*நாட்டின் நலன் விரும்பும் அனைவரின் கவனத்துக்கு..
* 🛑 எப்படியாவது மூன்றாவது முறை பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற பதவி வெறி மோடியைப் பிடித்து ஆட்டுகிறது.
🛑 ஆனால் மோடி 10 ஆண்டுகளாக பிரதமராக நீடிப்பதற்கு காரணமே EVM மோசடி தான் என்ற உண்மை நாடு முழுவதும் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. 🛑 மோடியின் பதவி வெறிக்காக நம்முடைய ஓட்டுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற கருத்து ஆழமாக மக்களிடம் பரவி விட்டது.
🛑 முக்கியமாக பாஜக- வின் பலம் என்று கருதப்படும் வட இந்தியாவில் EVM எதிர்ப்பு என்பது கிராமங்கள் வரை பரவி விட்டது.
🛑 RSS பார்ப்பண- குஜராத் கொள்ளை கும்பலின் ஆதிக்கத்தால் வட இந்திய விவசாயிகளும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தங்களது கோபத்தை EVM எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
🛑 வட இந்திய மக்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலை EVM- ல் தேர்தல் நடத்துவதை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அங்கு நடக்கும் தீவிரமான EVM எதிர்ப்பு போராட்டங்கள் உணர்த்துகின்றன.
🛑 எதிர்கட்சிகள் EVM எதிர்ப்பில் தீவிரம் காட்டாவிட்டாலும் மக்கள் EVM எதிர்ப்பில் மிகத் தீவிரமாக உள்ளனர்.
🛑 ராமர் கோவில் திறப்பையெல்லாம் வட மாநில மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மந்திர் அரசியல் அவர்களுக்கு சலித்து புளித்து விட்டது.
🛑 விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற அடிப்படை பிரச்சனைகளே மக்களின் கவலையாக உள்ளன.
🛑 கடந்த டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மூன்று வட மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து EVM எதிர்ப்பு ஹிந்தி பேசும் மாநிலங்கள் முழுவதும் பெரிய விவாதமாக சமூக ஊடகங்களில் மாறியது.
🛑 இம்மூன்று மாநிலங்களிலும் EVM மோசடி மூலமே பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளதாக வட மாநில மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
🛑 ஹிந்தி சமூக ஊடகங்களில் இது பற்றிய கருத்துகள் தீவிரமாக பரவி தற்போது களப் போராட்டங்களாக மாறி விட்டன.
🛑 இரண்டு மாதங்களுக்கும் மேலாக இக்கருத்தே வட மாநில மக்களை ஆட்டிப்படைக்கிறது. பாஜக-RSS என்ன தான் முயன்றாலும் EVM எதிர்ப்புணர்வை பின்னால் தள்ள முடியவில்லை.
🛑 வெவ்வேறு விவாதங்களின் மூலம் மக்களை திசை திருப்பும் வழக்கமான பாசிச தந்திரமும் மக்களிடம் எடுபடவில்லை.
🛑 வட மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும்” EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை மக்களிடம் வலுப்பெற்று வருகிறது.
🛑 EVM மீதும் தேர்தல் ஆணையம் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்”. EVM- ல் தேர்தல் நடந்தால் EVM எந்திரங்களை உடைப்போம்”- என்ற முழக்கம் வட மாநிலங்களில் பரவி வருகிறது.
🛑 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. மக்களின் EVM எதிர்ப்பு போராட்டங்களை கண்டு கொள்ளாமல் EVM- ல் தான் தேர்தல் நடத்துவோம் என்று பாஜக -வின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது இதே பிடிவாதத்தோடு EVM-ல் தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டால் அது மக்களிடையே பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும்.
🛑 மக்கள் விரும்பாத, ஏற்காத EVM எந்திரத்தை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
🛑 EVM வேண்டாம், எந்திர வாக்குப்பதிவில் தங்களது ஓட்டுரிமை திருடப்படுகிறது, தேர்தல் ஆணையம் ஒரு திருடன் என்ற கருத்து பல கோடி மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதை மாற்றுவது மிக கடினம். தேர்தல் நெருங்க நெருங்க இக்கருத்து மேலும் தீவிரமாக மக்களிடம் பரவும்.
🛑 EVM எதிர்ப்பானது ஆளும் வர்க்கத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக நெருக்கடியாக மாறிவிட்டது. அடுத்து வரும் சில வாரங்கள் இந்திய அரசியலில் மிக முக்கியம் வாய்ந்தவை. நாட்டின் நலன் விரும்பும் அனைவரும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனியுங்கள்…
-வழக்கறிஞர் ரா.காஸ்ட்ரோ, இந்திய உச்ச நீதிமன்றம், புது தில்லி.
+ There are no comments
Add yours