சமூகநீதி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் 2009 ம் ஆண்டு பட்டியலின பிரிவுகளில் மிகவும் பின் தங்கியுள்ள இட ஒதுக்கீட்டின் பயனை அடையாத மக்களான அருந்ததியர் மக்களின், இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்டு உள் ஒதுக்கீட்டை நிறைவேற்ற சில தலித் தலைவர்களின் எதிர்ப்பையும் புரிந்து கொண்டு உள் ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துவதில் உறுதியாக இருந்தார்.
அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி அவர்களும் பாஜக பாமக ராமதாஸ் கூட்டனி தேர்தலில் (2021) வெற்றி பெறுவதற்காக வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கியது போல் அல்லாமல்
அரசியல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து ஒய்வு பெற்ற நீதிபதி ஜனர்த்தனன் கமிசனை நியமித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து கட்சி கூட்டம் நடத்தி எதிர்த்த சில தலித் தலைவர்களையும் ஒருங்கினைத்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களை பிரிக்கிறார் என கலைஞர் அவர்களை அனைத்து கட்சி கூட்டத்திலேயே வசை பாடி இது கருப்புநாள் என கூறி வெளியேறினார் புதியதமிழகம் கிருஷ்ணசாமி (கிருஷ்ணசாமி அப்போது பட்டியலினமக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது)
இதையெல்லாம் மீறி அவருக்கு தெரிந்தது சமூகநீதி என்ற ஒன்றுதான் எனவேதான் ஓட்டு பெற வேண்டியோ அல்லது மற்ற பிரிவினரின் ஓட்டு பறி போய்விடும் என்றோ கவலை கொள்ளாதவராக தலைவர் கலைஞர் இருந்தார்
தலித் பிரிவில் பெரும்பான்மையான தலைவர்கள் எதிர்த்த நிலையிலும் கலைஞர் அதை சட்ட ரீதியாகவே நடைமுறைபடுத்தினார் அதை எதிர்த்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நீதிமன்றம் சென்றார் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்ற 7 பேர் அமர்வு குழு என யாரலும் அதை நீர்த்து போக செய்ய முடியாத அளவிற்கு அரசியலைப்பு சட்டம் 14 பிரிவு வழங்கிய உரிமையின் படியே வழங்கியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வும் அங்கீகரித்து இருக்கிறது எனில் தலைவர் கலைஞர் அவர்களின் சமூகநீதி பார்வைதான் முக்கிய பங்கு வகிக்கிறது

வன்னியர்களை MBC பட்டியலில் இனைத்தது
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நலதுறை உருவாக்கியதும்
இசுலாமியர் க்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்தியது
பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% ஆக உயர்த்தியது பழங்குடிகளுக்கு 1% தனியாக வழங்கியது என அனைத்தும் சமூகநீதி பார்வையில்தான் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்
தலைவர் கலைஞரின் சமூகநீதி பார்வையில் பாதிக்கப்பட்ட பார்ப்பனியம் எனும் நச்சுபாம்பு
ஒவ்வொரு ஜாதியிலும் கலைஞரை துரோகி என வசை பாட கூலி கும்பலை உருவாக்கியுள்ளது எச்சரிக்கையோடு எதிர்கொள்வோம் முத்தமிழறிஞர் கலைஞரை துரோகி என்பவன் பார்ப்பனியத்தின் அடியாளே கூலி கும்பலை அம்பலபடுத்துவோம்
இட ஒதுக்கிட்டின் தேவையுள்ளவரை கலைஞர் வாழ்வார்.
மா.முத்துக்குமார்
செய்திதொடர்பாளர் தமிழ்புலிகள்கட்சி.
Leave a Reply