“வெறுப்பிற்கு எதிராக அன்பைப் பொழியுங்கள்” என்ற உமர்காலித்தின் அதிமானுடப் பண்பைத் தாங்கி வந்திருக்கும் ஓர் அரசியல் ஆவணப்படம்.
ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து நாட்டின் அறிவுத்துறையினரையும் பல்கலைக்கழகங்களையும் அமைதியாக்கிவிட்டு தனது இந்து பார்ப்பனிய பாசிச அரசியல் நிகழ்ச்சிநிரலை செயலுக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது.
இந்தத் தாக்குதலுக்கு ஜெஎன்யூவில் இருந்து துடிப்புமிக்க ஆவேசமான சனநாயகக் குரல்கள் சமூக சமத்துவம் மதச்சார்பின்மை , சனநாயகம் , கூட்டாட்சி எனும் இலட்சிய விழுமியங்களைத் தாங்கிய இளம் மாணவர்களிம் இருந்து வந்தது.
அப்படி இயல்பாக வெளிவந்தது தான் உமர்காலித்தின் குரல்.
அவரது சிந்தனையும் முசுலீம் அடையாளமும் சங்பரிவாரங்களின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது. அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட நாளில் அதனை எதிர்த்து ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இருந்து மாணவர்கள் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து உமரின் மீது பாஜக சங்பரிவாரங்களின் கவனம் கூர்மையடைகிறது.
பொய் முத்திரைகள் , பொய்ப் புரளிகள் என எந்நேரமும் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்களும் அதன் இணைய கைக்கூலிப் படையும் நடத்தி வந்த தாக்குதல் உமரை தேச பகைவனாக மாற்றி சிறையில் தள்ளியது.
நாடு முழுக்க மதத்தின் அடிப்படையில் குடியுரிமையைப் பறிக்கும் முசுலீம் வெறுப்பு குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மிக்க கடினமான காலத்தில் நாடெங்கிலும் பாசிச சட்டத் திருத்தத்தை எதிர்த்து உமர் மக்களின் குரலாய் ஒலித்தார்.
அரசு , காவல் , நீதி அமைப்பு என எல்லாமும் பாசிசமயமான ஒரு காலகட்டத்தில் உமர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அவருடைய உரையில் எந்தக் குற்றமும் இல்லை. இது த நாட்டின. சட்டங்கள் எவையெல்லாம் சனநாயகம் என ஏற்றுக் கொண்டுள்ளதோ அதைத் தான் அவர் பேசினார். உண்மையைப் பேசிய குற்றத்திற்காக , நீதிக்காக தனது கைகளை உயர்த்தியதற்கு உமர் அநீதியான முறையிலே சினைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
உண்மையையும் , நீதியையும் , சமத்துவத்தையும் விரும்பும் மக்கள் உமருக்காக தங்கள் குரலை அதிகாரத்தை எதிர்த்து எழுப்ப முன்வர வேண்டும் என்ற நோக்கத்தில் லலித் வாச்சாறியின் ஆவணப்படம் வந்திருக்கிறது.
உமரின் கட்டுக் குலையாத உறுதியையும் நீதிக்கான அவரது குரலையும் உள்ளன்போடு வெளிப்படுத்திய அவருடைய உற்ற தோழர்கள் , நண்பர்கள் மட்டுமல்ல ஆவணப்படத் திரை இயக்குநருக்கும் பாராட்டுகள்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply