இது மக்கள் எழுச்சிகளின் காலம். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தெருவில் இறங்கி ஆட்சி மாற்றங்களைச் செய்து வரும் உலகப்போக்கின் ஒரு பகுதி.
மரபான ஆளுங்கட்சிகள் தங்கள் மக்கள் பகைக் கொள்கையை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் மேல் திணித்து விடலாம் என்ற மமதைகளுக்கு எழுச்சிகளின் ஊடாக சாட்டை அடி கொடுக்கும் காலம்.
படை , அதிகாரம் ஆகியவற்றை வெறும் பார்வையாளர்களாக மாற்றி அவற்றை செல்லாததாக்கி காட்சிப் பொருளாக்கி வரும் காலம்.
என்பதை தில்லி உழவர் போராட்டத் தொடர்ந்து வேதாந்தாவின் கூட்டணி அரசான மோடி ஆட்சிக்கு மதுரை உழவர்கள் கொடுத்திருக்கும் பதிலடி.
மக்கள் வாழ்விடங்களை அப்புறப்படுத்திவிட்டு பெருமுதலாளிகளுக்கு சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில் கனிம வளங்களை வாரி வழங்கி வரும் மோடி அரசின் கூட்டுக்களவாணி முதலாளித்துவக் கொள்கையை மக்கள் இயல்பாக தாங்களாகவே ஒருங்கிணைந்து புறக்கணித்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றப் பெரும்பான்மை , சாதி, மதம் போன்ற வெறுப்புப் பரப்புரைகளைப் பயன்படுத்தி மக்களைக் கூறுபடுத்திவிடலாம் என்ற திமிருக்கு மக்கள் ஒன்றுபட்டு தங்கள் பதிலடியைக் கொடுத்துள்ளனர்.
வேதாந்த – மோடி கூட்டணியின் கனிமவள கொள்ளைக்கும் மக்கள் பகைப் போக்கிற்கும் எதிராக மக்கள் தங்கள் எச்சரிக்கையைப் பேரணி எழுச்சியின் மூலம் விடுத்துள்ளனர்.
வேதாந்தா – மோடி அரசின் டங்க்ஸ்டன் திட்டம் எனும் ஆணவம் வீழும்!
மக்களே இறுதியாக வெற்றி பெறுவார்கள்!
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours