிய தேவையை தமிழ்நாடு மாதிரி முன்மொழிந்திருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாடு பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை மேற்கொண்டிருந்தாலும் அவை நாடு தழுவியதாக மாறவில்லை.

அத்தகைய செயல்திட்டமும் வேலைமுறையும் தமிழ்நாட்டில் அமைந்ததாலேயே தமிழ்நாடு தனித்தன்மையுடன் திகழ்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் எல்லா அலைக் காலத்திலும் தீவிர வெறுப்புக்கு இடந்தரமாட்டார்கள் என்பதை மறுபடியும் மெய்பித்துள்ளார்கள்.

பாஜக பல வேலைகளைச் செய்து ஆட்சியில் அமர்ந்தாலும் அதன் இயல்பான போக்கில் மக்கள் பகைக் கொள்கைகளை எளிதாக நடைமுறைப்படுத்த முடியாது.

பாசிச சக்திகளின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஒற்றுமையும் தொடர் போராட்டமும் அவர்களை அதிகாரத்தில் இருந்து நிலையாக அகற்றும் வரை தொடர வேண்டும்.

பாசிச சக்திகள் நிலையாக வெல்லப்போவதில்லை.! இறுதி வெற்றி மக்களுக்கே !

எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

You May Also Like

+ There are no comments

Add yours