மதுரை மாவட்டம் , மேற்கு ஒன்றியம் , பரவைப் பேரூராட்சியின் 4 , 5 ஆம் வார்டுகளில் ஏறக்குறையை ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த காட்டுநாயக்க மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சமூகம் தமிழ்நாடு அரசின் பட்டியல் பழங்குடியினருக்கான 9 வது வரிசை எண்ணில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் காட்டுப் பகுதிகளில் இருந்து பிரிட்டிஷ் அரசின் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக காடுகளில் இருந்த வெளியேற்றப்பட்டனர். நாஎட்டு விடுதலைக்குப் பிறகு அவர்கள் சமவெளிகளிலும் ஏனைய பகுதிகளிலும் அலைகுடிகளாகவும் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டத்தில் தங்களுடைய பழக்கவழக்கங்களில் மட்டும் பழங்குடித் தன்மையைப் பெற்று ஓரளவு நிலைத்த குடிமக்களாக சில இடங்களிலும் பல இடங்களில் அரசு புறம்போக்குகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
அவ்வாறான காட்டுநாயக்க மக்கள் பரவை சத்தியமூர்த்தி நகரில் கிட்டதட்ட 70 ஆண்ஆடுகளாகக் குடியிருந்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக காட்டு நாயக்கர் சமூகக் குழந்தைகள் சாதிச் சான்றிதழ் பெறுவதை மாவட்ட வருவாய் நிர்வாகம் மறுத்து வருகிறது.
மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் இந்த மக்கள் பகைப் போக்கைக் கண்டித்து பலமுறை போராடி வந்த போதிலும் கடந்த ஆறு நாட்களாக பரவை பவர் கவுஸ் பகுதியில் அமர்ந்து அமைதியான முறையில் சாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடி வருகின்றனர்.
1920 தமிழ்நாடு அரசின் மாவட்ட நகராட்சி சட்டப் பிரிவின் படி 1996 ஆம் ஆண்டு மேற்கண்ட மக்கள் வாழும் சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியை பழங்குடி சமூக வார்டாக அறிவித்தும் உள்ளது.
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் இந்தப் பகுதியில் பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இதன் காரசமாகவே கடந்த 2016 ஆம் ஆண்டு பரவைப் பேரூராட்சித் தலைவர் பதவியைப் பழங்குடியினருக்கானதாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
இதில் பகுதியில் பலர் காட்டு நாயக்கர் பழங்குடிச் சான்றிதழ் பெற்று அரசின் பல்வேறு துறைகளில் பணியும் ஆற்றி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தந்தைக்கு காட்டு நீயக்கர் சாதிச் சான்றிதழ் இருந்த போதும் அவர்களுடைய பிள்ளைகளுக்குச் சான்றிதழ் வழங்க மாவட.ட வருவாய் நிர்வாகம் மறுத்து வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் குறிப்பிட்ட பகுதியில் கள ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் காட்டு நாயக்கர் சமூக மக்கள. இல்லை என்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக போராடும் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பழங்குடி ஆணையர் கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கண்ட மக்களுக்கு பழங்குடிச் சான்றிதழ் வழங்கலாம் என பட்டியல் சாதி & பழங்குடித் துறைச் செயலருக்குப் பரிந்துரையும் செய்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் சுமதி தலைமையிலானக் குழு மேற்கண்ட மக்களிடம் கள ஆய்வு செய்து இவர்கள் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என ஆய்வை அளித்துள்ளார்.
அதேபோல ஊட்டியிலுள்ள பழங்குடியினர் ஆய்வு மையமும் சத்தியமூர்த்தி பகுதியில் கள ஆய்வு செய்து இந்த மக்களைக் காட்டுநாயக்கர் மக்கள் இவர்கள் பழங்குடிச் சதூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஆய்வை அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பட்டியல் பழங்குடிப் பிரிவினர் வரிசையில் மேற்கண்ட சமூகம் வகைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களைத் தொட்டிய நாயக்கர் என்பதைக் அறிவித்து MBC சான்றிதழ் மட்டுமே வழங்குவோம் என மாவட்ட வருவாய் நிர்வாகம் கூறி வருகிறது.
மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் போக்கு தமிழ்நாடு அரசின் விளிம்புநிலை மக்கள் சார்பு கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.
தமிழ்நாடு முதல்வர் ஜெய்பீம்படம் வந்த பிறகு நரிக்குறவர் மக்களின் துயரை உணர்ந்து அவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க ஆவண செய்ததோடு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் வழிசெய்தார்.
தமிழ்நாடு அரசின் சமூகநீதிக் கோள்கைக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மாவட்ட வருவாய் நிர்வாக அதிகாரிகளின் போக்கைத் தடுத்து நிறுத்தி காட்டு நாயக்கர் மக்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதற்குத் தடையில்லாத வகையில் உரிய ஆணையைப்பிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த ஆறு நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகளும் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். அவர்களுடைய நலன் கருதியும் நல்ல முடிவை மாவட்ட வருவாய் நிர்வாகம் மேற்கொள்ள முன்வர வேண்டும் என புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக வலியுறுத்துகிறோம்!

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply