விவேகானந்தர் வந்தாரா?

1 min read

அரவிந்தர் (1872 – 1950) ஒரு பெரும் தேச பக்தர், விடுதலைப் போராளி, பன்முக ஆளுமை. இவர் 116 ஆண்டுகளுக்கு முன்னால் (1908-ஆம் ஆண்டு) இதே மே மாதத்தில் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, கல்கத்தா அருகேயுள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதானக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் 1909-ஆம் ஆண்டு இதே மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தான் தனிமைச் சிறையில் இருந்தபோது, தொடர்ந்து தியானம் செய்ததாகவும், அப்போது இரண்டு வார காலம் சுவாமி விவேகானந்தர் (1863 – 1902) அவர்களின் ஆவி தன்னுடைய தனிமைச் சிறையில் எழுந்தருளி தன்னுடன் பேசிக் கொண்டிருந்தார் என்றும் அரவிந்தர் கூறினார்.

பின்னர் அரசியலைத் துறந்து, சற்றே தலைமறைவாக இருந்த அரவிந்தர், பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தார். ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார்.

நேற்றிரவு விவேகானந்தர் மீண்டும் குமரி முனைப் பாறைக்கு வந்தாரா, ஏதாவது பேசினாரா, ஆன்மீக வாழ்வுக்கு அடிக்கல் இட்டுச் சென்றாரா?

தங்க சூட் முதல் தனி விமானம் வரை என்னென்னவோ வாங்கிக் கொடுத்தோம். கடைசியாக ஓர் ஆசிரமம் வேண்டும் என்று கேட்டால், அதையும் அமைத்துக் கொடுத்து விடுகிறோம், சுவாமி. எங்களை விட்டு விலகச் சொல்லுங்கள்.

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக ஆன்மீகப் பணிக்குச் செல்லட்டும். பத்தாண்டு கால தேக்கநிலைக்குப் பிறகு நாங்கள் எங்கள் பயணத்தை எப்படியாவது தொடர்கிறோம், ஐயா!

நேற்றிரவு பாறைக்கு வர முடியவில்லை என்றாலும், இன்று பகலிலோ, அல்லது இன்றிரவாவது தவறாமல் வந்துவிடுங்கள் சுவாமி விவேகானந்தரே! நன்றி, வணக்கம்!

எழுத்தாளர் :

சுப. உதயகுமார் 

You May Also Like

+ There are no comments

Add yours