சமீபத்திய அருந்ததியர் உள்ஒதுக்கீடு குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பு (பட்டியலின மக்கள் ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது, யோசனையாக சொல்லபட்ட கீரீமிலேயர் )பின் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் ரவிகுமார் அவர்களும் தீர்ப்பை மறு சீராய்வு மணு தாக்கல் செய்ய கோரி மத்திய அமைச்சர்கள் எதிர்கட்சிதலைவர் அகில இந்திய அளவில் உள்ள சில தலித் தலைவர்களையும் சந்தித்து முறையிட்டார்கள்
தலைவர்கள் சந்திப்புக்கு இடையே MP ரவிக்குமார் அவர்கள் தனது X தளத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக பல கருத்துக்களையும் தெரிவித்து கொண்டே வருகிறார் குறிப்பாக சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்
உள்ஒதுக்கீடு தீர்ப்பை நிறுத்த அவசரசட்டம் பிறப்பிக்கபடுமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறுத்த வைக்க அவசரசட்டம் பிறப்பிப்பதுதான் பிரதமருக்கு ஒரே வழி .
Quota within Quota is more dangerous form of creamy layer என்ற தலைப்பில் கட்டுரை அதாவது உள்ஒதுக்கீடு கிரீமீலேயரை விட ஆபத்தானது என்கிறார் மேலும் பல கருத்துக்களை தெரிவித்து கொண்டே இருந்தார்.
ரவிகுமார் திருமா அவர்கள் தலைவர்கள் சந்திப்பு ஒரு புறம் உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான
வன்ம செய்திகளை பரப்புவது ஒரு புறம் ஆனால் ஊடகங்களிடம் கிரிமீலேயர் மாநில அரசுக்கு வழங்கபட்ட அதிகாரத்தை எதிர்த்துதான் என வாய்ஜாலம்
தமிழ்நாட்டில் அருந்ததியர் இயக்கங்கள் மீண்டும் 2008 போலவே திருமா அவர்களின் வாய்ஜாலத்தை புரிந்து கொண்டு (அன்றைக்கு திருமா அவர்களை உள்ஒதுக்கீட்டை ஆதரிக்க வைத்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ) அருந்ததியர் இயக்கங்கள் சமூக வலைதளங்களில் அண்னன் திருமா ரவிகுமார் என விசிகவிற்கு எதிரான விமர்சனங்களும் கேள்விகளையும் முன் வைத்தனர் (2008 2009 காலகட்டத்தை போல் எங்கும் அவரது கொடும்பாவி எரிப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )
(ஆனால் அவர் அற்பர்கள் கண் முழிக்காத குஞ்சுகள் காழ்ப்புணர்வு, அரசியல் பொறாமை என விமர்சித்தவர்களை ஏக வசனத்தில் பேசினார் )
அருந்ததியர் இயக்கங்களின் எதிர்ப்பு விசிக வின் சமூகநீதி க்கு எதிரான செயல்களை புரிந்து கொண்ட ஜனநாயக சக்திகள் அம்பேத்கர் பெரியார் இயக்கங்கள் youtu.be தோழர்கள் இவர்கள் பாசிச சக்திகளால் திருமா அவர்களுக்கு ஆபத்து என்றால் முன் வரிசையில் நின்று திருமா அவர்களை பாதுகாப்பவர்கள் (நாமும்தான்) அண்னன் கொளத்தூர்மணி, தலித்முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்கள் அதர்மம் மனோஜ், tribes கரிகாலன், அறகலகம் தவம்,பேரலை இந்திரகுமார் தேரடி, மகழ்நன் அரண்செய் குழு பு இ மு குமரன் உள்ளிட்ட பல ஜனநாயக சக்திகள் பெரியாரின் பார்வையில் விசிக வின் சமூகநீதி க்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை முதல் கட்டமாக பதிவு செய்தனர் புரிந்து கொண்ட திருமா அவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் விளக்கவுரை(தங்கள் எடுத்த நிலைபாட்டில் இருந்து பல்டி அடித்தார் ) நிகழ்த்தினார், எவனும் எங்களுக்கு சமூகநீதி பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை என்று ரவிகுமாரே அருகில் வைத்து கொண்டே பேசினார்
உள் ஒதுக்கீட்டை சூசகமாக எதிர்க்க தயாரானவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக்கு பின் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஒன்றுமே செய்ய முடியாது என பல்டி அடித்துள்ளார் அதை ஆதரிக்கிறோம் எங்களுடைய ஆதரவுடன் உடன் தான் இருக்கிறது என்றார்
ஏன்_ஆர்பாட்டம் ?…
நாம் முன்பே சொன்னது போல கிரீமீலேயர் என்பது (suggestion) யோசனைதான் தீர்ப்பல்ல என அவரே ஒப்பு கொண்டார்
மாநில அரசுக்கு வழங்கிய அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார் உண்மையில் கல்வி மாநில பட்டியலுக்கு வருவதற்கும் GST உள்ளிட்ட பல ஒன்றிய அரசின் பல கொடூர நடவடிக்கைக்கெதிராக நம்மோடு நின்று குரல் கொடுத்தவர் இன்று ஏன் தடுமாறுகிறார்?
அம்பேத்கர் முழகுச்சியை அடித்து அங்கே ஒன்றிய அரசிடம் கட்டி வைத்துவிட்டார் என கூறுகிறார் அதை பின்பற்ற வேண்டும் என்பது போல் பேசுகிறார் அம்பேத்கர் இந்தியை தேசியமொழி ஆக்க ஆலோசனை கூறினார் என்பதற்கு எதிராக தானே நாம் நிற்கிறோம்
மாநில அரசு தவறான வழிகாட்டிதலில் செய்து விடும் என்று எடப்பாடி வன்னியர்களுக்கு வழங்கபட்ட இட ஒதுக்கீட்டை காரணம் காட்டிகிறார்
ஒன்றிய அளவில் உள்ள பல அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் எடப்பாடி அவர்களுக்கு இனையானவர்கள் என்பதற்கு நாம் பல உதாரனங்களை சொல்ல முடியும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் சமூகநீதி பார்வை விசாலம் கொண்டவர்கள் அல்ல உதாரனத்திற்கு சொல்ல வேண்டுமெனில் EWS உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு விவாகாரத்தில் நாம் பார்த்தோம் காங்கிரஸ் முதல் அரவிந்த்கெஜ்ரிவால் மம்தபாணர்ஜி நிதிக்ஷ்குமார் CPM CPI தலைவர்கள் உள்ளிட்ட தலித்தலைவர்கள் மாயாவதி ஜிதன்ராம்மஞ்சி என பலரும் EWS ஆதாரித்தார்கள் ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்க முடியாது என்றார் தமிழ்நாட்டில் பல தலைவர்கள் EWS எதிர்க்கிறார்கள் இந்திய அரசியல் சட்டத்தையே மாற்ற போகிறார்கள் அழிக்க இருக்கிறார்கள் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லாமல் செய்ய போகிறார்கள் என்று எங்களுக்கு பாடம் நடத்தி விட்டு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் தேவை என பேசுவது (intention) உள்நோக்கம் நாடகம்தானே
உள் ஒதுக்கீட்டை மறைமுகமாக எதிர்க்க தான் இந்த மேல் பூச்சுகள் கீரிமிலேயர் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் என்பது எல்லாம் உச்சநீதிமன்றத்தின் உள்குத்து உள்குத்து என்கிறார்
பெருங்காய டப்பாவில் பெருங்காயம் காலி ஆனால் கூட அதில் வாசம் இருக்கும் என்பது போல திருமா அவர்கள் ஆர்பாட்டத்தில் புதியதமிழகம் கிருஷ்ணசாமி 2009 காலகட்டங்களில் பேசியது போல் பட்டியலில் 76 ஜாதிகள் இருப்பதாக கூறி வாசிக்கிறார் 76 ஜாதிகள் பட்டியல் சில கேரளா கர்நாடக ஆந்திர சென்று விட்டன மொழி வழி மாநிலங்கள் பிரித்த பின் கூடுதலாக தற்போது பள்ளர் பறையர் சக்கிலியர் களுக்குள் அடங்கி 95 % இந்த மூன்று பிரிவினர்தான் இருக்கிறார்கள்
காலி டப்பாவின் மிச்ச வாசனையாக மேலும் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3% வழங்கப்பட்டுள்ளது அவர்கள் மீதமுள்ள பிரிவான 15 % லும் பங்கு பெறலாம் மீண்டும் அவர்கள் 15% பங்கு பெறலாம் என மூன்று முறை சொல்கிறார் open for all, including arunthathiars என்று ஆங்கிலத்திலும் பதிவு செய்கிறார்
ஏனோ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அருந்ததியர்களுக்கு வழங்கபட்ட 3% உள் ஒதுக்கீட்டில் தகுதி வாய்ந்த அருந்ததியர்கள் இல்லை எனில் பிற பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என சொல்லபட்டதே லாவகமாக மறைத்தார் ஏன் என்பதை படிப்பவர்களே முடிவு செய்யுங்கள்
பல மேடைகளில் அருந்ததியர்களை தமிழ்தேசிய களத்தில் ஒதுக்கி வைத்தார்கள் அவர்கள் செட்டியார் நாயக்கர்கர்கள் தெலுங்கு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என மற்றவர்கள் கூறியதாக கூறுகிறார் (மற்றவர்கள் கூறியது எனில் தவறான கருத்து அருந்ததிய மக்களின் அனைத்து இயக்கங்களும் தமிழர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக பேசி வருகிறார்கள் )
சீமான் வந்தேறிகள் என பதிவு செய்த போது அருந்ததியர்கள் மட்டுமா வந்தார்கள் என சீமானின் கருத்துக்கு உருவேற்றி பேசினார் ஒரு நேர்காணலில்
மதுரையில் அருந்ததியர் மக்களுக்காக நான் களத்தில் நின்றேன் என்கிறார் மறுக்கவில்லை உண்மையும்கூட அருந்ததிய மக்களோடு நெருங்கியும் பழகியவர் அருந்ததிய மக்கள் தெலுங்கு மட்டுமா பேசுவார்கள் கன்னடம் மலையாளம் இந்த மூன்று மொழி பேச தெரியாத தமிழ் மட்டுமே பேச கூடியவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் தாங்கள் இன்றும் அறியாமல் இருக்கிறீர்கள் பெ. மணியரசன் கூட எங்கள் ஊரில் உள்ள சக்கிலியர்கள் தமிழ் மட்டுமே பேசுகிறவர்கள் என்கிறார் சீமானும் கூட தமிழ் மட்டுமே பேச கூடியவர்கள் இருப்பதாக இப்பேதுதான் கேள்விபடுகிறேன் அவர்கள் என்னோடு நிற்கனும் என்கிறார்.
இந்த மக்களோடும் இயக்க தலைவர்களோடும் நெருங்கி பழகி கொண்டுள்ள தாங்கள் மட்டும் ஏன் இந்த மக்கள் வரலாறுகளை தெரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் எழுத்தாளர் மதிவண்னன் எழுதிய சக்கிலியர் வரலாறு புத்தகம் பல கல்வெட்டு சாண்றுகளுடன் வெளிவந்தும் திருமா அவர்கள் கைகளுக்கு ஏன் செல்லவில்லை விசிக வில் உள்ள துனைபொது செயலாளர் கனியமுதன் போன்றோர் தென் மாவட்டங்களில் அருந்ததிய இளைஞர்கள் ஆணவ படுகொலை செய்யபடுவதை திருமா அவர்களுடையை கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பது போல் அருந்ததியர்கள் தமிழர்கள்தான் என்கிற ஆவணத்தையும் காட்டுவதில்லை
திருமா அவர்கள், அவர்கள் மட்டுமா வந்தார்கள் என கேட்கும் போது அண்னன் கனியமுதன் போன்றோர்க்கு கூச்சம் இருக்காது என கருதுகிறேன்
தற்போது விசிக தலைவர் திருமா அவர்கள் அரை சமூகநீதி பக்கம் திரும்ப காரணமாக இருந்த அவர்களுடையை உள்நோக்கத்தை சிதறடித்து இது பெரியார் மண் நிருபித்த அத்துனை தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் தமிழ்புலிகள் சார்பில் நன்றி
சீராய்வு என்ற சிந்தனை இருந்து விசிக முழுவதுமாக வெளியேற வேண்டும்.
மா.முத்துக்குமார்
செய்திதொடர்பாளர் தமிழ்புலிகள்கட்சி.
+ There are no comments
Add yours