Tag: poetry
பனிப்புகையில் ஒரு மானோடு..
பனிப்புகையினூடேதூரத்திலிருக்கும் வீட்டில்மினுங்கும் மஞ்சள் விளக்கைமலைமுகட்டின் நுனியிலிருந்துமான் ஒன்றுபார்த்துக்கொண்டிருக்கிறது.இப்போது அதற்குப் பாடு ஏதுமற்றதால்அது அசையாமலிருக்கிறது. புலியொன்று இரையெனப்புதர்களின் ஊடாகப்பதுங்கிப்பார்த்துக்கொண்டிருப்பதைப் போலதுப்பாக்கியில் துல்லியமாய்க்குறி பார்த்திருந்தாலும்அதன் வசீகரத்தால்தளும்பத் தொடங்கிஏதோவொரு சொல்லொண்ணாமனோவசியத்தில் அமிழ்கிறேன். — ரவி பேலெட் (ஓவியர்)