புகழ்பெற்ற சென்னை பல்கலைக் கழகம் ,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கட்டிப்பாட்டிலுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
பல பல்கலைக்கழகங்களின் அடித்தளமாக விளங்கும் சேமிப்பு மூலதனம் ( corpus fund) குறுக்கு வழியில் கொள்ளையடிக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை தொடர்கிறது.
உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்வதற்கு அடிப்படையாக விளங்கியது கடந்த ஆட்சிகளில் அமைக்கப்பட்ட மாநிலப் பல்கலைக்கழகங்களேயாகும்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பல ஆய்வுத் திட்டங்களுக்கு நிதி இல்லாமல் ஆய்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி மாணவர்களுக்குப் போதிய நிதி நல்கை கிடைக்கப் பெறாததால் ஆய்வு மாணவர்கள் ஆய்வுகளை பகுதியிலே விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் தொடர் நிதி வெட்டும் அதற்கு முதன்மையான காரணமாகும்.
அதே நேரத்தில் பல்கைலக்கழக நிர்வாகங்களில் ஊடுருவியள்ள ஊழல் , அதிகார வகுப்பு கொள்ளைக் கும்பலும் பல்கலைக்கழகங்களைக் கொள்ளையடித்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
பல்கலைக்கழகங்களைத் தமிழ்நாடு அரசு கைக்கொண்டு நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு ஆளுநர் தொடர்ந்து தடைபோட்டு வருகிறார்.
ஆளுநர் தலையீட்டின் பெயரால்
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாத நிலைமை நீடிக்கிறது.
இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாநில அரசின் ஆணையின்றி ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புத் துணைவேந்தர் பதிவாளரை நீக்கிய செயல்கள் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளன.
மாநிலத்தில் ஆளுநரின் தலையீட்டால் பல்கலைக்கழகங்களில் எவ்வித மாற்றங்களையும் செய்ய முடியாமல் தமிழ்நாடு அரசு தவித்து வருகிறது.
ஊழியர் சிக்கல் , பல்கலைக்கழைங்களில் ஊழல் , நிர்வாகச் சீர்கேடுகள் தலைவிரித்தாடுகின்றன. இது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில் உள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் உருவான மாநிலப் பல்கலைக்கழகங்களைக் காப்பதும் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதும் மக்கள் ,கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடைய கடமை.
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடியை உணர்ந்து தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலைப் பாதுகாக்கவும் மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்டவும் ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்!
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours