படம் 1997ல் வேலூர் மாவட்டதில் தொடங்குகிறது.
மூன்று காவல்துறை அதிகாரி ,ஒரு விசாரணை கைதியை வேலூரிலிருந்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று , அந்த கைதியை ஆஜராக வைக்க வேண்டும், இதற்குள் நடக்கும் சுவாரஸ்யம் அந்த கைதியின் பின்புலம் , அவர் எதற்காக சிறைக்கு வந்தார் என்ற பயணமே சிறை படத்தின் உடைய கதை .
ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் பொது மக்களிடம் குறைந்தபட்ச அதிகாரம் மட்டுமே காட்ட உரிமை உண்டு ; அதை எப்போது யாருக்காக ,யாரிடம் காட்ட வேண்டும் என்பதையும் , அப்படி தவறாக காட்டினால் , கடைநிலை சாமானியர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் ; சரியாக உதவினால் எவ்வளவு நல்ல மாற்றம் நிகழ்கிறது என்பதையும்; மற்ற போலீஸ் படங்களை போல ரொம்ப Cringe தனம் செய்யாமல் , மிக உண்மைக்கு நெருக்கமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் Suresh Rajakumari .

இந்த படத்தில் கடைநிலை காவலரின் துயரங்கள் , உயர் அதிகாரிகள் அவர்களின் மீது செலுத்தும் அதிகார மீறல், காவல்துறையின் யாரும் பாக்காத ஒரு பக்கத்தை மிக சிறப்பாக காட்டியதோடு; போலீஸ் வேலைக்கு எதற்காக வருகிறீர்கள் , வந்து யாருக்காக சேவை செய்ய போறீங்க .. உங்களுடைய அதிகாரத்தை மக்கள்கிட்ட எப்படி காட்ட வேண்டும் என்ற அதிகாரிகள் பயற்சி வகுப்புகள் மிக மிக அவசியம் என்பதை இயக்குனர் தமிழ் அவருடைய முந்தைய படமான டாணாக்காரன் போலவே எழுதியிருப்பதை பார்க்க முடிந்தது .

மேலும் படத்தில் பேசப்பட்ட மதநல்லிணக்கம் , இன்று பேசப்படவேண்டிய மிக முக்கிய அம்சமாகும் . ( இசுலாமிய சகோதரர்கள் மீது ஏவபடும் மதவெறுப்பு ) ஒரு சில மத பிரச்சாரத்தின் வழியாக செய்த அரசியலின் விளைவுகளை எல்லாம் மிக அருமையாக கையாண்டுருக்கிறது இந்த படம் .
இன்ஸ்பெக்டர் : Long escort வந்திருக்கீங்க .. Bullet அ எதுக்கு Load பண்ணீங்க ?
Accused escort officer : Accuse முஸ்லீம் சார் !!
இன்ஸ்பெக்டர் : Dai .. நானும் முஸ்லீம் தான் டா !!
என்ற வசனங்களில் நமது கைதட்டல்களை மனதார வாங்கி கொள்கிறார்கள் (இது போன்ற பல வசனங்கள்)
இரண்டாம் பாதியில் சிறு நிமிடங்கள் மட்டுமே வருகிற மூணார் ரமேஷ் அவர்களின் நடிப்பு ; படம் முடிந்த பின்னும் நம் மனதில் நின்று பேசுகின்றன ,


மற்றபடி விக்ரம் பிரபு,அக்சய் குமார் , அமிஷா இவர்கள் மூன்று பேரின் நடிப்பும் மூன்று டிராகன் Template போல தான் ரொம்ப சிறப்பாக இருந்தது , அதே நேரத்தில் இறுதியில் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை !!
படத்தின் இறுதியை, அப்துல் அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவே நான் பார்க்கிறேன் .
மொத்தத்தில் 2025ஆம் ஆண்டில் வெளிவந்த மிக அருமையான படைப்பு என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை .
Hari Krishnan

Leave a Reply