மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த இராம பண்டுவன் மகன் மாடனை கதைமாந்தனாகக் கொண்டு நாயக்கர் காலப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்ட தமிழ் வரலாற்று நெடுங்கதை.
நாயக்கர் காலத்தின் குலநீக்கச் சட்டத்தால் பாதிப்படைந்த குடிகள் மற்றும் மருத்துவர், ஏகாளி, வள்ளுவர், குடும்பர், இடையர், ஆசாரி, சுல்தானியர்கள், குறும்ப கவுண்டர், நாயகர், கள்ளர், சேர்வை என பல்வேறு குடிகள் பற்றிய இன வரையியலாக வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையிலும் நாட்டார் வழக்காற்றியல் அடிப்படையிலும் எழுதப்பட்டிருக்கிறது.
விசய நகர அரசின் முடியாட்சி காலஅரசதிகாரம் எவ்வாறு எளிய சாதிகளை சுரண்டியிருக்கிறது. அதிகாரத்திற்கு வேண்டிய சாதிகளை எவ்வாறு அரவணைத்திருக்கிறது என்பது பற்றிய கதையாக சுளுந்தீ வரையப்பட்டிருக்கிறது.
முடியாட்சி காலத்திய சமூக முரண்கள் எவ்வாறு அடிநிலையில் இருந்த உழுகுடிகளை ஒடுக்கியது என்ற கோணத்தில் பார்த்தால் இந்த நெடுங்கதை நாயக்கர் கால சமூகப் பின்னணியைப் புரிந்துகொள்ள வரலாற்று ஆர்வலர்களுக்கு பயன்படும்.
மாறாக இன்றைய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும்
விசய நகர( தெலுங்கு ஆட்சியாளர்கள்) காலத்தில் தான் தமிழ்க்குடிகள் பாதிக்கப்பட்டது அதற்கு முன்னர் பாலாறும், தேனாறும் ஓடியது என்ற இனவாத அரசியலுக்கு தூபம் போடக்கூடிய தீங்கையும் தன்னகத்தே சுளுந்தீ கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் சுளுந்தீ ஒரு தீயைப் பற்ற வைத்திருக்கிறது…
குமரன் [அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours