நீட் தேர்வில் நடைபெற்றிருக்கிற முறைகேடுகள் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த முறைகேட்டை அரங்கேற்றியதில் தேசிய தேர்வு முகமை முதன்மையான பங்காற்றியிருக்கிறது. UGC NET ,CSIR NET , PG -NEET போன்ற தேர்வுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால ஆட்சி உயர்கல்வியை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்திருக்கிறது.
பெருமளவில் வணிகமயமாக்கலும் , அதிகார குவிப்பும் கல்வி வளாகங்களில் சனநாயக பகை நடவடிக்கைகளும் கடந்த ஆட்சியில் அரங்கேற்றின . அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த முறைகேடுகளின் குவிமையமாக தேசிய தேர்வு முகமை ஆகியிருக்கிறது.
குறிப்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் இந்நாள் பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவருமான ஜெகதீசு குமார் ஆய்வுப் படிப்புகளில் இருந்து இளநிலைப் படிப்புவரை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நாடுதழுவிய பொதுத் தேர்வை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
அதுவும் குறிப்பாக ஒரு தனியார் முகமையான தேசிய தேர்வு முகமையிடம் இந்தத் தேர்வுகளை நடத்த அவர் செய்திருக்கும் கருத்தூட்ட அரசியலை ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை பேராசிரிய ர்
ஆயிசே கித்வாய் The Wire ல் எழுதிய கட்டுரையில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் ஆட்கள் கல்விப்புலத்திற்குள் புகுந்துகொண் டு பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமைகளைப் பலியிட்டு வருகிறார்கள். தேசிய தேர்வு முகமையும் தேசிய கல்விக் கொள்கையின் வழியாகத் திணிக்கப்படும் நுழைவுத் தேர்வுகளும் பெரும்பான்மை மக்களை உயர்கல்வியில் இருந்து பெரும்பான்மை மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.
இவை மிகுந்த பெருங்கேடுகளாகும்.
எழுத்தாளர் :

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply