வாழ்க்கை என்பது இருத்தலுக்கான போராட்டம். இந்தப் போராட்டத்தில் எளியோர் எதிர்கொள்ளும் உறவுச் சிக்கலை எளிமையாக , இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிற படமே J.பேபி.
தமிழில் கதை நாயகர்களை மையப்படுத்தியும் புறநிலை வாழ்க்கை நிகழ்வுக்குத் தொடர்பில்லாததுமாக பல படங்கள் அன்றாடம் வெளிவருகிறது.
தனது தாய் காணாமல் போகிறார். அவரை மீட்பதற்காக இரண்டு உடன்பிறப்புகள் செல்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் முட்டலும் மோதலும் அதிலிருந்து மீண்டு வருதலும் என்பதாக ஒரு எளிய குடும்பத்தின் கதை.
மலையாளத்தில் எளிய மனிதர்கள. வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கதைக்களமாகக் கொண்டு நல்ல திரைக்கதையில் திரைப்படங்கள் வருவது பெரும்போக்காக இருக்கும் சூழலில் தமிழில் அந்த முயற்சியை இயக்குநர் சுரேசு மாரி முன்னெடுத்திருக்கிறார். இரைச்சலும் வெட்டும் குத்துமாக தமிழ்த்திரைப்படங்கள் வெளிவரும் காலத்தில் ஒரு அமைதியான திரைப்படம்.
Leave a Reply