இவை மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடத் துயரங்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்வதில்லை. அதனை பிரைம் டைம் உரையாடல்களாக மாற்றவில்லை என்பதோடு ஆளும் அரசுகளின் கருத்துகளை ஒப்பிக்கும் கருவிகளாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தையும் முன்னையும் இத்தகைய ஊடகங்கள் மெல்ல மெல்ல மதிப்பிழந்து வருகின்றன. அதுவும் குறிப்பாக இந்தி மாநிலங்களின் நெஞ்சாக்குலைப் பகுதியிலே அவை செல்லாக் காசாகிவிட்டன என்பதை பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக சுதந்திர ஊடகவியலாளராக எழுச்சிப் பெற்றிருக்கும் துருவ் ராட்டியை
அதற்கொரு தகுந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நாட்டின் வலிமைமிகு அரசியல் பெயராளர்களை விட துருவ் ராட்டியின் வலைதளக் காணொளிச் சேனலுக்கி பெரும் எண்ணிக்கையில் பின்தொடர்கிறவர்கள் ( கிட்டதட்ட 2 கோடி பேர்) உள்ளனர். அவருடைய எளிய இந்தி மொழி காணொளிகள் நிறைய பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
அத்தனையும் மோடி ஆட்சியின் தோல்விகளையும் அவலங்களையும் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. த வயர் போன்ற இணையதள செய்தி ஊடகங்களே வட்டார மொழிகளில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு பார்வையாளர்கள் கூடுதலாக வருவதையும் அவை பெரும் வரவேற்பைப் பெறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
வேலையின்மை , வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தேடுதல்கள் இளையோரின் விருப்பமாக மாறியிருப்பதும் அது தேர்தல் வாக்குப் பதிவில் முதன்மைப் பங்காற்றி வருவதையும் இந்தி பகுதியைச் சேர்ந்த அறிவாளர்கள் சுட்டிக காட்டி வருகின்றனர்.
மோடியின் கடுமையான முசுலீம் வெறுப்புப் பரப்புரையும் அவருடைய தோல்வி பயத்தின் வெளிப்பாடகவே கருத வேண்டியுள்ளது. எனவே மைய நீரோட்ட ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை மோடி கூட்டத்தால் எழுதிக் கொடுக்கப்பட்டவை என்பதும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்பதை நாம் உணரலாம்.
துருவ் ராட்டியின் காணொளியைப் பகிர்ந்ததற்காவே வழக்கறிஞர் பன்சோடே மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதைக் காணும் போதே பாஜக அரசு உண்மையைக் கண்டு எவ்வளவு அஞ்சுகிறது என்பது நமக்குப் புரிகிறது.
அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் பாஜக தனது இறுதிக்கட்ட முயற்சியாக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை நம்ப வைக்க தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது.
பாஜக மக்கள் மனங்களில் இருந்து எப்போதோ தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. இனி அதனைக் கண்காணித்து அதிகார பீடத்தில் இருந்து வெளியேற்றுவதே நமது முதல் கடமை.
எழுத்தாளர் :
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours