கலைடாஸ்கோப் , தோழர் முத்துக்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜில்லு படம் திரையிடல் மதுரையில் நேற்று நடைபெற்றது.
பாலின சமத்துவம் குறித்து மலையாளத் திரைப்படங்கள் நிகழ்த்திய அளவுக்குக் கூட தமிழில் திரைப்படங்கள் வரவில்லை.
ஜில்லு தமிழத் திரையில் புறக்கணிக்கப்பட்ட பால்ப்புதுமையினர் எனும் சமூகக் குழுவினரைப் பற்றிய உரையாடல்களை முன்வைத்துத் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
திருநங்கைகள் வாழ்வு போலவே ஒரு சிதறலான கதைக்கூறலை அந்த சமூகத்தின் உள்வட்ட வாழ்வு , பிழைப்பு நிகழ்வுகளைக் குவியமாக்கியிருக்கிறது. திருநங்கயரே கதைப் பாத்திரங்களை ஏற்று நடத்தியுஏஃளனர்.
திருநர் சமூகக் குழு பற்றிய தொடக்க முயற்சி என்ற அடிப்படையில் வரவேற்போம்.

குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply