பனிப்புகையில் ஒரு மானோடு..

0 min read

பனிப்புகையினூடே
தூரத்திலிருக்கும் வீட்டில்
மினுங்கும் மஞ்சள் விளக்கை
மலைமுகட்டின் நுனியிலிருந்து
மான் ஒன்று
பார்த்துக்கொண்டிருக்கிறது.
இப்போது அதற்குப் பாடு ஏதுமற்றதால்
அது அசையாமலிருக்கிறது.

புலியொன்று இரையெனப்
புதர்களின் ஊடாகப்
பதுங்கிப்
பார்த்துக்கொண்டிருப்பதைப் போல
துப்பாக்கியில் துல்லியமாய்க்
குறி பார்த்திருந்தாலும்
அதன் வசீகரத்தால்
தளும்பத் தொடங்கி
ஏதோவொரு சொல்லொண்ணா
மனோவசியத்தில் அமிழ்கிறேன்.

ரவி பேலெட் (ஓவியர்)

You May Also Like

+ There are no comments

Add yours