மதத்திற்காகவும் இனத்துக்காகவும் போராடுகிறேன் என்று உளருபவன் பொதுவுடமைவாதியாக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டுமே தெரியும். அதற்கு முன்பாக நடந்த பல போராட்டங்கள் பற்றி எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. உண்மையிலே அறிந்து கொள்வதை விட ஹீரோயிசத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழக இளைஞர்கள் அதை தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை. அதே வேலை இந்த 2009 தமிழர் படுகொலை தமிழக அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் உணர்ச்சி ஊத்தப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக இந்த இளைஞர்களை ஏமாற்றி அரசியல் நடந்து வருகிறது இதை வைத்துக் கொண்டுதான் சீமான் போன்ற வேடதாரிகள் தமிழ் தேசியம் என்று கூறி அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கு காரணமே சிங்கள ராஜபக்சே அரசும் இந்தியாவின் காங்கிரஸ் திமுகவும் தான் என்று சீமான் போன்றவர்கள் அப்பட்டமாக கட்டவிழ்த்துவிட்ட பொய்யை விவரம் அறிந்தவர்களும் நம்பித்திரிந்தனர். இந்த இளைஞர்களை தன் வசப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளத்தான் போலும் என் தலைவன் தேசிய தலைவர் பிரபாகரன் தான் வேறு யாரும் எனக்கு தலைவர் இல்லை என்று கதையடித்து திரிகிறார்.

இதே பொய்யை தான் தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் ஜெகத் கஸ்பரில் இருந்து திருமுருகன் காந்தி வரை பேசித் திரிகின்றனர். அதுமட்டுமல்ல பிரபாகரனுக்கு இவர்கள் கொடுத்துள்ள அடைமொழி மேதகு தேசிய தலைவர் என்பதாகும். என்ன செய்வது திறமையான வியாபாரிகள் சொத்தை கத்திரிக்காயை கூட நல்ல கத்திரிக்காய் என்று விற்பது சந்தையின் இயல்பு தானே!. அப்படி தான் பிரபாகரனை தூக்கிக் கொண்டாடுவதற்கு அவர் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்து விட்டார். இலங்கையில் தன்னுடைய இனத்துக்காக தனி நாடு வேண்டும் என்று ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்து 30 ஆண்டுகள் போரில் ஈடுபட்டிருந்தார். ஒரு தலைவருக்கு தெரியாதா காலத்துக்கு ஏற்ப போராட்ட வழிமுறைகளை மாற்றி மக்களை காக்க வேண்டும் என்பது. அடைந்தால் தமிழீழம் அதுவும் ஆயுத பலத்தால் மட்டுமே அடைவோம் எங்களை விமர்சித்து எந்த எதிர் கருத்துக்களும் வரக்கூடாது அப்படி கூறுபவர்கள் அளித்தொளிக்கப்படுவார்கள் என்று சக போராளி அமைப்புகளை அழித்தொழித்த வரை எப்படி தேசிய தலைவர் என்று நாம் விளிக்க முடியும். அதேவேளை இங்கிருந்து வன்னி காட்டுக்கு சென்று வந்த தலைவர்கள் அங்கு அவர்களசெய்து கொண்டிருந்த ஹீரோயிச சாகசங்களை பார்த்து மயங்கி போய் இந்த போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் மக்களை காக்க வேண்டும் என்பதற்கான அரசியல் ஆலோசனை கூட சொல்லாமல் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை இந்தியாவில் இளைஞர்களிடம் காட்டி அரசியல் செய்ய மட்டுமே பிரபாகரனை தேசியத் தலைவர் என புலகாங்கிதபட்டு அழைக்கும் போது அப்பப்பா நமக்கு காதுகளில் ரத்தமே வலிய ஆரம்பித்து விடுகிறது.

ஈழம் ஈழத்து மக்கள் என்ற அக்கரையை விட இந்த போலி பிம்பத்தை வைத்துக் கொண்டு இங்கே அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும் இது ஒன்று மட்டுமே தமிழகத்திலிருந்து ஈழம் போன அரசியல் கட்சி தலைவர்களுக்கு நோக்கமாக இருந்தது. இதுவரை இங்கிருந்து தலைவர்கள் கூட ஈழத்தமிழர் அழிவு பற்றி பேசுகிறார்களே தவிர 200 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஒரு நாதியற்ற சமூகம் ஒன்று இருக்கிறது அவர்களைப் பற்றி தமிழகத்தின் எந்த தலைவர்களின் கண்களுக்கும் தெரியவில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து நம்முடைய உறவுகள் இலங்கையில் தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தேயிலை ரப்பர் விவசாயம் மிகப்பெரிய பங்கு வகித்தது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் சுமார் 12 லட்சம் பேர் இருந்திருக்கிறார்கள். 1948 இல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த முதல் பொதுத் தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் தொண்டைமானும் ஒருவர். இந்திய தமிழர்களின் ஆதரவுடன் இடதுசாரி கட்சியான லங்கா சமசமாஜகட்சி 55 இடங்களை கைப்பற்றியது. அன்றைய பிரதமர் டி எஸ் சேனா நாயகவால் இதை ஏற்க முடியவில்லை. அதேபோல் நாடாளுமன்றத்தில்=இடதுசாரிகளின் பலம் இலங்கை பூர்வீக தமிழர் கட்சிகளான இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சிக்கும் ஒரு அலர்ஜி. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் செயல்பாடுகள் டி எஸ் சேனநாயக்கவால் சமாளிக்க முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இலங்கையில் இடதுசாரி அரசு அமைப்பது தவிர்க்க இயலாதது என்று ஆகி இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இந்திய தமிழர்களின் வாக்குரிமையை பறிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்தத் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய இலங்கையின் பூர்வீக தமிழர் கட்சியான இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்த்து ஆதரித்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து டி எஸ் சேனா நாயகாவின் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்தனர். அன்றைய தமிழரசு கட்சியின் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் இன்னொரு நாடகமாடினார் இந்த பிரச்சனையை லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு கொண்டு சென்றார். இவர் தான் பின்னாளில் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்டார். அவர்கள் தீர்மானம் குடியுரிமை பறிப்பது மட்டுமல்ல இந்திய வம்சாவளி தமிழர்களை நாடற்றவர்கள் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதே. அதில் வெற்றியும் பெற்றார்கள். ஒரே நாளில் சுமார் 12 லட்சம் தமிழர்களை நாடற்றவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். இந்திய வம்சாவளி தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்கள் என்று கூட அழைக்காமல் நாடற்றவர்கள் என்று (stateless) என்றே தீர்மானம் கொண்டு வந்து அமலாக்கினார்கள். அவர்கள் மீண்டும் சும்மா இருக்கவில்லை எப்படியாவது இந்த மக்களை இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டும் அதற்காக அன்றைய இந்திய பிரதமர் ஜவர்கலால் நேருவை தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நேருவோ அவர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் நாட்டில் குடியேறி இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொடுப்பது உங்கள் வேலை என்று தெளிவாக சொல்லிவிட்டார். திரும்பவும் நேருவை ஏமாற்ற எங்கள் நாட்டில் உள்ள இந்தியர்கள் சிலருக்கு குடியுரிமை வழங்குகிறோம். நாங்கள் குடியுரிமை வழங்கியது போக மீதம் உள்ளவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். அப்போது இவர்கள் உயர் வருவாய் உள்ள ஐயாயிரம் நபர்களுக்கு குடியுரிமை வழங்கி விட்டோம் என்று கூறினார்கள். இதை உறுதிப்படுத்துவதற்கு தொண்டைமானுக்கு குடியுரிமை வழங்கினார்கள் இவர்களின் சூழ்ச்சி புரிந்த நேருவோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. இந்திய தமிழர்கள் தொடர்ந்து நாடற்றவர்கள் என்ற நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தனர். பிறகு 1964 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ லால்பகதூர் சாஸ்திரி இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையும் 3 லட்சம் தமிழருக்கு இலங்கை குடியுரிமையும் தருவது என்றும் ஒப்புக்கொண்ட பின் பல குடும்பங்கள் மலையகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு இந்திய அரசு சூட்டிய பெயர் தான் திருப்பி அனுப்பப்பட்டவர்கள.(Rrepatrriates). இந்திய குடியுரிமை பெற்ற பல குடும்பங்கள் பொருளாதார சிக்கலினால் இங்கு வர இயலாத சூழ்நிலையில் அங்கேயே இன்னும் நாடற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் இதில் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டவர்கள் 9 லட்சத்து 2ஆயிரம் பேர் மீதி 3 லட்சம் பேர்கள் பற்றி எதுவுமே பேசாமல் அப்படியே விட்டு விட்டனர் இலங்கை குடியுரிமை தருவதாக கூறிய மூன்று லட்சம் பேருக்கு 1990 வரையில் குடியுரிமை கொடுக்கப்படாமல் இருந்தது.

தற்போது கொடுத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இன்று வரை மலைகத்தில் வாழும் தமிழர்களின் துயர் துடைக்கப்படவில்லை. மிகக்குறைந்த வருவாய் கடுமையான விடையேற்றம் இதனால் பசியாற சாப்பிட இயலாத குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் கொழும்பு நகரின் கடைவீதிகளில் கூலி வேலை செய்து கடைவீதி வாசல்களிலே படுத்து உறங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களைப் பற்றி பிரபாகரன் ஒருபோதும் பேசியதாக இல்லை ஆனால் பிரபாகரன் கோஸ்டினர் செய்த அராஜகங்களால் மலையகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! இதை ஈழத் தமிழன் மட்டுமல்ல தமிழகத்தில் தமிழ் காக்கும் எந்த தலைவனும் பேசியதில்லை தமிழகத் தலைவர்கள் தங்கள் வியாபாரத்துக்கு சரியான பிம்பமாகபிரபாகரனே போதும் என்று இருந்து விட்டனர். தன்னுடைய நாட்டில் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஒரு சமூகம் இரண்டாம் தர மக்கள் ஆக்கப்பட்ட பின் அது பற்றி சிந்திக்காத ஒரு போராளி தலைவன் எங்கனம் தமிழ் தேசிய தலைவராக முடியும் அது ஒரு போலி பிம்பம் தானே!.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட போது அப்போது அதிபராக இருந்த ஜூனியர் புஷ் வல்லரசு நாடுகளை கூட்டி பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதை இந்தியா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டதுடன் தங்கள் நாடுகளில் பல அமைப்புகளுக்கு தடை விதித்தனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே கொஞ்சம் கொஞ்சமாக புலிகள் மீது பிடியை இறுக்கியதுடன் உலக நாடுகளைப் பயன்படுத்தி 2009இல் புலிகளை முற்றிலுமாக அழித்தொழித்தனர். இவ்வளவு பெரிய ஆயுதப் போர் நடத்திய பிரபாகரனுக்கு அமெரிக்காவின் இந்த தீர்மானம் புரியவில்லையா அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற அரசியல் புரிதல் இல்லையா இந்த லட்சணத்தில் ஆண்டன் பாலசிங்கம் போன்ற அரசியல் ஆலோசகர் வேறு அது மட்டுமா தமிழகத்திலிருந்து வன்னிகாட்டுக்குள் சென்று வந்த பகுத்தறிவு பகலவர்கள் வேறு. ஒருமுறை இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சத்தியநாதன் அல்லது சத்தியேந்திரன் என்ற நபர் பெரியாரைப் பார்க்க வந்திருந்த போது உங்க தலைவர்களுக்கு சிங்கள பொம்பளைங்கள காட்டி தமிழ்நாட்டில் இருந்து கூலி வேலைக்கு போன தமிழர்களின் உரிமையை பறிச்சுப்புட்டான் அடுத்த ஆப்பு உங்களுக்கும் வருமே என்ன பண்ணப் போறீங்கன்னு அய்யா கேட்டார் அதற்கு நாங்கள் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுப்போம் என்று சொன்னபோது ஐயா கேட்டாராம் உன்னை விட உன் எதிரிகிட்ட ஆயுதம் அதிகமாக இருந்தால் நீ என்ன செய்வாய் என்றதும் அந்த நபரால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை யாம். அரசியலோ அரசியல் தந்திரங்களோ எதுவும் தெரியாமல் துப்பாக்கி கொண்டு ஹீரோயிசம் காட்டித்துக் கொண்டு திரிந்ததன் விளைவு எந்த மக்களுக்காக ஆயுதம் எடுத்தார்களோ அவர்களையும் சேர்த்து அழித்து ஒழிக்க காரணமாகிவிட்டது. ‌. எல் டி டி இ அழிவுக்கு இங்கிருந்த அரசியல் கட்சிகள் திமுகவும் காங்கிரசும் தான் காரணம் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கூவ ஆரம்பித்து விட்டார்கள் அங்கே பல நாடுகள் போரில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு மாநில கட்சியான திமுகவை குறை கூறல் எங்கனம். எல் டி டி இ அழிவை எதிர்பார்த்து இலவு காத்த கிளியாக இருந்தவர்கள் அடுத்த நாளே திமுகவின் கலைஞரையும் அவர் குடும்பத்தையும் வசை பாடியது கொஞ்ச நஞ்சமல்ல. இதைப் பயன்படுத்தி திமுகவை அழிக்க மக்கள் மத்தியில் என்ன மாதிரியான பரப்புரை செய்வது என்று தான் இந்திய ஈழ அரசியல் வியாபாரிகள் சிந்தித்தார்கள். அரசியல் கட்சி மட்டுமல்ல தமிழ் தேசியம் பேசும் இயக்கங்களும் அதே தான் செய்தன. ஆர் எஸ் எஸ் இந்திய ஆளும் வர்க்கம் இந்திய உளவுத்துறை ஆகியோர் இந்தப் பொய் பரப்புரையை பார்த்து மௌனமாக ரசித்துக்கொண்டிருந்தது ஏனென்றால் இவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது இந்திய உளவுத்துறை தானே.!. இந்தப் பொய் பரப்புரையை விரைவு படுத்த ஒரு வாடகை வாய் தேடினார்கள்.

இயக்குனர் பாரதிராஜா மூலம் இவர்களுக்கு கிடைத்தவன் தான் சீமான். மா நடராஜன் நெடுமாறன் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசித் திரிந்தான். பிரபாகரனின் ஹீரோயத்தை காட்டி இளைஞர்களை ஈர்க்கச் செய்தான் கூச்சமே இல்லாமல் பொய் சொன்னான். 93 வயது வரை மூத்திர சட்டியை கையில் தூக்கிக்கொண்டு தமிழகமெங்கும் பயணம் செய்த தந்தை பெரியாரை அவர் தான் தமிழர்களுக்கு உழைத்தார் என்பதை ஏற்க மாட்டானாம் பெரியாரும் உழைத்தார் அவ்வளவே என்கிறான். ஆனால் தமிழக மக்களுக்கோ அல்லது தன் நாட்டில் நம்முடைய தொப்புள் கொடி உறவுகளுக்கோ ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பிரபாகரனை மேதகு தேசியத் தலைவர் என்று விளிக்கனுமாம். ஏன் தங்கதுரை குட்டிமணி போன்றோர் உழைக்கவில்லையா. தமிழகத்தின் தந்தை பெரியாரை தூக்கிப் பிடிக்க முடியவில்லை என்றால் இன்னொரு நாட்டை சேர்ந்தவனை நாம் ஏன் தேசியத் தலைவர் என்று கொண்டாட வேண்டும். இதெல்லாம் எவ்வளவு கேளிக் கூத்தான பேச்சு.

