“ஒரு மர்மமான மசாலா படம் நித்யானந்தாவின் “கைலாசா இன்றுவரை “அட்ரஸ்” இல்லை.கூகுள் மேப்பில் தேடினாலும் கிடைக்கவில்லை…டிஜிட்டல் நாடு…இன்டர்நெட் தேசம்.
தென் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள ஈக்வடார் நாட்டின் ஒரு சிறிய தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி, அங்கே இந்த நாட்டை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது..
தனி கொடி, பாஸ்போர்ட், மற்றும் அரசாங்க முத்திரைகள் உடன்
அதிபராகவே அறிவித்துக் கொண்டுள்ளார்..கல்வித் துறை, சுகாதாரத் துறை எனத் தனித்தனி அமைச்சகங்கள் இருப்பதாகவும் இணையதளத்தில் காட்டுகிறார்.இணையதளம் வழியாக “இ-சிட்டிசன்ஷிப்” (E-citizenship) அல்லது பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாமாம்..
அங்கே உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அங்கே செல்வதற்கு விமானம் அல்லது கப்பல் வசதி உண்டா என்பது ஒரு பெரிய மர்மம்
.

தங்கம் விக்கிற விலையில் இவர் நாட்டு கரன்சி 11.6 கிராம்.. ‘கைலாசியன் டாலர்.. இவர் நாட்டுல தங்கம் தவிர, தானியங்கள் மற்றும் நவரத்தின கற்களையும் பண்டமாற்று செய்யப் போறாராம்..!
தங்க அரியணை பெரும், பெரும் ஆரங்கள்.. தங்க கிரீடத்தோட தங்கமா ஜொலிக்க கூடிய இந்த நித்தியானந்தா கைலாசா ‘தங்கத்தை’ காட்டி இழுக்குது. உண்மையிலேயே அங்க தங்கம் இருக்கா இல்லையான்னு யாருக்கும் தெரியாது.
சர்வதேச சட்டப்படி ஒரு நிலப்பரப்பை வாங்கி நாடாக அறிவிப்பது அவ்வளவு எளிதல்ல. மற்ற நாடுகள் அதை அங்கீகரிக்க வேண்டும். இதுவரை எந்த நாடும் கைலாசாவை அங்கீகரிக்கவில்லை..
கைலாசாவிற்கு என்று தனியாக விமான நிலையமோ அல்லது நேரடி விமான சேவையோ கிடையாது.சீடர்கள் முதலில் ஈக்வடார் (Ecuador) அல்லது அதற்கு அருகில் உள்ள கரீபியன் நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் செல்வார்கள். அங்கிருந்து ரகசியமாகச் சிறிய படகுகள் அல்லது தனியார் சார்ட்டர் விமானங்கள் மூலம் குறிப்பிட்ட தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
அது ஒரு நாடே இல்லை என்பதனால் நாம் முறைப்படி எந்த ஒரு தூதரகத்திலும் (Embassy) விசா வாங்க முடியாது.
கைலாசாவின் இணையதளத்தில் விண்ணப்பித்து, அவர்கள் ‘தகுதியானவர்’ என்று தேர்வு செய்தால் மட்டுமே ரகசிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இது சட்டப்பூர்வமான பயணம் அல்ல. ஒருவேளை நாம் காணாமல் போனாலோ, வேறு சிக்கல்கள் வந்தாலோ இந்திய அரசாங்கத்தால் நம்மைக் காப்பாற்றுவது கடினம்..அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியாதவரை இந்தியக் காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது.
அவர் இருப்பது ஒரு தனித்தீவு என்றால், அங்கே சட்டமும் அவர்தான், நீதியும் அவர்தான். அங்கே அவருக்கு என்று ஒரு சிறு “தனியார் பாதுகாப்புப் படை” (Mercenaries) இருக்கலாம்.
அவர் மீது ‘ப்ளூ கார்னர்’ நோட்டீஸ் உள்ளது. அரசாங்கம் ‘ப்ளூ கார்னர்’ நோட்டீஸ் போட்டிருக்கிறது என்றால், “அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் பிடிப்பதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன” என்று அர்த்தம்.
இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் சீடர்களின் நிதி.. இந்தியாவில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் நிலங்களில் இருந்து வரும் வருமானம்.
ஆன்லைன் வகுப்புகள், ஆன்மீகப் பொருட்கள் விற்பனை.. என பணம் கொட்டுகிறதாம்….
கைலாசாவுக்குப் போனா நிம்மதி கிடைக்கும்னு நம்புறது… கானல் நீரைத் தாகத்துக்குக் குடிக்க ஓடுற மாதிரி.
இது ஒரு ‘மனோரீதியான வியாபாரம்’.
நம் குடும்பத்தில் இருக்கும் சிறிய சிக்கல்களை “கர்ம வினை” அல்லது “தோஷம்” என்று கூறி, நம்மை நிலைகுலைய வைப்பார்கள்.பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குவார்கள்…

“எங்கள் தீவுக்கு வாருங்கள்”, “இந்த யாகம் செய்யுங்கள்” என்று கூறி, நம் பயத்தைப் பணமாக மாற்றுவார்கள்.
”இவ்வளவு பேர் போகிறார்களே, அப்போ அங்கே ஏதோ இருக்கும்” என்று அந்த மந்தையில் ஒருவராக மாறுவதுதான் அவர்களின் வெற்றி.
உண்மையான நிம்மதி என்பது வெளியூரோ, வெளிநாடோ அல்லது ஒரு தீவோ கிடையாது. அது நம் வாழ்க்கை முறையில்தான் இருக்கிறது:
வயதான பெற்றோரைக் கவனிப்பது, துணையுடன் நேரத்தைச் செலவிடுவது, பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது… இந்த கடமைகளை நிறைவேற்றினாலே நம் மனசாட்சி மிகப்பெரிய நிம்மதியைத் தரும்.உண்மையான கைலாசம் நம் வீடுதான்..
புத்திதான் குரு! உழைப்புதான் தெய்வம்!”
Amma Shagasraa

Leave a Reply