ஊடக உலகில் உண்மையின் பேரொளி

1 min read

சனி, மே 4, 2024
பதிப்பு

மதுரை
தேதி
2024-05-04


பெரும் பொறுப்புகள் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் – எரம் அகா
நமது நிருபர் மே 4, 2024
இந்தியத் தேர்தல் ஆணையம். 18வது மக்கள வைத் தேர்தல் துவங்குவதற்கு சற்று முன்பு தான் மாற்றி அமைக்கப்பட்டது. மோடியின் அரசு தனக்குத் தோதான வகையில் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்துக் கொண்டது. இந்தியத் தேர்தல் ஆணையம் இந்திய தேசத்தின் தேர்தல்களைக் கண்காணித்து நடத்தி முடிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாகும். சுதந்திரமான நியாய மான தேர்தல் செயல்முறைகள்; ஆளுங்கட்சியின் அதிகாரத்துவ அத்துமீறல்கள் மற்றும் அரசு இயந்தி ரம் தவறாக பயன்படுத்துதலைத் தடுத்தல்; அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின் பற்றுவதை உறுதி செய்தல் ஆகிய பெரும் பொறுப்பு கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு ஆணையரைக் கொண்டதாக இருந்த தேர்தல் ஆணையம் பின்னர் மூன்று ஆணையர்களைக் கொண் டதாக உருவெடுத்தது. அரசமைப்புச் சட்டத்தின் அதி காரத்தைக் கொண்ட நிறுவனம் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில், இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல்கள், நூற்றுக்கணக்கான சட்டமன்றத் தேர்தல் களைக் கண்காணித்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள அமைப்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் பரவ லாக பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் முறையில் காணப்படும் பல்வேறு குறைகளை தினேஷ் கோஸ்வாமி, (1990) குழு பட்டி யலிட்டுள்ளது. ஊழல், கிரிமினல்மயமாக்கப்பட்ட அர சியல் ஆகியவை தேர்தல் ஜனநாயக விழுமியங்களை யும் நெறிமுறைகளையும் கடுமையாக சிதைத்துள்ளன. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்துதல், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், முறைகேடு, வன்முறை, மோசடி எனப் பல்வேறு பிரச்சனைகளை அக்குழு விவரித்துள்ளது. 2015 சட்ட ஆணையமும் இதே பிரச்சனைகளை வலி யுறுத்தியுள்ளது. இந்த குறைபாடுகளை எல்லாம் களை வது ஒரு பக்கம் இருக்க, இப்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் நடுநிலைமையை யும் உறுதிப்படுத்துவதே தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளது.

செயல்பாடற்ற இந்திய தேர்தல் ஆணையம் :

2024 மார்ச் 22 ஆம் நாள் தில்லி அசோகா சாலையில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகம் பரபரப்பாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, திமுக வைச் சேர்ந்த வில்சன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த டெரிக் ஓபிரையன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து இந்தி யத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்தியா கூட்டணி தலைவர்களின் புகாரைக் கேட்ட தேர்தல் ஆணையர்கள் ஒன்றும் சொல்லவில்லை.புகாரினைப் பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக தெரி வித்தனர். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் துன் புறுத்தப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். அப்பட்டமான ஊழல் செய்துள்ள பாஜக காரர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்றார் அபிஷேக்மனு சிங்வி. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது கெஜ்ரிவால் எப்படி கைது செய்யப்படுகிறார்? இதன் மூலம் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிக ளுக்குமான சமதளம் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற தீவிரமான சூழல்களில் தேர்தல் ஆணையத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அது வெறும் அலங்கார அமைப்பல்ல. மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் கள் நடக்கும்போது சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரப்படுவது போலவே நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆளுகைக் குள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகிய நிறுவனங்களைக் கொண்டு வரவேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கூறுவது நியாயமானது.

பத்தாண்டுகளாக பணிந்து செயல்படும் தேர்தல் ஆணையம் :

மோடி அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கை களும்,தேர்தல் ஆணையத்தின் செயல்பாடற்ற தன்மையும் இந்திய ஜனநாயகத்திற்கு நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும். பாஜக 2014 இல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அது நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் சூழ்ச்சிகர மான முறையில் தனக்கு சாதகமாக வளைத்துவிட்டது. அந்தக் கட்சிக்கு மட்டும் அரசியல் நலன் வழங்கும் வகையிலும், அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறும் வெளிப்படைத்தன்மையை அறவே தவிர்த்து திட்டமிட்டுச் செயல்படுகிறது.

தேர்தல் பத்திரங்கள்- காசோலைகளும் சமநிலையின்மையும் :

தேர்தல் பத்திரங்கள் நன்கொடைத் திட்டத்தின் மூலம்பாஜக மிகப்பெரும் பணபலம் கொண்ட கட்சியாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி, நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். ஆனால் இந்தத் திட்டத்தை செயல் படுத்துவதில் முன்னணியில் இருந்த அன்றைய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மூலமாக மோடி அரசு அனைத்து அதிகாரிகளையும் தந்திரமாகப் பணிய வைத்து காரியத்தை சாதித்துக் கொண்டது. எந்த ஒரு அரசு நிறுவனமும் அல்லது தனிப்பட்ட அதிகாரிகளும்வெளிப்படைத் தன்மை யற்ற தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடுத்து, ஜனநாய கத்தை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2015 சட்ட ஆணையம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி பணபலத்தில் உயர்ந்திருந்தால், அது அக் கட்சிக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைய ஏதுவா கும் என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறி யுள்ளது. மோடியின் அரசு பாஜகவுக்காக அமலாக் கத்துறை, வருமானவரித்துறை ,சிபிஐ ஆகியவைக ளைப் பயன்படுத்தி தேர்தல் பத்திரத் திட்ட மூலம் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பணத்தை குவித் துள்ளது. எனில், ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியை பணபலம் மிக்கதாக மாற்றுவதில் தேர்தல் ஆணையத்தின் பங்கும் உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறும் திட்டம் பற்றிய பேச்சு வந்ததும் இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை அடைந்தது. அப்போது தலைமை தேர்தல் ஆணையரான ஏ .கே .ஜோதியும் மற்ற தேர்தல் ஆணையர்களாக ஓ.பி.ராவத் மற்றும் சுனில் அரோரா இருந்தனர். இது அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் உள்ள வெளிப்படைத் தன்மையைக் கடுமையாக பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதியது. தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், இந்தத் திட்டம் அபாயகரமானது; இது கட்சிகள் பெறும் நிதி பற்றிய வெளிப்படைத் தன்மையைப் போக்கிவிடும் என்று நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதித்துறைச் செய லாளர் எஸ்.சி.கார்க் என்பவரை தேர்தல் ஆணை யர்களிடம் பேசி அவர்களை தேர்தல் பத்திரத் திட்டம் பற்றி ‘புரிய’ வைக்குமாறு உத்தரவிட்டார். சுனில் அரோரா அப்போது நீரோ ராடியா பேச்சு வெளிப்பட்ட ஊழல் தொடர்பான விவகாரத்தில் சிக்கி இருந்தார். எனவே விரைவிலேயே தேர்தல் பத்தி ரத் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராக மாறினார். தலைமை தேர்தல் ஆணையர் ஏ .கே. ஜோதி2009- 13 இல் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்தவர். எனவே ஆரம்பத்தில் காட்டிய எதிர்ப்பை கைவிட்டு அவரும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். ஓ.பி.ராவத்தும் பின்னர் இதே வரிசையில் சேர்ந்தார். ஆக மொத்தம் முழுத் தேர்தல் ஆணையமும் அபாய கரமான, வெளிப்படைத் தன்மையற்ற ,சட்ட ஆணை யங்களின் பரிந்துரைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பை கைவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறும் திட்டம் ஒன்றிய நிதி அமைச்சகத்தால் 2018 ஜன வரியில் அரசிதழில் வெளியிடப்பட்டது. அணையின் மதகுகள் திறக்கப்பட்டது போல பாஜகவுக்கு நிதி குவிய ஆரம்பித்தது. 2021 இல் உச்ச நீதிமன்ற விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் திவி வேதி, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஆதரிப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார். இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் நிதி அமைச்ச கத்திற்கு தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிரா கக் கடிதம் எழுதியுள்ளதை எதிர்த் தரப்பு வழக்கறிஞர் கள் சுட்டிக்காட்டினர். ஆனால் இப்போது அரசியல் கட்சி களுக்கு வரும் நிதி பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ள குடி மக்களுக்கு உரிமை இல்லை என்று மோடி அரசு கூறிய போதும் இந்திய தேர்தல் ஆணையம் அமைதி காத்தது. இறுதியாக, 2024 பிப்ரவரி 15 இல் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.

பத்தாண்டுகளாக பாரபட்சம்

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், ஒடிசாவில் தேர்தல் பார்வையாளர் முகமது மொஷாகி என்பவர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை யிட முயற்சித்ததற்காக இந்திய தேர்தல் ஆணையம் அவரைத் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முறையற்ற செயல் என்கிறார். 2010 இல் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது லாலு பிரசாத் யாதவ் தமது ஹெலிகாப்டரையும் சோதனை யிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை குரேஷி நினைவு கூர்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் பணபலம், வெறுப்பு பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் நிறைந்ததாக இருந்ததாக குரேஷி குறிப்பிடுகிறார். “இதற்காக யாரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது? தவறும் செய்யும் அரசியல்வாதிகளை அல்ல ;இந்தியத் தேர்தல் ஆணையத்தைத்தான் கூண்டில் நிறுத்த வேண்டும்”என்கிறார் குரேஷி. 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி- அமித் ஷாவின் பல்வேறு வெறுப்பு பேச்சுக ளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. ஒரு நடவடிக்கையும் இல்லை.

இந்தப் புகார்களின் மீது தேர்தல் ஆணையர்கள் மூவரில் ஒருவரான அசோக் லவாசா மட்டும் மாறுபட்ட கருத்துக்களை- அதாவது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை- கொண்டிருந்தார். இதற்காக அவர் பின்னர் விசாரணை அமைப்புகள் மூலம் வேட்டையாடப்பட்டார். இந்திய தேர்தல் ஆணைய வரலாற்றில் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்த முதல் ஆணையர் அசோக் லவாசா. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென நமோ (NAMO) தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்பட்டது. அதில் முழுக்க முழுக்க மோடியின் பேச்சுக்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. தேர்தல் நடத்தை வீதிகளை மீறி ஆளுங்கட்சி அரசு இயந்தி ரத்தை தவறாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணை யம் வேடிக்கை பார்த்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் நமோ தொலைக்காட்சி அலைவரிசை நிறுத் தப்பட்டது. அதே ஆண்டிலேயே, பாலக்கோடு தாக்கு தல் நடத்திய வீரர்களுக்கு முதல் தலைமுறை வாக்கா ளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி. கடு மையான தேர்தல் நடத்தை விதி மீறல் இது. ஆனால் தேர்தல் ஆணையம் இது தனக்கு சம்பந்தம் இல்லா தது போல, ஒரு வழிப்போக்கனைப் போல அமைதி காத்தது. ஆனால் மற்ற எதிர்க்கட்சிகள் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டது தேர்தல் ஆணையம். 2017ல் குஜராத்- ஹரியானா இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் சேர்ந்து அறிவிப்ப தற்கு பதிலாக முதலில் ஹரியானா தேர்தலை மட்டும் அறிவித்தது. குஜராத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.மோடி விவசாயிகள் ,இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள், பட்டிதார்கள் ஆகியோருக்கான பல்வேறு நலத்திட்டங்களை வரிசையாக அறிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் குஜராத்திற்கு மட்டும் தனியாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மின்னணுத் தேர்தல் இயந்திரங்களின் வெளிப்ப டைத் தன்மை பற்றிய நியாயமான புகார்களை- அச்சங்களை தேர்தல் ஆணையம் அலட்சியமாக தள்ளுபடி செய்துள்ளது. இவிஎம் இயந்திரங்களை தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குழுவில் நான்கு பாஜக நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளன; இவர்களை அந்தக் குழுவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று சர்மா எனும் ஓய்வு பெற்ற அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளவில்லை.

கைப்பாவைகளாக தேர்தல் ஆணையர்கள் :

அருண் கோயல் தொழில் துறை செயலாளராகப் பணிபுரிந்தவர். டிசம்பர் 2022 ஓய்வு பெற இருந்தார்.அதற்கு முன்பாகவே 2022 நவம்பர் 18 இல் தன் விருப்ப ஓய்வு பெற்றார்.உரிய அரசு விதிமுறைகள் பின்பற்றப்படாமலேயே மிக வேகமாக தன் விருப்ப ஓய்வு அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்த நாளே நவம்பர் 19 இல் அவர் தேர்தல் ஆணையராக நியமிக் கப்பட்டார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையிலேயே இது நடைபெற்றது. மார்ச் 2023 இல் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணை யர்கள் தேர்வுக் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்தல், தேர்தல் ஆணையர்கள் அச்ச மின்றி செயல்படும் வாய்ப்பை வழங்கியது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஒரு நியாய மான செயல்முறையை தீர்ப்பு ஆரம்பித்து வைத்தது. ஆனால் மோடியின் அரசு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமனக் குழுவில் இருந்து விலக்கி, பதிலாக பிரதமரே ஒரு அமைச்சரை நியமனக் குழுவில் சேர்த்துக் கொள்ளும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இதனால் உயிரோட்டமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு தூக்கியெறியப்பட்டது.

இதற்கிடையில் அருண் கோயல் நியமனம் குறித்து ஏடிஆர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்தது. இந்நிலையில், அருண் கோயல் திடீரென தமது ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அசோக் லவாசாவுக்கு அடுத்து தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்த இரண்டா வது நபர் அருண் கோயல். இவரது ராஜினாமாவில் மர்மம் நிறைந்திருந்தது. எதையுமே வெளிப்படைத் தன்மையுடன் செய்யாத மோடியின் அரசு, மூன்று ஆணையர்கள் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணை யத்தை திடீரென ராஜீவ்குமார் தலைமையிலான ஒரே ஒரு தேர்தல் ஆணையரைக் கொண்ட தேர்தல் ஆணையமாக மாற்றி விடுமோ என்று யூகங்கள் கிளம்பின. தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவில்உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரிக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் 212 பெயர்களைக் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது. தேர்வுக் குழு ஆரம்பிக்க இருந்த அடுத்த 10 நிமிடங்களில் சில பெயர்களைக் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டது. இறுதியாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இந்தத் தேர்வே ஒரு நாடகம், கேலிக் கூத்தானதாகும்; இவர்களை நியமிக்க மோடி அரசு முன்னரே முடிவு செய்துவிட்டது என்கிறார் பிரசாந்த் பூஷன். ஞானேஷ் குமார் கேரளாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். 2019 இல் ஜம்மு- காஷ்மீரின் சிறப்புச் சட்டம் 370 பிரிவு ரத்து செய்ததிலும்,அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதிலும் அமித் ஷாவின் உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு – காஷ்மீருக்கானப் பிரிவில் இருந்து செயல்பட்டவர். 2020 இல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவ தற்காக ராமஜென்ம பூமி தீர்த்தச் சேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தான் கோவில் வளாகம் விரிவாக்கப்பட மேலும் நிலங்க ளை கொள்முதல் செய்தது. இதில் ஆர்எஸ்எஸ் பாஜக வினர் இடைத்தரகர்களாக செயல்பட்டு கொள்ளை லாபம் குவிக்க அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் நில தாவா குறித்த வழக்குகளை கண்காணிக்கவும், சமரசம் செய்வ தற்குமான ஒன்றிய அரசின் மத்தியஸ்தக் குழுவில் செயல்பட்டவர் தான் ஞானேஷ்குமார். அமித்ஷா தலை மையிலான கூட்டுறவுத்துறை அமைச்சகத்திலும் பணி செய்துள்ளார்.

சுக்பிர் சாந்து உத்தரகாண்ட் மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.2019-21 காலத்தில் தேசிய நெடுஞ் சாலைத்துறை நிர்வாகத்தில் பணிபுரிந்தவர். நிதின் கட்காரி க்கு மிகவும் பிடித்தமான அதிகாரி.புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் முதலமைச்சராக இருந்த போது தலை மைச் செயலாளராக இருந்தவர். மோடி அரசின் முக்கியத் திட்டமான சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் உத்தர கண்டில் அமல்படுத்தப்பட முக்கிய பங்காற்றிய வர். ஆக இருவருமே பாஜக அரசுகளிடம் நெருக்கமாக இருந்து வேலை செய்தவர்கள். முன்பெல்லாம் தேர்தல் ஆணையர்கள் இவ்வளவு மோசமான கைப்பாவை களாக நியமிக்கப்பட்டது கிடையாது. 2024 மார்ச்சில் இந்தியத் தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அப் போதிருந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குடம் தேர்தல் விதிமுறை நோட்டீஸ்களை வழங்கி வருகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெரும் ஊழல் செய்த பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையீடு செய்யவில்லை. அரச மைப்பு நிறுவனங்களான அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை தேர்தல் லாபத்திற்காக பாஜக அரசு பயன்படுத்தும் பிரச்சனையிலும் தேர்தல் ஆணையம் எவ்வித தலையீடும் செய்யவில்லை. இதற்கிடையில் தான் 3வது கட்ட வாக்குப்பதிவை நோக்கி நாடு நகர்கிறது.

நன்றி கேரவன் ஏப்ரல் 2024,
தமிழில் : ம.கதிரேசன்

You May Also Like

+ There are no comments

Add yours