கல்பாக்கத்தில் மோடி – Modi at Kalpakkam

4 min read

இந்தியாவின் வட மாநிலங்களில் கோவில் பூசாரி வேடமிட்டு மக்களைக் கவர நினைக்கும் மோடி, தென் மாநிலங்களில் வளர்ச்சியின் நாயகனாக தன்னை முன்னிறுத்தும் முயற்சிதான் அவரது இன்றைய கல்பாக்கம் வருகை. அயோத்தி கோவில் மட்டுமல்ல, அறிவியல் கோவிலும் கட்டுகிறோம் என்று தென்னிந்திய மக்களை நம்பவைக்க நடத்தப்படும் வெற்று தேர்தல் நாடகம் இது.

பத்தாண்டு காலம் வீணாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இந்தியாவின் அணுசக்தித்துறை அமைச்சரான பிரதமர் திடீரென இயங்கத் துவங்குவதற்கு ஒரு நிர்வாகரீதியான காரணமும் இருக்கிறது. அதாவது அணுசக்தித்துறை சொல்வதொன்றும், செய்வதொன்றுமாக இருப்பது பாஜக பிரதமருக்கேப் பொறுக்கவில்லை.

இந்த மந்தநிலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கல்பாக்கத்தில் கடந்த இருபதாண்டுகளாகக் கட்டப்பட்டுக் கொண்டே….யிருக்கும் அதிவேக ஈனுலைத் திட்டம்தான். இந்தத் திட்டம் கடந்த 1980-களில் திட்டமிடப்பட்டு, 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் 2010-ஆம் ஆண்டு மின் உற்பத்தித் தொடங்கும் என்றார்கள். பின்னர் 2017-ஆம் ஆண்டு யூலை மாதம் இறுதிக்கட்ட வேலைகள் நடப்பதாகவும், இதோ வருகிறது மின்சாரம் என்றும் அறிவித்தார்கள். அதன்பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, 2021 டிசம்பரில் இறுதியாக, உறுதியாகத் தொடங்கும் என்றார்கள். இப்போது 2024-ஆம் ஆண்டு நடக்கிறது. இருபது ஆண்டுகள் கடந்தும் அதிவேக ஈனுலைத் திட்டம் எங்கேயும் போகவில்லை.

ரூபாய் 3,500 கோடி செலவாகும் என்று தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 7,700 கோடி ரூபாயைத் தாண்டி செலவுகள் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் அங்கே எதுவும் நடந்தபாடில்லை. செலவுகள் மட்டும் எகிறிக் கொண்டிருக்கின்றன.

இப்படியாக அணுசக்தித்துறை “தின்று விளையாடி இன்புற்றிருக்க,” மோடி அரசோ பெரும் கனவுகளுடன் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பத்து அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், எதிர்வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் மேலும் இருபது அணுமின் நிலையங்கள் கட்டப்படும் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது.

தற்போது வெறும் 7,480 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுமின் கழகம், என்.டி.பி.சி. எனும் தேசிய அனல்மின் கழகத்தோடுக் கைகோர்த்து, 20 முதல் 40 கிகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போகிறது என்றெல்லாம் அளந்துவிடுகிறது அரசு. “சிறு வடிவமைக்கப்பட்ட அணுஉலைகள்” (Small Modular Reactors) நாடெங்கும் நிறுவப்பட்டு, மின்சார ஆறு நாடெங்கும் ஓடும் என்றும் அள்ளிவிடுகிறது அரசு.

ஆனால் அணுசக்தித்துறையோ அசைவதாக இல்லை. எனவே பிரதமர் தேர்தல் நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயற்சிக்கிறார். அதிவேக ஈனுலைத் திட்டத்தை தேர்தல் பரப்புரைக்கும் பயன்படுத்திவிட்டு, தேரைக் கொஞ்சம் தள்ளிவிடவும் முடியுமா என்று பார்க்கிறார். எனவேதான் பெரிய முக்கியத்துவம் இல்லாத, பொறியாளர்கள் செய்யவேண்டிய ஒரு நடவடிக்கையை, அதாவது எரிபொருள் கட்டுப்பாட்டு இயந்திரம் (Sub-Assembly Control Rod) ஒன்றைப் பொருத்துவதற்கு ஏராளமானப் பொருட்செலவில் பிரதமர் கல்பாக்கம் வருகிறார்.

இந்த அதிவேக ஈனுலை என்பது ஒரு தோல்விகரமானத் திட்டம். ஜப்பானியர்களால், அமெரிக்கர்களால் கைவிடப்பட்டத் திட்டம். அதை நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்று கதைக்கிறார்களே தவிர, காரியம் எதுவும் கல்பாக்கத்தில் நடந்தபாடில்லை.

கல்பாக்கம் வருகிற பிரதமர் அண்மையில் திருநெல்வேலிக்கு வந்தபோது, அப்படியே கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஒரு விசிட் அடித்திருக்கலாமே? முதலிரண்டு உலைகளில் காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பெரும் ஊழல்கள் நடந்திருப்பதாக தொடர்ந்து இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலிரண்டு உலைகளும் சரியாக வேலை செய்யவில்லை. அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுகளைப் பாதுகாத்துவைக்க அங்கே இடைநிலைக் கழிவு மையங்கள் எதுவும் கட்டப்படவில்லை. கூடங்குளம் 3-4 அணுஉலைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வரவில்லை. உக்ரெய்ன் போரைக் காரணம்காட்டி தப்பிக்கிறது ரஷ்யா. மக்கள் பணம் வகைதொகையின்றி விரயம் செய்யப்படுகிறது கூடங்குளத்தில். இவை பற்றியெல்லாம் பிரதமர் ஓர் ஆய்வு செய்திருக்கலாமே? வளர்ச்சியின் நாயகன் வளர்ச்சி விரயங்கள், ஊழல்கள், ஊதாரித்தனங்கள் பற்றியெல்லாம் நாட்டுக்கு ஒரு வகுப்பெடுத்திருக்கலாமே?

இல்லாத ஊருக்குப் போகாத வழியைத்தான் இந்திய அரசும், அணுசக்தித்துறையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் சும்மாச் சொல்லும் கதைகள் இவை என்று இவர்களின் விசப்பரீட்சைகளை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டியது நம் வழித்தோன்றல்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
மார்ச் 4, 2024.


(தொடர்புக்கு: சுப. உதயகுமாரன்)

Modi, who is trying to impress the people in the northern states of India by posing as a temple priest, is an attempt to present himself as a hero of development in the southern states, his visit to Kalpakkam today. This is an empty election drama to convince the people of South India that they are building not only the Ayodhya temple but also the temple of science.

There is also an administrative reason why India’s nuclear energy minister, the Prime Minister, suddenly started running after a decade of staring in vain. In other words, it is not up to the Prime Minister of BJP to do what the nuclear department says and does.

The best example of this slowdown is the high-speed Einulai project in Kalpakkam, which has been under construction for the past two decades. The project was planned in the 1980s and launched in 2004. First they said that power generation will start in 2010. Then in July 2017, they announced that the final phase of work was going on and that electricity was coming. After that they made an announcement in August 2020 and finally in December 2021 they said it will start for sure. Now the year 2024 is happening. Twenty years later, the high-speed rail project has gone nowhere.

While it was initially planned to cost Rs 3,500 crore, the cost has now crossed Rs 7,700 crore. Nothing has happened there yet. The costs are just skyrocketing.

In this way, the Modi government is taking chances with big dreams so that the nuclear industry can “eat and play”. The Modi government has announced that ten nuclear power plants are already under construction and twenty more nuclear power plants will be built by 2031.

The Nuclear Power Corporation of India, NTPC, which is currently generating only 7,480 MW of electricity. The government is measuring that 20 to 40 kilowatts of electricity is going to be produced in collaboration with the National Electricity Corporation. “Small Modular Reactors” (Small Modular Reactors) will be installed all over the country and the government promises to run the electricity river all over the country.

But the nuclear industry is not moving. So the Prime Minister is trying to hit two birds with one stone at election time. He is looking to see if he can push the toad a little by using the high-speed eNul scheme for election campaigning. That is why Prime Minister Kalpakkam is coming to Kalpakkam at huge expense to install a fuel control rod (Sub-Assembly Control Rod) which is not a very important step to be done by the engineers.

This high-speed eNula was a failed project. A plan abandoned by the Americans, by the Japanese. Nothing has happened in Kalpakkam, except for the stories that we are achieving it.

When the Prime Minister coming to Kalpakkam came to Tirunelveli recently, could he have paid a visit to Kudankulam Nuclear Power Plant as well? The people of the region have been continuously alleging that huge corruptions took place in the first two furnaces during the Congress regime. The first two furnaces did not work properly. No intermediate waste facilities have been built there to store the wastes coming out of them. The spare parts required for Kudankulam 3-4 reactors are not coming from Russia. Russia gets away with Ukraine war. People’s money is being squandered indiscriminately in Kudankulam. Could the Prime Minister have done a study on all these? Could the hero of development have given a lesson to the country about development wastage, corruption and extravagance?

The Indian government and the nuclear department have been constantly telling us that we should not go to the non-existent town. However, we cannot easily take their criticisms that these are stories told by people who are living a healthy life. It is our duty to our descendants to shut down the nuclear reactors at Kalpakkam and Kudankulam, which are causing great danger to Tamil Nadu and the Tamil people.

People’s Movement Against Nuclear Power
March 4, 2024.


(Contact: Subha. Udayakumaran)

You May Also Like

+ There are no comments

Add yours