ஒரு பக்கம் அடைந்தால் தமிழீழம் இன்னொரு பக்கம் இலங்கை மக்களுக்கான அரசியல் பொருளாதாரம் விடுதலைக்கான ஆயுதமேந்திய போர். இதை நடத்தியது ரோகனை விஜய் வீரா தலைமை யிலான ஜனதவிமுக்தி பெரமுன(மக்கள் விடுதலை முன்னணி). 19 64 துவங்கப்பட்ட இந்த இயக்கம் படிப்படியாக வளர்ந்து 1971 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் கிளர்ச்சியை நடத்தினர் இந்த கிளர்ச்சியை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அரசு இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளின் ராணுவ உதவி பெற்று அந்தக் கிளர்ச்சியை அடக்கினர். இலங்கை பல்கலைக்கழகங்களில் பயின்ற பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் சிங்கள அரசின் ராணுவத்தாலும் இலங்கை வாடகைக்கு எடுத்திருந்த பக்கத்து நாட்டு ராணுவத்தாலும் கொல்லப்பட்டனர். ஜேவிபி தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறை படுத்தப்பட்டனர் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி 1978 ஆம் ஆண்டு ரோகனவும் அவரது சகாக்களும் விடுதலை செய்யப்பட்டனர் குற்றம் சாட்டப்பட்ட ரோகனவே வழக்காடு மன்றத்தில் வழக்காடினார். பிறகு ஜனநாயக பாதைக்கு திரும்புவதாக 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் ரோகனே. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலில் 4.6 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். பிறகு பல போராட்டங்கள் நடத்தி கட்சி தொடர் வளர்ச்சி பெற்றிருந்தது. இந்த நேரத்தில் 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையில் ராணுவத்துக்கு நடந்த சண்டையில் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த கொலையான 13 ராணுவத்தினரை கிளிநொச்சியிலேயே அடக்கம் செய்வது அல்லது அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்த போது அன்றைய அதிபராக இருந்த கிழட்டு நரி ஜெஆர் ஜெயவர்த்தனே அப்படி எதுவும் செய்ய வேண்டாம் கிளிநொச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கொழும்பு எடுத்து வர உத்தரவிட்டதுடன் வரும் வழியெங்கும் இனக் கலவரத்தை ஏற்படுத்த மந்திரி சபை சகாக்களை அனுப்பி வைத்தான்.

அந்த சடலங்கள் கொழும்பு வருவதற்குள் அமைச்சர்களின் வழிகாட்டுதலில் சிங்கள ரவுடிகள் மற்றும் புத்தபிக்குகளின் கொலை வெறியாட்டத்தால் பத்தாயிரம் பேராவது தமிழர்கள் இறந்திருப்பார்கள். தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு ஒன்றுமில்லாதவர்கள் ஆக்கப்பட்டனர் அந்த இரண்டு நாட்களில் இலங்கை முழுவதும் கலவரம் பரவியது. ராணுவத்தினர் சடலங்கள் கொழும்பு வந்தடைவதற்குள் கொழும்பில் தமிழர் குடும்பங்கள் உருக்கு லைக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வெளிக்கடை சிறை அதிகாரி தமிழ் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பிளாக் சாவிகளை சிறையில் இருந்த கொடும குற்றவாளிகள் கையில் கொடுத்து தமிழர்களை கொல்ல தூண்டினார். இதன் மூலம் குட்டிமணி ஜெகன் தங்கதுரை உட்பட 153 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர் 200-க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் புற்றுயிரும் குறையுருமாக மருத்துவமனையை சேர்க்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியது ஜேவிபினர் மற்றும் மனிதாபிமானம் உள்ள சிங்கள பொது மக்களுமே. அப்படியே திரும்பிப் பாருங்கள் குஜராத் கோத்ராவில் ரயிலெரிப்பு கலவரத்தை.எப்படி ஜே ஆர் ஜெயவர்த்தனே செய்தானோ அதே முறைதான் பின்பற்றப்பட்டது. மதவாதிகளும் இனவாதிகளும் மக்களை ஒடுக்க கலவரம் செய்ய ஒருவருடைய அனுபவத்தை ஒருவர் பின்பற்றுகிறார்கள். அதைத்தான் அன்று மோடி செய்தார். சிங்கள ஆளும் கட்சியினர் செய்த இந்த பெரும் கலவரத்தை தூண்டியவர்கள் ஜேவிபி மற்றும் இடதுசாரி கட்சிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு அந்தக் கட்சிகள் தடை செய்யப்பட்டன. யார் தமிழர்களை காப்பாற்ற உதவினார்களோ அவர்கள் கலவரம் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகன விஜய் வீரே ஒரு நாட்டுக்குள் பிரிவினை அனுமதிக்கப்படாது அதே வேலை சிங்களர்களுக்கு என்ன சலுகையோ அந்த சலுகைகளும் உரிமைகளும் சிறுபான்மை தமிழர்களுக்கும் வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்தில் பேசிய போது அவரது மண்டையை உடைத்தார்கள் தமிழர்கள் அப்படி இருந்தும் ஜூலை கலவரத்தில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் அவர்களை காப்பாற்றுவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள் ஜேவிபியினர். 19 88 89இல் இலங்கையில் ஜே பி பி யால் மாபெரும் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் ரோகன விஜய் வீரே. அவர்கள் தமிழர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை மாறாக இலங்கையை ஆளும் சிங்கள அரசியல்வாதிகள் இலங்கையை அந்நிய நாடுகளின் எடுப்பார் கைப்பிள்ளை ஆக்கிவிட்டனர் அதை மக்கள் போராட்டம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என போராடினார். அவர்கள் எல்டிடிஐயும் அந்த கிளர்ச்சிக்கு அழைத்தார்கள். முன்பே தெளிவாக சொல்லி விட்டார்கள் இந்த போராட்டம் இலங்கை மீட்டெடுப்பதற்கு ஆனால் இந்த நாட்டிற்குள் இன்னொரு நாடு என்பது சாத்தியமில்லை அதே வேலை தமிழர்களின் உரிமைகளும் சலுகைகளும் நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆன்டன் பாலசிங்கத்தின் மேலைநாட்டு அரசியலுக்கு சோசலிசம் கொஞ்சம் கசக்கும் போல் தெரிகிறது எனவே புலிகள் ஜேவிபியின் கோரிக்கையை ஏற்கவில்லை. அடைந்தால் தனி ஈழம் அன்றேல் சுடுகாடு என்று இருப்பவருக்கு இது புரியுமா! இந்த காலகட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்ததுபிரபாகரனுக்கு உடன்பாடு இல்லை. அதே வேளை அன்றைய ஜனாதிபதி ரண சிங்கே பிரேமதாசாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை என்று ஒரு காரணத்தைச் சொல்லி சிங்கள அரசு ஜேவிபியை ஒடுக்குவதற்கு புலிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இந்தக் கிளர்ச்சியில் பிரேமதாசா அரசால் சுமார் 60,000 சிங்கள இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்கள். இதில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள யாழ்ப்பாணப் பகுதியில் அடைக்கலம் தேடிப்போன சிங்கள இளைஞர்கள் போரால் முற்றிலும் கல்வி இழந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆங்கில மொழி கல்வி அளித்துஅவர்கள் மேல்நாடு சென்று வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்தக் காலத்தில் புலிகள் இயக்கத்துக்கு போராளிகள் வருவது குறைந்துவிட்டது இது பிரபாகரனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனதால் யாழ்ப்பாணம் பகுதியில் அடைக்கலம் தேடி சென்றவர்கள் புலிகளால் சிங்கள அரசுக்கு காட்டி கொடுக்கப்பட்டார்கள். இந்தக் காட்டி கொடுத்த விஷயத்தை வெளி உலகுக்கு போட்டுக் கொடுத்து விடுவார்கள் என்பதாலேயே யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த முஸ்லிம்களை ஆயுத உதவியுடன் கட்டாயமாக வெளியேற்றினார்கள். பின்னாளில் பிரபாகரன் இதற்கு சில சொத்தை காரணங்களை தமிழகத்தில் இருந்து போனவர்களிடம் சொல்லி இருக்கிறார். இவர்களும் அந்த சொத்தை காரணங்களை ஏற்றுக்கொண்டு இங்கு வந்து அதையும் பேசியவர்களும் உண்டு. தமிழ் இளைஞர்களை மேம்படுத்திய சிங்கள இளைஞர்களை பிரேமதாச அரசு படுகொலை செய்தது. ஜேவிபி தலைவர் ரோகனை விஜய் வீரா உபதிஸ்ஸ காமநாயக்க ஹெச் சி ஹெரத் போன்ற தலைவர்களும் பிரேமதாச அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போது சொல்லுங்கள் இலங்கையை அரசுக்கு தமிழர்கள் மீது பகையா அல்லது தமிழீழம் கேட்டு போராடும் தமிழர்கள் மீது பகையா இவை எதுவும் இல்லை. சிங்களவர்கள் ஆனாலும் தமிழர்கள் ஆனாலும் பொதுவுடமைவாதிகளே இவர்களின் பகைவர்கள். தனிநாடு கேட்கும் பிரபாகரனுக்கும் எதிரிகள் பொதுவுடமையாளர்களே. மதத்திற்காகவும் இனத்துக்காகவும் போராடுகிறேன் என்று உளருபவன் பொதுவுடமைவாதியாக இருக்க முடியாது. இனக் கலவரம் என்று வந்தவுடன் ஓடிப்போய் தமிழர்களை காப்பாற்றினார்களே அந்த சிங்கள இளைஞர்கள் எங்கே?! தன்னுடைய சுயநலனுக்காக தங்களுக்கு உதவி செய்த சிங்கள இளைஞர்களை காட்டி கொடுத்த தமிழ் தேசியம் எஙகே.?! ஏகாதிபத்தியமும் இன வெறியும் நிலப்பரப்புத்துவமும் கைகோர்த்துக்கொண்டு முதலில் பொதுவுடைமை வாதிகள் அழித்தது. பின்பு தனி நாடு கேட்கும் நிலப்பரபுத்துவ பிரபாகரன அழித்தது. பிரபாகரனின் அழிவு போலி தமிழ் தேசியம் பேசி திரியும் கூட்டத்திற்கு நாம் தமிழர் என்ற போர்வையில் வாழ்வளித்திருக்கிறது. மதவாதிகளும் இனவாதிகளும் என்றுமே மக்களுக்கானவர்களாக இருந்ததில்லை. இந்தியாவின் மத வாதிகள் கோல்வாக்கர் ஹெட்கேவர் வழிகாட்டுதலால் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து கலகம் செய்து வருவார்கள். அதேபோல் இலங்கையின் புத்த பிக்குகள் ஜெயவர்த்தனே பண்டாரநாயக்க போன்ற நபர்களால் வழிகாட்டப்பட்டு இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிராக கலகம் செய்பவர்கள். இதற்கெல்லாம் விதிவிலக்காக தங்கள் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் தங்கள் மண்மீது இருந்து அந்நிய ஆதிக்கத்தை அகற்றப் போராடிய புத்த குருமார்களும் இருக்கத்தான் செய்தார்கள். வியட்நாம் மண்ணிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காக வீதிக்கு வந்து போராடி தங்கள் இன்னுயிரை தீக்கிரை ஆக்கிக் கொண்டார்கள். வியட்நாம் வீதிகளில் நூறு புத்த பிக்குகள் தீயில் கருகினார்கள். ஏனென்றால் வியட்நாம் போராட்டம் கார்ல் மார்க்ஸ் லெனின் சித்தாந்தத்தில் பிடல் கேஸ்ட்ரோ சேகுவேரா போன்ற மகத்தான மக்கள் தலைவர்கள் வழிகாட்டலுடன் வியட்நாமின் தந்தை ஹோசிமின் தலைமையில் நடத்திய போர்.அமெரிக்காவை எதிர்த்து வெற்றியும் பெற்றார்கள்.மக்களுக்கான சித்தாந்தம் எது‌என்று தெரிந்து கொள்ளாமல் ஆயுதத்தை மட்டுமே நம்பிய கூட்டம் சிங்கள முட்டாள்களிடம் தோற்றும்போனது. இங்கும் பல இளைஞர்கள் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஆதரித்து தீக்குளித்தனர்.அது தமிழக அரசியல்‌கட்சிகளுக்கு திறள் நிதி வசூலிக்கவே பயன்பட்டது.

எழுத்தாளர் :

புஷ்பராஜ் / ML

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *