கலை என்பது மக்களுக்கானது ராயன் அதிதவன்முறையே மட்டுமே பேசுகிறது இரண்டாவது முறையாக தனுஷ் இயக்கி நடித்த படமான ராயன்
அசுரன் வடசென்னை போன்ற படங்களின் வெற்றி வன்முறையால்தான் என நம்பியிருக்கிறார் போல அதற்குள் ஒடுக்கப்பட்ட மக்களின் கதையும் கலந்து சொல்லபட்டது என்ற புரிதல் தனுஷ்க்கு இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது ராயனை இயக்கியதை பார்த்தால்
நெல்லை மாவட்டம் ஒலை குடிசை மூன்று சிறுவர்கள் ஒரு தங்கை என தொடங்கி வெளியூர் செல்லும் பெற்றோர்கள் வீடு திரும்பாத நிலையில் தன் தங்கையை பணத்திற்கு விற்க முயலும் பூசாரியே கொலை செய்து விட்டு சென்னை செல்கிறார்
படத்தில் பில்டப் கொடுப்பதற்காகவே ஒரு கேரக்டர் செல்வராகவனை சந்திக்க கடுமையான உழைப்பின் மூலமாக தன் தம்பிகள் தங்கையை வளர்க்க ஏற்கனவே இரண்டு பெரிய ரவுடி கும்பல்களுகிடையில் ஒரு சிறிய உணவகம் வைத்து தன் குடும்பத்தை காப்பாற்றி தன் தங்கை தம்பிகளுக்காக வாழ்க்கையே தொலைக்கும் விதமான கேரக்டரில் தனுஷ்
ஒரு புறம் காவல்துறை இரண்டு ரவுடிகளையும் தீர்த்து கட்ட பிரச்சனைகளை தூண்ட மனிதர்களை மனிதராக மதிக்காத (encounter ) படுகொலைகளை செய்பவராக பிரகாஷ்ராஜ்
ரவுடி துரையின் (சரவனன்) மகன் மற்றொரு ரவுடியான சேது ( SJ சூர்யா) கும்பலால் படுகொலை செய்யபட சகோதரன் முத்துவேல்ராயன்தான் காரணம் என துரை புரிந்து கொள்ள
துரை தன் தம்பியை கொல்வதற்கு முன் முந்தி கொலை செய்ய அதற்கு படித்து கொண்டிருக்கும் தம்பியையும் பயண்படுத்த (அதற்கு முந்தைய காட்சியில் வன்முறை பாதிப்பில் தம்பி மானிக்ராயன் பாதிக்கபட்டு விட கூடாது என கல்லூரி தேர்தலில் விலகி நிற்க சொல்லிவிட்டு ) ரவுடி துரையை கொலை செய்ய படிக்கும் தம்பியை பயண்படுத்தும் முரணான காட்சியும்
ரவுடி கும்பலில் சேர வலியுறுத்தும் SJ சூர்யா வே கொலை செய்ய செல்லும் ராயன் (தனுஷ்) கும்பல் மோதலில் தன் சகோதரர்களே தனுஷை கொல்ல எந்தவித பின்னனி காரணமும் சொல்லாமல் கத்தியால் குத்துவது அதுவும் சிறுவயதில் இருந்து குடும்பத்தை பாதுகாத்த அண்ணா வே யே கொலை செய்ய முயலும் தம்பிகள் எவ்வளவு முரண் (திரைகதையில் காரனம்சொல்படவில்லை )
தன் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த கும்பலுடனே இருக்கும் தம்பிகள் சிறுவயதில் இருந்தே தங்கையே பாதுகாத்த தம்பிகள் இருக்கும் கேரக்டர் எத்தனை முரண்
தனுஷ் (துர்கா) தங்கை பாசம் மற்ற இரு சகோதரர்களுக்கும் இல்லாமல் போன காரணம் குறித்து கதை எதையும் சொல்வில்லை
கத்தி ஆயுதம் வன்முறை துப்பாக்கி கொலை என உறவுகளிடத்திலும் காரணமின்றி வலுக்கட்டாயமாக தினிக்கும் கும்பல் கதை எழுதி இயக்கி நடித்த தனுசின் மனநிலை பரிசோதிக்கபட வேண்டும் ஏற்கனவே மது கஞ்சா போதை பழக்கத்தில் அடிமையாகி உள்ள சிறு கும்பல்களை கூடுதல் வன்முறை நோக்கி நகர்த்தும் தேவையற்ற சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வன்முறை குப்பை படங்களை சென்சார் போர்டு தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.
விமர்சனம்
மா.முத்துக்குமார்.
+ There are no comments
Add yours