பள்ளர் ஜாதி வெறி சக்கிலியர் படுகொலை

ஆணவ படுகொலைகளை தடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு சட்டம் இயற்ற கோரி குறிப்பாக தென்மாவட்டங்களில் பள்ளர்கள் தொடர் படுகொலைகளை கண்டித்து அம்பேத்கர் பெரியார் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் இவ்வேளையில் பள்ளர் பெண் னை காதலித்ததற்காக சக்கிலிய இளைஞரை தலை துண்டித்து கொலை செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை கோவிலாங்குளத்தில் பள்ளர்கள் 200 குடும்பங்களும் சக்கிலியர்கள் 10 குடும்பங்களும்
பார்ப்பன செட்டப்பின்படி கிழக்கு பகுதியில் ஆதிக்க ஜாதிகளுக்கு இவ்விரு ஜாதிகளின் சுவாச காற்று கூட போகாதபடி காலணி பகுதியில்தான் குடி அமர்த்தி வைக்கபட்டுள்ளார்கள்.

1995 களுக்கு முன்பு பட்டியலின மக்கள் யார் பாதிக்கபட்டாலும் அம்பேத்கர் சிலை ஜாதி வெறியர்களால் சிதைக்கபட்டாலும் தென்மாவட்டங்களே இயங்க முடியாத அளவிற்கு வீரீயமாக செயல்பட்ட அம்மக்களை இன்று பெரும்பாலும் பள்ளர் சமூக தலைவர்கள் பார்ப்பன பணிய கும்பல்களின் அடிமையாகி போன காரணத்தாலும் சமீப காலமாக தலைவர்கள்(கிருஷ்ணசாமி ஜாண்பான்டியன்) ஜாதி பெருமிதம் பேசி அந்த சமூகத்தினரின் பெரும்பாலானவர்களிடம் அவர்களுக்கு மட்டுமே பெருமிதம் வரலாறு இருப்பது போல் நம்ப வைத்து பார்ப்பன கட்டமைப்பை பாதுகாக்கும் அடியாள்களாக மாற்றி வைத்து விட்டார்கள்.

அருப்புகோட்டை கோவிலாங்குளத்தில் அழகேந்திரன் என்ற இளைஞன் ருத்ரபிரியா என்ற பள்ளர் ஜாதி பெண் னை காதலித்து வந்துள்ளார் இருவரும் பொது வெளியில் பேசி பழகியதை அறிந்து கொண்ட ருத்ரபிரியாவின் தாய்மாமா ஜாதிவெறியன் பிரபாகரன் தனது பெரியம்மா ஊரான கள்ளிகுடியில் இருந்த டிரைவரான அழகேந்திரனே வாகனம் ஓட்ட வேண்டும் என சொல்லி 24 6 2024 அன்று அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் 26 6 2024 இன்று நிர்வாணபடுத்தபட்டு தலை துண்டித்த நிலையில் அழகேந்திரன் கள்ளிகுடி கண்மாய் அருகில் மிக கொடூரமாக படுகொலை செய்யபட்டுள்ளார் ஜாதிவெறியன் பிரபாகரன் திருட்டு வழிபறி கூட்டுபாலியல் (Raped) குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களில் ஜாதிவெறியர்களால் பள்ளர்கள் படுகொலை செய்யப்படுகிற போது எத்தனை சக்கிலிய இளைஞர்கள் எதிர்குரல் எழுப்பி போராட்ட களம் அமைத்து சமீபத்தில் படுகொலை ஆன தீபக்ராஜா வின் வீரவணக்க நிகழ்விலும் பங்கெடுத்து ஆதிக்கத்திற்கு பார்ப்பனியத்திற்கு எதிரான குரலாக திரள்கிற இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆண்ட ஜாதி பெருமைக்குள் சிக்கி உதிரிகளாக இன்று தென்மாவட்டங்களில் அந்த சமூகத்தை மாற்றிய தலைவர்களும் இது போன்ற கொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

ஜாதி வெறி என்பது பட்டியலின மக்களிடம் இருந்தாலும் கண்டிப்போம் வீழ்த்துவோம்.

இக்கொடூர கொலையில் ஈடுபட்ட பிரபாகரன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைபிடித்த வேண்டும்.

மா.முத்துக்குமார்,
செய்திதொடர்பாளர் தமிழ்புலிகள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *