நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்நாடு அதனை எதிர்த்துப் போராடி வருகிறது.
2024 நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டித்து நாடு முழுக்க நீட் தேர்வுக்கு எதிரான கருத்து அனலாய்க் கிளம்பியிருக்கிறது.
நீட் தேர்வு குறித்து தகுதி , திறமை என்றெல்லாம் வாதிட்ட அதன் ஆதரவாளர்கள் இன்று வாய்ப் பொத்தி அமைதி காத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நீட் தேர்வில்
வினாத்தாள் வெளியானது ; குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களில் முகவர்கள் மூலம் தேர்வெழுதியவர்கள் முதல் இடங்களைப் பிடித்தது; 1563 மாணவர்களுக்கி கருணை மதிப்பெண் வழங்கியது ; நீட் தேர்வு மதிப்பெண் பெற்றதில் NTA வின் மோசடி என அதன் உள்ளுக்குள் ஒளிந்திருந்த உழைக்கும் மக்கள் பகைக் கொள்கை பொது வெளிக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டு நீட் விலக்குக் கோரிக்கையின் அரசியல் ஞாயம் இப்போது தான் நாடு தழுவிய அரசியல் முழக்கமாக மாறியிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீட் எனும் அநீதிக்கு நிலையாக முடிவுகட்டுவோம்!
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மக்கள் திரளை தட்டி எழுப்புவோம்!
Leave a Reply