வேட்டையன்_ரஜினி
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ்காரர்கள் வேட்டைக்காரர்கள் அல்ல நல்லவற்றை உற்பத்தி செய்ய கூடியவர்கள் என ரஜினிகாந்த் பேச கூடிய இறுதி வசனமும் மனித உரிமை பாதுகாவலராக வரும் அமிதாப்பச்சன் கைதட்டலுடன் படத்தின் நிறைவு காட்சி அமைந்திருக்கிறது சிறப்பு
பிரிட்டிசார் வருவதற்கு முன்பு எல்லோருக்கும் பொதுவான கல்வி சட்டம் இல்லை என்பதை தொடக்கத்தில் சொல்வதன் மூலம் இன்றைய ஏற்றதாழ்வு சிக்கல்களுக்கு பிரிட்டிசார் வருவதற்கு முன்பிருந்த மனுதர்ம சட்டம் காரணம் என்றும் மெக்காலே பங்களிப்பின் ஜனநாயக மாற்றத்தையும் தொடக்கத்திலேயே பதிவு செய்கிறார்
ரவுடிகளை என்கவுண்டர் (encounter) செய்யும் போலீஸ் SP ஆக தொடக்க நிலையில் வரும் ரஜினி கண்னியகுமரி கடைகோடி அரசு பள்ளியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதை அந்த பள்ளி ஆசிரியர் துசாரா மூலமாக அறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுப்பது துனிந்த ஆசிரியர் மீதான அதியன் (ரஜினி) க்கு மிகுந்த அன்பு குடும்ப நட்பு தொடர ஆசிரியர் துசாரா promotion உடன் சென்னைக்கு பணிமாற்றம் ஆக துசாரா படுகொலை செய்யபடுவதை செய்தியின் மூலம் அறிந்து கண்னியகுமரி கஞ்சா கும்பலால் படுகொலை செய்யபட்டு இருப்பாரோ என பார்வையாளர்களை போல ரஜினியும் என்னி இந்த வழக்கை விசாரிக்க முனைய உயர் அதிகாரிகள் கிசோர் ரித்திகாசிங் தலைமையில் வேறு Spl குழு நியமிக்கப்பட விசாரனையை தொடர்ந்து கண்கானிக்கும் ரஜினிகாந்த் கிசோர் குழு விசாரனையில் (slum) சேரி இளைஞன் கைது செய்யப்படுகிறான் அவன் மருத்துவ பரிசோதனையின் போது தப்பிக்க
இந்த வழக்கில் அரசியல் அழுத்தம் மக்கள் கோபம் அரசுக்கு நற்பெயர் வாங்க உடனடி நீதி என்ற பெயரில் என்கவுண்டர் செய்ய ரஜினி அழைக்கபடுகிறார் ரஜினிக்கு உளவாளியாக தொடக்கத்தில் இருந்து ரஜினியுடன் வரும் பகத்பாசில் மூலம் குற்றவாளி இருப்பிடம் கண்டுபிடித்து ரஜினி என்கவுண்டர் செய்ய
என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆர்வலராக உள்ள அமிதாப்பச்சன் அப்பாவி சேரி இளைஞன் முதல் பட்டதாரி இன்ஜினியர் படுகொலை செய்யபட்டுள்ளான் என்பதை ஊடகங்களுக்கு விளக்க ( சுவாதி படுகொலையும் ஏனோ ராம்குமாரும் நினைவில் வருகிறான் )
குற்றவுணர்வுடன் ரஜினி அமிதாப் பை சந்திக்க ஆதாரத்துடன் அமிதாப் விளக்க தான் செய்தது படுகொலை என்பதை உணர்ந்து உண்மையை விசாரிக்க தொடங்கி கார்ப்பரேட் தனியார் நிறுவனம் ஆண்லைன் கல்வி, கோச்சிங் செண்டர் நடத்தி கொள்ளையடிப்பதை எதிர்த்து போராடியதற்காய் சேரி இளைஞன் தன் தங்கையின் மருத்துவ கனவிற்கு பணம் கட்டி ஏமாற ஆசிரியர் துசாரா போராடி வெளி உலகிற்கு கொண்டு வர முயற்சித்ததால் படுகொலை செய்யபடுகிறார் என்பதையும் அப்பாவி சேரி இளைஞனை சிக்க வைக்க
விசாரனை அதிகாரி கிசோர் துனை இருந்ததையும் ரஜினி பகத்பாசில் துனையுடன் கண்டுபிடிக்க
ரஜினி பகத்பாசில் ரித்திகாசிங் ரஜினியின் மனைவி மஞ்சுவாரியர் கோச்சிங் செண்டர் உரிமையாளர் ராணா கொலை செய்ய முயற்சிக்க மஞ்சுவாரியார் தனிமையில் இருக்க வழக்கமாக கதாநாயகன் அதாவது ஆண் வந்து பாதுகாப்பது போல் இல்லாமல் துப்பாக்கியால் வில்லன்களை பதம்பார்க்க மஞ்சு வுக்கு பாடலும் அதுவும் அழுத்தமான காட்சி அவர்க்கு
ரஜினியை இறுதியில் போலீஸ்காரர்கள் வேட்டைக்காரர்கள் அல்ல என பேச வைத்து
தனியார் கோச்சிங் செண்டர்களின் கொள்ளைகள் காவல்துறையின் படுகொலைகள் என்கவுண்டர்களை ஊக்கபடுத்தும் மக்கள் அவசரமான நீதியை எதிர்பார்ப்பது
அரசு நற்பெயர் வாங்க செய்யும் போலி என்கவுண்டர்களை அம்பலபடுத்தியுள்ளது #வேட்டையன்
குப்பத்துகாரன்
பணத்திற்காக குற்றவாளியை தப்பிக்க விடவில்லை நட்புக்காக செய்துள்ளான் இது ஒன்னு போதாது அவன் யாருன்னு சொல்ல
சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ஏழை திருடன் பணக்காரன் நல்லவன் முசுலீம்னா தீவீரவாதி ங்கிற பொது புத்தி மக்களிடம் இருந்து மாறானும் என்கிற வசனங்களை எல்லாம் ரஜினியை பேச வைத்த பத்திரிக்கையாளரும் இயக்குனருமான ஞானவேலை பாராட்டியே ஆக வேண்டும் இப்படிப்பட்ட இயக்குனர்களுடன் இனி வரும் படங்களிலும் ரஜினிகாந்த் பயனிக்க வேண்டும்.
விமர்சனம்
மா.முத்துக்குமார்
செய்திதொடர்பாளர் தமிழ்புலிகள்
+ There are no comments
Add yours