பாசிசம் தலைவிரித்தாடும் போது இசச்சண்டைக்கான நேரமா இது?

சமீபத்தில் நீலம் பண்பாட்டு மையத்தில் ஒரு கருத்தரங்கம் அதுதான் இலக்கிய, மற்றும் அரசியல் தளத்திலும் இணைய தளத்திலும் பேசும் பொருள் அந்த அறிவார்ந்த சர்ச்சையிலிருந்து பொது புரிதலுக்காகவும் நட்பு முரண் முரண் கூர்மை தீட்டுவது என்பது புரிதலுக்காகவும் ஆரோக்யமான விவாதச் சூழலை உருவாக்கி அதன் வழியாக பகை முரண் யார் என அறிய முற்படலாம் நம் சமூகத்தின் பொது எதிரி யார் என்றும் கண்டடையலாம் அதுதால் ஆனால் நட்பு முரண் எது என விளங்காமலே அதனை பகை முரண் ஆக்கி அபத்தத்தை அறிவென்று புலாங்கி தம் அடையவது சரியா என்பதே என் முதல் கேள்வி?

சரி விவாதத்திற்கு வருவோம் ஆதவன் தீட்சண்யா பேசியதில் என்ன குறை ? எல்லா ஜாதியிலும் அயோக்யனும் இருக்கிறான் யோக்யனும் இருக்கிறான் இது எந்த மாடை கொம்பனாலும் மறுக்க முடியாது என்ன சதவீத அடிப்படையில் வேறு பாடுகள் இருக்கலாம் உதாரணமாக ஆதிக்க ஜாதியினர் அல்லது இடைநிலை சாதியினர் OBC MBC இன்னும் பிற பிரிவின் இவர்கள் அதிகமாக மேட்டு குடி சமூகத்திற்கு நேரிடையாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனியத்திற்கு அரசியல் அடியாள் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் மறுப்பதற்கு இல்லை ஆனால் மொத்த இடை நிலை ஜாதியிலும் பிறந்தவர்கள் அப்படியா என்றால் இல்லை தன் பொது எதிரி யார் என தெரியாமல் (அ) தெரிந்தே ஆண்ட பரம்பரை கோசம் காதை பிளந்தாாாலும் அதனூடே தோழர்கள் தோன்றவே இல்லையா கடந்த காலத்தில் பெரியார் தொடங்கி அதன் தொடர்ச்சியாய் நல்லக்கண்ணு வரை அது நீளவில்லையா ஆதவன் குறிப்பிட்டதை போல பாப்பா மோகன் யார் ? அதேபோல் ரத்னசாமி வெட்டப்பட்ட வாயில் ஆண் குறி திணிக்கபபட்ட அந்த கவுண்ட சமூக தோழர் யார்? வழக்கறிஞர் ப.ரத்தினம் யார்?

இப்படி பல ஆளுமைகளை சமூக செயல் பாட்டாளர்களை படைப்பாளிகளை அடுக்கி கொண்டே போகலாம் என்பதை அறிவு நாணயம் உள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள் என்றுதான் நம்புகிறேன்..போலவே பார்ப்பனிய அரசியலுக்கு அடியாள் வேலை பார்க்கும் இதோ இந்த பாசிசம் தலைவிரித்தோடும் இந்த சூழலிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வே முடியாது என்று பார்ப்பனதிமிருக்கு கைகால் அமுக்கும் வேலையை பார்க்கிறாரே ராமதாஸ் அதுவும் சமூகநீதி பேசிக் கொண்டே சத்ரியன் என்று முக்குகிறாரே அவரை ஏற்று கொள்ள முடியுமா? திராவிட இயக்க செயல்பாட்டாளர்களோ , பெரியாரிஸ்டுகளோ , கம்யூனிஸ்டுகளோ இவரின் துவக்க கால செயல் பாட்டை மட்டும் மனிதில் கொண்டு இன்றும் ஏற்று துதிக்க முடியுமா?

