30 ஆண்டுகால மாந்த உரிமைப் போராட்டத்திற்கு ஏற்ப்பட்ட பேரிழப்பு!
சிறப்பு முகாமில் உடல் நோவினால் துன்புற்றிருந்த சாந்தன் மறைந்திருக்கும் செய்தி ஏதிலியர் உரிமையில் நாம் அடைய வேண்டிய தொலைகல் தூரத்தைத் துலக்கமிட்டுக் காட்டியருக்கிறது.
இரண்டாம் உலகப் போர்ப் பின்னணியில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டினர் சட்டமும் , கடவுச் சீட்டு சட்டங்கள் என்ற இரண்டு சட்டங்கள் மட்டுமே இந்திய ஒன்றிய அரசால் ஏதிலியர் தொடர்பாகக் கையாளப்படும் சட்டங்களாக உள்ளன என்பது ஒரு துயரக்கதை.
ஐநா மன்றம் உருவாக்கியிருக்கக் கூடிய ஏதிலியர் ஒப்பந்தங்கள் , விதிகள் என எதிலும் கையெழுத்திடாத ஏதிலியர் தொடர்பாக சனநாயகப் பகைச் சட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கு சாந்தன் உயிரைப் போக்கியிருக்கிறது.

இந்திய ஒன்றியம் என்பது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு பகையாக உள்ள ஏதிலியர்களைப் பொறுத்த வரையில் ஒரு வழியைக் கொண்ட நரகம்.
சாந்தன் மட்டுமல்ல இந்திய ஒன்றியம் முழுக்க சிறப்பு முகாம்களில் துயருறும் ஏதிலியர்கள் துயர்துடைக்க ஏதிலியர் வரைவில் ஒன்றிய அரசைக் கெயெழுத்திட வைக்கும் அழுத்தமானக் குரல்களை எழுப்புவோம்.
சிறப்பு முகாமில் சிறைபட்டுள்ள முருகன் , செயக்குமார் , இராபர்ட் பயாசு ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுப்போம்!

Leave a Reply