அன்புத் தோழர்களே,
நாளை (2024 மே 31) மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்,
மோடி அரசே!
தேர்தல் ஆணையமே!
மக்கள் தீர்ப்பைத் திருடாதே!
என்கிற முழங்கத்தின் அடிப்படையில் ஒன்றுகூடல் நடைகிறது.
எதற்கு இந்த ஒன்றுகூடல்?
இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதற்காக…
தேர்தல் ஆணையமும், நீதித் துறையும் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதைச் சுட்டிக் காட்டி, 102 குடிமைப் பணியாளர் நடப்புச் சூழலின் தீவிரத் தன்மையை உணர்த்தும் வகையில், இந்திய குடியரசும் அரசியலமைப்பு நெறிமுறைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், நீதித் துறைக்கும், குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இதே விசயங்களுக்காக தீஸ்தா செதல்வாத் முதலான சிவில் உரிமை செயல்பாட்டாளர்களும், பரகலா பிரபாகர் முதலான நாடறிந்த அறிவாளிகளும் போராடி வருகின்றனர். ஜனநாயகத்தைக் காப்பாற்ற குடிமக்கள் விழிப்புணர்வோடு ஒன்றுதிரள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் நியாயமாக அறிவிக்கப்பட வேண்டும், புதிய அரசாங்கம் அமைப்பதில் குதிரைபேரங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது அரசியல் கட்சிகளின் பிரச்சனை மட்டுமல்ல. குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருடைய பிரச்சனை.
ஆகவே, இதில் நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு உள்ளோம் என்பதைக் காட்ட, நாளை மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் நடக்கும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கின்றோம்.
வாக்களித்த்தோடு நம் கடமை முடியவில்லை.
நம் வாக்குகள் திருடப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டியது நம் கடமையே!
– தமிழ் காமராஜ்.
+ There are no comments
Add yours