எழுத்தாளர் திலகபாமா என்ற அடையாளத்திற்காக தொங்கு சதைகளை வீரப் புஜம் என ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா காரணம்மிக எளிது இப்படி பல இடைநிலை ஜாதிக்கார கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளரகள் உண்டுதானே அது அதுகளை சங்கி கள்என்று அழைத்தாலும் பிழை ஏதும் உண்டாஅது போலவே இளையராஜா பிறப்பால் தலித் என்பதால் மட்டுமே புனிதர் ஆகிவிடுவாரா ? இப்பொழுதும் சொல்கிறேன் என் காதுகள் இதை எழுதுகிற இந்த நிமிடத்துளியிலும் அவரின் இசைக்கு அடிமையே அதில் அவர் ஞானி என்றாாாலும் ஏற்றுக் கொள்வேன் மறுக்க முடியாது ஒரு போதும் அதற்காக அவரின் அரசியல் இழிநிலை மொழிக்கு அதுவும் அம்பேத்கரையும் மோடியையும் சம படுத்தி கேவலம் ஒரு MP சீட்டுக்காகஅவர் ஜால்ரா போடுவதை இசை யன ரசிக்க முடியுமா? ஜனனி என்று சனாதனத்திற்கு பஜனை பாடிவிட்டு பெரியாருக் இசையமைக்கு மாட்டேன் என்று சொல்வதும் தீண்டாமை இல்லையா? ஆக பார்ப்பனியம் என்பது ஒரு மனோநிலை என்பது மட்டும் ஷாலினி உன் அப்பன் என்பதால் இடதுசாரிகள், முற்போக்கு எழுத்தாளர்கள், திராவிட இயக்க செயல்பாட்டாளர்கள் உண்மையான அம்பேத்கரிஸ்டுகள் ஏற்றுக் கொள்வார்களா? இதுவும் வறட்டு ஜாதியவாதம் தானே ஆக ஷாலினிகள் சனாதன பிடிலை வாசித்துக் கொண்டு பறைக்கு முரணாக பேசுவது அபத்தம் அறிவுளித் தனம் மூன்று புத்தகம் எழுதிவிட்ட அகங்காரமாக இருந்தாலும் 2000 பாடல்களை இசைத்து விட்ட இசையானியாக இருந்தாலும் நீங்கள் யாருக்காக யாருடன் நிற்கிறீர்கள் என்பது தான் கேள்வியே தவிர அப்பன் என்பதால் மட்டுமே எவனும் இங்கு புனிதன் ஆக முடியாது ஷாலினி மரியாக்களே …

தோழர் படைப்பாளி ப.ரஞ்சித்துக்கு சில உரையாடல்களை உரித்தாக்க விரும்புகிறேன் உங்களை அம்பேத்கரிஸ்டாகவே பார்க்க விரும்புகிறேன் மாற்று கருத்து இல்லவே இல்லை ஒரு அம்பேத்கரின் மானசீக சீடனாக சொல்லுங்கள் மோடியும் அம்பேத்கரும் ஒன்று இந்த வரலாற்றுக்கு ஒவ்வாத உளறலை ஏற்க முடியுமா? ஆக இளையராஜாவை இசை தவிர்த்து அரசியலாக உங்கள் இசத்திற்கு தகுந்தபடி புரிந்து கொள்ள உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ஒரு கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் இருக்கும் போது ஒரு அம்பேத்கரிஸ்ட் இருக்க கூடாத என்கிற கேள்வியில் 100% நியாயத்தை முழுமையாக அப்படியே உணர்கிறேன் உங்களோடு உடன் படுகிறேன்தலித்துகள் தனித்து போட்டியிடக்கூடாதா நல்ல கேள்வி தான் ஆனால் அதற்கான உடனடி எதார்த்த சூழல் பார்பனியம் நேரடியாக யாக அதிகார போதையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களைநடமாடும் பிணங்களாக சித்ரவை செய்யும் இந்த சூழலில் உங்கள் குரல் நியாயமானதா மொத்தமாக சேர்ந்து நின்றால் வெல்ல முடியுமா? சந்தேகம் நிலவும் இந்த சூழலில் நீங்கள் பேசுவது சினிமாத்தனமாக இல்லையா? உங்களை நாங்கள் சினிமாக்காரன் என்பதையும் அல்லவா அரவணைக்க விரும்புகிறோம்!

