திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக கொடுக்கப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்தி சனதனா வெறுப்பு அரசியலைத் தூண்டி வருகிறார் சந்திரபாபு நாயுடு.
இலட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருக்குமா ? என்ற அடிப்படை ஆராய்ச்சி கூட செய்யாமல் வெறுப்பு அலை சமூக வலைதளங்களில் தீயாய் பரவியிருக்கிறது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து புனித லட்டுவிற்கு தீட்டுக் கழிப்பதாகச் சொல்லி விளக்கேற்றச் சொல்வதும் மாட்டு மூத்திரத்தை லட்டு ஆக்கும் இடத்தில் தெளிப்பதுமாக கேலிக்கூத்துகள் அரங்கேற்றப்படுகின்றன.
மேலும் அரசியில் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நாடுமுழுக்க சநாதன ரக்சா வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தவம் இருக்கப்போவதாக எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றத் தொடங்கியருக்கிறார்.
தற்போதைய முதல்வரும் மோடியின் உற்ற நண்பருமாக வலம் வரும் சந்திரபாபு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கிறத்தவப் பின்னணியை வைத்து அவர் தான் இலட்டுவில் மாட்டுக் கொழுப்புக் கலந்ததற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டினார்.
உணமையில் அவர் கொடுத்த அறிக்கையல் இருந்து பின்வாங்கி தரமற்ற நெய் பயன்படுத்தியது தான் இலட்டு சிக்கலுக்கு காரணம் என பின்வாங்கியுள்ளார்.
இலட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்தருப்பதாக அறிக்கை கொடுத்தது குசராத்தில் உள்ள பால்பொருட்கள் நிறுவனம். அது ஊகத்தில் அடிப்படையில் அந்த அறிக்கையை வழங்கியிருக்கிறது் போதுமான ஆய்வுகள் செய்ய வேண்டும் எனவும் கோரியிருக்கிறது.
இலட்டு தயாரிப்பை முழுவதாக மேலாண்மை செய்வது வைஸ்ணவ பார்ப்பனர்கள் அதன் தரத்தை கண்காணிக்கும் முழுப் பொறுப்பையும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்றிருக்கிறது.
ஒருவேளை கலப்படமே நடந்திருந்தால் கூட இவர்களைத் தாண்டி நடந்திருக்க முடியாது.
ஆனால் இந்துப் புனிதத்தைக் ஜெகன் கெடுத்துவிட்டதாகவும் அதற்காக வழிபாடு , கரைச்சல் என சங்கிகள் சமூக வலைதளங்களில் இலட்டு செய்தியையும் மாட்டுக் கொழுப்பையும் இணைத்து ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி அரசியலையும் மதவெறுப்பையும் தூண்டிவிட்டு இலாபமடைந்திருக்கின்றனர்.
கர்நாடகவில் ஒரு நீதிபதி இயல்பாக முசுலீம்கள் குடியிருக்கும் பகுதியை பாகிஸ்தான் போல இருப்பதாக வெறுப்பைத் தூண்டுகிறார். மாட்டுக்கறி வைத்திருப்பதாக பசுக்குண்டர்கள் ஏதாவது ஓரிடத்தில் வன்முறையையும் படுகொலையையும் நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் வெறுப்பைத் தூண்டும் எளிமையான கருவியாக சங்பரிவாரங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
நம்முடைய அண்டைவீட்டார் , நண்பர்கள் என அனைவரையும் வாட்சப் வதந்திகள் பாதித்துக்கொண்டே இருக்கின்றன.
வெறுப்புக்கு எதிரான உண்மையையைச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு சமூக செயற்பாட்டாளர்களின் கடமையாக நாள்தோறும் மாறிவருகிறது.
ஆந்திரா மட்டுமல்ல விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இந்த நோய் எந்நேரமும் தமிழ்நாட்டைத் தாக்கவும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எச்சரிக்கையோடி இதுபோன்ற வெறுப்புப் பரப்புரைகளைக் கட்டுடைக்க வேண்டிய பணி முதன்மைப் பணியாகியுள்ளது. கடமை உணர்ந்து கருத்துகளைப் பகிர்வோம்!
வெறுப்பு சூழ்வதைத் தடுத்து நிறுத்துவோம்!

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
Leave a Reply