படம் இரத்தமும் சதையும் உள்ள பார்ப்போர்க்கு சிறிதேனும் சிந்திக்கும் திறன் இருந்தால் விழித்துக் கொள்ள கூடிய சாட்சி மனநிலையில் படைக்கப்பட்டுள்ள மாபெரும் படைப்பு !!
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் திரைக் . சிறந்த திரைக் கலக்காரனாய் உரையாடலின் மேன்மையை புரிந்து சாட்சி மனநிலையில்
எந்தச் சாதிக்கும் சார்பின்றி சாதி ஒழிப்பு கவனத்தோடு கையாண்டுள்ளார் நேர்மை திமிராளி தோழர் மாரி செல்வராஜ் !!
சாதி ஒரு மனோநிலை என்று அம்பேத்கர் ஆய்வு செய்ததை அப்படியே திரைப்படைப்பாக உருவாக்கி இருப்பதில் மாரி பெரும் மனம் முதிர்ச்சியை எட்டியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
சுபாஸ் பண்ணையாரின் கதா பாத்திரத்தை உரித்தெடுள்ளார் ஆகசிறந்த கலைஞன் லால் அந்த கேரக்டரின் நிஜத்தில் கறுப்பு வெள்ளை இருபக்கத்தையும் தெளிவு படுத்தியுள்ளார் இயக்குனர்போலவே பசுபதி பாண்டியன் கேரக்டர் அமீர் மிரட்டியுள்ளார் நான் ஏன் கத்தி எடுத்தேனே மறந்து சுயசாதி பெருமை பேச துணிந்து விட்டார்களே என விம்மி பேசும் இடம் !! மாரி செல்வராஜை அவன் மனட்சாட்சியை கட்டி அழத் தோன்றுகிறது !!

ஆண்ட பரம்பரை மனநிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை லால் கேரக்டரில் மரியாதையை விட்டு தர முடியல என விடவும் முடியல ஜாதிவெறியை ஒப்புக் கொள்ள வைத்திருப்பது இன்னொரு புரிதலுக்கான வசனம்
துருவ் விக்ரம் இந்த படத்தோடு நடிப்பு காலம் முடிந்தாலும் வெற்றி தான் தொடர்ந்தாலும் வெற்றி தான் அதிகமான மௌனமான உடல் மொழியும் தீரா வீச்சுக்கொண்ட பார்வையும் எதுக்கு நான் ஓடனும் எனக் கேட்கும் பிறப்பால் வந்த வலியையும் மனுசன் பின்னிட்டான்!!
ஜாதி சாக்கடையை கடப்பது அவ்வளவு எளிதல்ல எவ்வளவு அடக்குமுறை எவ்வளவு வெட்டு குத்தி இரத்தம் இந்தியாவில் ஜாதி மனுதர்ம ஜாபக்கேடு
மதப்பிணக்கு எப்படியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது அதையும் வெல்வது கபடி என்ற விளையாட்டு துறை மட்டுமல்ல எந்த கல்வி நிலை என்றாலும் வேறு துறையாக இருந்தாலும் BC SC க்கு பொது எதிரி எது என்பதையும் அதிகார வர்க்கம் யார் என்பதையும் துல்லிய படுத்தி இருக்கிறார் இயக்குனர் !!
படையாண்ட மாவீரன் போன்ற படங்களை எடுக்கும் ஜாதி வெறி மனநோயாளி களுக்கு மத்தியில் எந்த சமூகமாக இருந்தாலும் கடந்த வந்த வலியை பேசும் முனையும் இந்த தென்னகத்து குலக்கலைஞனை எப்படி பாராட்டினாலும் தகும்
ஆண்ட பரம்பரை மனோநிலையை உடைத்தெரிந்து வாழ்விலிருந்து கற்று வலிகளை கூறி அதில் தப்பிப்பவனே உயரம் எட்டுகிறான் என்பதையும் மெய்பிக்கிறது பைசன்
பசுபதி பாத்திரம் சொல்வது போல் பசுபதி களுக்கு அப்பன் அந்தஸ்தை தருவதை விட குலசாமியை கொண்டாடி திளைப்பது போல் எல்லா பாத்திரமும் மிரள வைக்கிறான் காள மாடன்

வழக்கம்போல் இப்படத்திற்கு ஹரிநாடார் போன்ற ஜாதி வெறியர்களை இப்படம் கதற வைப்பதில் பைசன் அதன் உள்ளடக்க வெற்றியை பெற்றுள்ளது என்றே எடுத்துக் கொள்ளலாம் போலவே மாரி செல்வராஜையும் அவர் சார்ந்த சமூகம் சிலர் விமர்சிப்பதும் அவர் சரியாக செயல்பட்டுள்ளார் என்பதை தெளிவு படுத்தி சாட்சியாளனாய் படைப்பை முழுமை ஆக்கி இருக்கிறார் என்றே தோன்றுகிறது
மொத்தத்தில் “பைசன் ” ஜாதி வெறி பைத்தியங்களுக்கு நல்லதொரு வைத்தியம் மூளை நரம்பு உயிர் பெற்ற வர்களுக்கு இப்படம் களங்கரை விளக்கம் !!
தொடரட்டும் திரைக்கலகம் வெல்க
உம் படைப்புலகம் !!

- தவம்
Leave a Reply