தலித்துகளுக்குள்ளும் தலைவலிகள் இருக்கத்தானே செய்திறது ஆக எல்லா ஜாதிக்குள்ளும் சரி செய்ய வேண்டியதும் புறந்தள்ளே வே ண்டியதும்இருக்கிறது என்பது உண்மைதானேஆக இந்த சாட்சி நிலையில் நின்று பொது எதிரியை அடையாளம் கண்டுநட்பு முரணை சரி செய்து பகை முரணை முறியடிக்க ஒன்றினைவோம் பொது எதிரியான பார்பனியத்தை வென்று காட்டுவோம் என்பது தான் எம்மை போன்ற சாதரணமானவர்களின் புரிதல் அதில் சிறிதேனும் அறிவு நாணயமோ அரசியல் நாணயமோ இருக்கும் என்று நம்பி விவாதத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் குறிப்பாக உணரே ண்டிய ஒன்று காலம் அறிந்து கூவும் சே வல் பே ால அரசியல் களத்திலும் சரி தலித் செயல்பாட்டிலும் சரி மிகத்தெளிவாக களம் ஆடுகிறார் தோழர் திருமா அவர்கள் அவர்தான் அவர்தான் கால எதார்த்தத்தை புரிந்து கொண்டு மிகத் தெளிவாக பேசுகிறார் உண்மையில் நட்பு முரணை கூர்தீட்டே ண்டிய நேரமல்ல இது பகை முரணை அழித்தொழிக்க வேண்டிய அபாயச் சூழல் புரிந்து கொள்வோம் அம்பேத்கரிஸ்டுகளே, பெரியாரிஸ்டுகளே, கம்யூனிஸ்டுகளே, மனித உரிமை செயல்பாட்டாளர்களே, எழுத்தாளர்களே, ஜனநாயகவாதிகளே பெண்ணியவாதிகளே சமூகநீதி செயல்பாட்டாளர்களே குறைந்தபட்டஅறம் பேசுகிற அரசியல் வாதிகளே ஒன்றிணைவோம் ஒன்றிய பாசிதத்தை வீழ்த்த தற்காவிக தீர்வுக்காக வேயேனும் கரங்களைவலுப்படுத்திக் கொள்வோம்

இறுதியாக ஒன்று தமிழ்நாட்டில் BJP நுழைவதற்கு OBC க்கள் மட்டுமே காரணமா? அவர்களும் காரணம் அதிமுக திமுக ஓட்டரசியல் சூழலும் காரணம் என்பதில் இருவேறு கருத்தில் லை எமக்கு சேரி சுவர்களில் மோடி சிரிக்கவில்லையா ஏன் கண்ணன மூடிக் கொள்கிறீர்கள் தயது செய்து சாட்சி மனநிலையில் பாருங்கள் மாயாவதி காவியக்குள் மாயாமாகவில்லையா? ராம்விலாஸ் பஸ்வான் சனாதத்தில் புஸ்வானம் ஆகவில்லையா அத்வாலே என்ன ஆனார் நம்ம ஊரில் தடா சந்திரசேகர் , பூவை ஜெகன்மூர்த்தியார், ஏர்போர்ட் மூர்த்தி, கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன், தலைகீழ் மாற்றமாகி தலித் னாலே வாயிலேயே வெட்டுவேன் னு சொன்ன அரிவாள கூர்மைபடுத்துவதா ? குப்பையில் புடுங்கி வீசுவதா தலித்துகளுக்குள்ளும் தலைவலிகள் இருக்கத்தானே செய்திறது ஆக எல்லா ஜாதிக்குள்ளும் சரி செய்ய வேண்டியதும் புறந்தள்ளே ண்டியதும்இருக்கிறது என்பது உண்மைதானேஆக இந்த சாட்சி நிலையில் நின்று பொது எதிரியை அடையாளம் கண்டுநட்பு முரணை சரி செய்து பகை முரணை முறியடிக்க ஒன்றினைவோம் பொது எதிரியான பார்பனியத்தை வென்று காட்டுவோம் என்பது தான் எம்மை போன்ற சாதரணமானவர்களின் புரிதல் அதில் சிறிதேனும் அறிவு நாணயமோ அரசியல் நாணயமோ இருக்கும் என்று நம்பி விவாதத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆதவன் தீட்சியாவோடு ஒத்துப் போகிறேன்அவர் வழிதான் ஊர் போய் சேருவதற்கு திசைகாட்டி என நம்புவதால் திரும்புவும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன் நட்பு முரணை கூர்தீட்டே ண்டிய நேரமல்ல இது பகை முரணை அழித்தொழிக்க வேண்டிய அபாயச் சூழல் புரிந்து கொள்வோம் அம்பேத்கரிஸ்டுகளே, பெரியாரிஸ்டுகளே, கம்யூனிஸ்டுகளே, மனித உரிமை செயல்பாட்டாளர்களே, எழுத்தாளர்களே, ஜனநாயகவாதிகளே பெண்ணியவாதிகளே சமூகநீதி செயல்பாட்டாளர்களே குறைந்தபட்டஅறம் பேசுகிற அரசியல் வாதிகளே ஒன்றிணைவோம் ஒன்றிய பாசிதத்தை வீழ்த்த தற்காவிக தீர்வுக்காக வேயேனும் கரங்களைவலுப்படுத்திக் கொள்வோம் ..

தவம் – ஊடகவியலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *