‘அரசு’, ‘அரசாங்கம்’, ‘தேசிய இனவிடுதலை’ எனும் வார்த்தைகளை விடுதலை-II திரைப்படத்திலிருந்து நீக்கச் சொல்லி இருக்கிறது சங்கி சென்சார் போர்டு.
இதுமட்டுமல்லாமல், ‘ தமக்கான போராட்டத்திற்கான ஆயுதங்களை மக்களே போராட்டகளத்திலிருந்து உருவாக்கிக்கொள்வார்கள்’ என்பதும் நீக்கப்பட அழுத்தம் கொடுக்கப்பட்டு
‘அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்’ என மாற்றிவைக்க சொல்லப்பட்டுள்ளது.
இதுபோல பல அரசியல் வசனங்கள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம்.

‘ஓட்டு’ என்பதையே EVM வழியாக திருடும் மோடி அரசில், ஓட்டுபோடுவது எப்படி போராட்டத்திற்கான ஆயுதமாக இருக்க முடியும். தமிழ்நாட்டின் அரசியலில் சமரசமில்லா போர்வீரனை புனைவாக கூட படைத்துவிட முடியாதவாறு கழுத்தை நெறிக்கிறது சங்கி அரசு. படைப்பு சுதந்திரம் கூட இல்லாத அரசினை நாம் சுமந்துகொண்டிருக்கிறோம்.
காசுமீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற RSS மதவெறி பிரச்சார திரைப்படத்திற்கு கிடைக்கும் அனுமதி, தமிழின உரிமை சார்ந்து, வரலாறு சார்ந்து எடுக்கப்படும் படைப்புகளுக்கு கிடைப்பதில்லை.
இந்திக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளும், சங்கிகளின் மதவெறி அரசியலுக்குள்ளும் சிக்கி நம் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை சீரழிக்கப்படுகிறது. தமிழர்கள் தகுந்த வகையில் நம் படைப்பாளிகள் மீதான இந்த அடக்குமுறைகளை திருப்பியடிக்க வேண்டும். ‘புஷ்பா’ போன்ற
பொழுதுபொக்கு படங்கள், ‘அமரன்’ போன்று காசுமீர் தேசிய இனமக்களுக்கு எதிரான படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, தமிழ்நாட்டில் புரட்சிகர குரலாய் ஒலித்த தமிழர்களை பற்றிய படம் அனைத்தையும் விட பெருவெற்றிபெற வேண்டும்.

தமிழ்நாட்டில், தமிழனின் வரலாறை சொல்வதற்கு அனுமதியளிக்காத மோடி அரசிற்கு பதிலடியாகட்டும் நம் எதிர்வினை.
தடைசெய்யப்படும் அரசியல் வசனங்கள் உரக்க ஒலிக்கட்டும்.
இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படம் வெற்றிபெற இந்த ஒடுக்குமுறையே அடையாளமாகிறது.
வெல்லட்டும் ‘விடுதலை’

பதிவு-தோழர் திருமுருகன் காந்தி
Leave a Reply