குஜராத்தில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை உட்கொண்டு எப்படி உஸ்பேகிஸ்தானில் குழந்தைகள் செத்து விழுந்தனர் என்பதில் இந்த காணோளி தொடங்குகிறது.
மெல்ல மெல்ல கொரோனா காலத்தில் ஏற்பட்ட மருந்துவ குளறுபடிகளை தோலுரித்து காட்டும் முக்கிய காணொளியா இது உருமாறுகிறது. தரக்குறைவான மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்ததின் விளைவாக எவ்வாறு கொத்து கொத்தாக குழந்தைகள் மருத்துவமனைகளில் செத்து மடிந்தார்கள். பிகார், உபி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் என பல மாநிலங்களில் எப்படி இந்த மரணங்கள் நிகழ்ந்தன, என்பதில் தொடங்கி இந்த மருந்துகளை தயாரித்த நிறுனங்கள் குஜராத்தில் இருந்ததால் எப்படி எவ்வித நடவடிக்கைகளும் இன்றி தப்பித்தன என்பதை படிப்படியாக அறிகிறோம்.
கட்டுப்பாடுகளின்றி எப்படி பல்வேறு நாடுகளில் இந்த குழந்தை மரனங்கள் தொடர்ந்தன என்பதாக நம்மை அழைத்துச் சென்று உலக அளவிலான மருத்துவர்கள், தரக்கட்டுபாடு நிறுவனங்கள் எவ்வாறு இந்தியாவை காரித்துப்புகிறார்கள் என்றும் விளக்குகிறார்.

தரமான மூலப்பொருட்கள் பயண்படுத்தப் படவில்லை, தரக்கட்டுபாடுகள் துளியும் இல்லை என்பது தான் குஜராத் மாடல் என்பதை ஆதாரங்களுடன் அறிகிறோம், இதை எல்லாம் விட முக்கியம் தொழிற்சாலைகளுக்கு என்று தயாரிக்கப்படும் வேதிப் பொருட்களை (industrial grade) வாங்கி எப்படி மனிதர்கள் உட்கொள்ளும் (edible/food grade) மருந்துகளில் பாவித்தார்கள் என்பதை அறியும் போது மனம் பதறுகிறது.
ஆனால் இதை எல்லாம் அறிந்தபின்பு இந்தியாவை ஆளும் மன்னர் அவர்களை தண்டிக்காமல், தரக்கட்டுபாடுகளை மேலும் தீவிரப்படுத்தாமல், மரணங்களுக்கு ஏற்ப கோடிகளில் இந்த ஒவ்வொரு நிறுவனத்திடமும் தேர்தல் பத்திரங்களும் மூலம் கோடி கோடியாக பெற்றுள்ளார்.
த்ருவ் ரதியை பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறேன், ஒரு மிக முக்கிய கல்விசார் பணியை அவர் செய்து வருகிறார். இன்றைக்கு அவர் வெளியிட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட காணொளிகள் சங்கி கோமாளிகளை நிர்வாணப்படுத்தியிருக்கிறது. இந்த காணொளியையும் விரைவில் தமிழ் படுத்த வேண்டும்…
எழுத்தாளர் :

அ . முத்துகிருஷ்ணன்
Leave a Reply