ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்!

மதச்சார்பற்ற ,சனநாயக மரபுகளைத் தாங்கிப் பிடித்தவரும் அரசியல் சட்ட வல்லுநருமான ஏ.ஜி . நூரனி தனது 94 ஆம் வயதில் காலமானார்.
தேர்ந்த தரவுகளோடும் நுட்பமான ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் வெளிவந்த அவருடைய ஆழமான அரசியல் கட்டுரைகள் இனி வெளி வராது.

காசுமீர் குறித்து உறுதியான சான்றுகளுடன் அவர் எழுதிய
‘The constitutional history of Article 370’ நூலும் , சங்பரிவாரங்களின் பாசிச அரசியல் குறித்து ஆர்எஸ்எஸ் ஓர் அச்சுறுத்தல் நூலும் , காந்தியார் படுகொலையும் சவார்க்கரும் எனும் நூலும் ஏ.ஜி நூரனி இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பற்ற , சனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டவை.

ஒரு கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் நாடு துயரும் சூழலில் ஏ.ஜி . நூரனி போன்ற மெய்யான வரலாற்றறிஞர்கள் நம்மை விட்டுச் செல்வது பெரும் துயரம்.

ஏ.ஜி. நூரனியின் எழுத்துகள் நிலைத்து வாழும்! அன்னாருக்கு புகழ் வணக்கம்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *