சாந்தி உணர்வு…

1 min read

இந்த குறைந்தபட்ச ஜனநாயம்
ஜனிப்பதற்கு எவ்வளவு மனட்சாட்சிகள்
மன்றாடி இருக்கும்?
சாந்தி உணர்வு அவ்வளவு எளிதல்ல!

அரசியல் என்பது வெற்றுச் சொல்லா?
பிரதமர் அதிபர் ஆகும் போது
தெரியும் பிரதமரின் பிரமாதம்!

கவிதையும் கலகம் செய்யுமா?
செய்யும் ! உடல் மொழி கொலை செய்யப்படலாம் என்று
உணரும் போது துணைக்காலும்
தூணாய் எழும்…

அரசியல் அன்னியம் அல்ல
அது இருத்தலின் உறுதி பத்திரம்
என உணரும் தருணமே
தேர்தல் பத்திரங்களின்
விசமம் புரியும்!

யாம் அடிப்படையில்
இரை பொறுக்கிகள் மட்டுமே
என்ற போதும்
சில சேகுவேராக்களின் ரத்தம் மட்டும்
வரலாற்றில் சூடானது எங்கனம்?

மூளை சாணி உருண்டையாகுமா?
மூத்திரத்தையும் உறிஞ்சும்
நாக்குகள் இருப்பின்
இங்கே எதுவும் நடக்கும் தான்..

இது மோடியின்
கண்ணாடியை மாற்றம் தருணம் அல்ல
அம்பேத்கரின் பேரனுக்கும் உத்ரவாதம்
இல்லை அரசியல் அமைப்பு சட்டத்தை
கங்கையில் விட்டாலும் ஆச்சரியம்
இல்லை!!

மாற்றம் மறந்தால்
உலக அதிசயத்தில் மும்தாஜ்ஜிற்கு
இடமில்லை அது சீதையின்
சமாதியாய் மாறும்..!!

புரட்சி புண்ணாக்கிற்காக
மருகவில்லை யாம் ..
ஜனாதிபதி விதவை அல்ல
பிரதமர் அதிபர் அல்ல என்பதை
உறுதி செய்யுங்கள் ஜனங்களே..
குறைந்த பட்சம்!!

– தவம்

You May Also Like

+ There are no comments

Add yours