இராசஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முசுலீம்களை குறிவைத்து மோடி ஆற்றி இருக்கும் உரை நாடு முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது மன்னருக்கும் அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்பிற்கும் புதியதல்ல. அவை சான்றுகளற்றவை என்று பலமுறை மெய்பிக்கவும்பட்டுள்ளன.
இது போன்று சிறுபான்மையினரை குறிவைத்து பாஜகவினர் பரப்பி வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி தான் மோடியின் உரை. அதுவும் ஒரு அமைச்சரவைத் தலைவர் என்ற முறையில் மோடியின் உரை பொய்களும் அவதூறுகளும் நிறைந்து வழிபவை.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இது போன்ற வெறுப்பு பரப்புரைகள்ஒரு அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது.
இது நீண்டகாலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
வெறுப்பு அரசியலின் தோற்றுவாய்!
\வளர்ந்து வரும் முன்னோக்கிய சமூக – பொருளியல் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாத பழமைவாதிகள் முற்போக்கு வளர்ச்சியின் மீது வெறுப்பு உமிழ்வதன் மூலம் அதனைத் தங்களது கருவியாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
\ சாதி , பாலினம் , வகுப்பு , மதம் , இனம் , குழுக்கள் ஆகிய பிளவுகளைக் கூர்மைப்படுத்துவதன் மூலமும் வெவ்வேறு பிரிவினரை பிளவுபடுத்தி அதற்கு எதிரான குழுக்களைத் தன்வயமாக்குவதும் வெறுப்பு அரசியலின் நோக்கம்.
\ இந்தியத் துணைக் கண்டத்தில் அடுக்கு முறையில் அமைந்துள்ள சாதிய உறவுமுறையினாலான உடைமை , அளிப்பு , கொள்முதல் எனும் சுரண்டல் முறையினை மூடி மறைக்கவும் பார்ப்பன – உயர் வகுப்புப் ஆகிய சுரண்டல் பிரிவின் ஆதிக்கத்தை தக்க வைக்கவும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்புகளைத் திசை திருப்பவும் பலவீனமான சிறுபான்மையினரை எதிரிகளாகக் காட்டுவதுமாக இங்கே வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
\ மக்களின் மனங்களில் ஊறிப் போயுள்ள பழமைவாதக் கருத்துகளை , உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலம் வெறுப்பு அரசியல் செயல்படுகறது.
எடுத்துக்காட்டாக தான் சார்ந்த சாதிக் குழு , மதக் குழுவின் பெண்களுக்கு பிற சாதி , மதக் குழுக்களால் ஆபத்து ;
தான் சார்ந்த குழுக்களின் சொத்து , வணிகம் ஆகியவற்றுக்கு தான் அல்லாத பிற குழுக்களால் ஆபத்து; போன்றவை அதில் முதன்மையானவை.
\ புள்ளி விவரங்களையோ , உண்மைத் தகவல்களோ வெறுப்பு அரசியலைப் பரப்புகிறவர்களுக்கும் வெறுப்பை நுகர்வோர்களுக்கும் தேவையில்லை.
பெரும்பாலும் வெறுப்பை நுகர்வோர் மேலோட்டமான தோற்றத்தையும் முன் முடிவுகளையும் தப்பெண்ணங்களையும் முரட்டுத்தனமாக நம்புதல்.
\ செய்தி , காட்சி ஊடகங்கள் பொய் சொல்லாது என்ற தப்பெண்ணங்கள்.
\ சனநாயக அடிப்படையிலான உரையாடலை ஏற்க மறுப்பது அடிப்படையில் பாசிசத்தின் பண்பு எனவே தாம் பாசிஸ்டுகள் வெறுப்பு அரசியலை கைக்கருவியாகக் கொண்டுள்ளனர்.
\ சமூக வலைதளக் காலம் இது. எதற்கும் முந்தி அடித்துக் கொண்டு வினையாற்ற வேண்டும் என்ற முனைப்பு ; புரளி , பொய்ச் செய்திகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பரப்புதல் போன்றவை வெறுப்பு அரசியல் பரவுவதற்கும் அதனடிப்படையில் பெருங் கலவரங்கள் நடப்பதற்கும் அடிப்படைக் காரணம்.
மோடியின் பத்தாண்டு கால ஆட்சி நாட்டையும் நாட்டு மக்களையும் உரிமைப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பு வெறுப்பு அரசியலை மூலப் பொருளாக பயன்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியின் பாதிப்புகள் தங்களை முற்போக்காளர்கள் என்று கூறிக் கொள்ளும் பிரிவினரிடமும் மெல்ல மெல்ல நஞ்சூட்டல் போல பரவி வருகிறது.
இந்த நஞ்சூட்டலை பரவலான உரையாடல்கள் , வெறுப்பு அரசியல் சக்திகளை சான்றுகளுடன் பரவலாக அம்பலப்படுத்துதல் போன்றவற்றின் வழி முறியடிப்போம்! எண் மை உரைகல்லைக் கொண்டு பாசிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்!
எழுத்தாளர் :
குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].
+ There are no comments
Add yours