இந்த ஆவணப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநரை நேரில் அழைத்து வா தம்பி என்றார் பேரன்பிற்குரிய பத்திரிக்கையாளர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்! அலுவலகம் சென்றோம். நக்கீரன் தோழர்கள் நேர்காணல் செய்தார்கள். அந்த நேர்காணலுக்கு நடுவே இன்ப அதிர்ச்சியாக அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களும் வந்து அமர்ந்து உணர்ச்சி பொங்கத் தனது கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு சென்றார்! அப்படி என்ன ஆவணப்படம் இது?
இதோ அறக்கலகம் தவம் & தமிழ்தாசன் ஆவணப்படம் எடுத்துள்ளனர். அனைவரும் பாருங்கள்! மொத்த இந்தியாவுக்கும் பாடம் எடுக்கும் மதுரைக்காரர்கள்.
கலவரச் சங்கிகளைக் கதிகலங்க வைக்கும் ஆவணப்படம்!
மதுரை மத நல்லிணக்கம் தொடங்கி திராவிட கட்டடக்கலை வரை விரிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரும் பார்த்து பகிர்ந்து கொண்டாட வேண்டிய ஆவணப்படம் இது!

- Indrakumar Theradi
திருப்பரங்குன்றம் தொப்புள்கொடி உறவும் மரபும்… என்கிற இந்த ஆவணப்படத்தை தோழர் தவம்-தமிழ்தாசன் இணைந்து இயக்கி உள்ளார்கள்.. தோழர் காமாட்சி எடிட்டிங் செய்துள்ளார்..
வீடியோ லிங்க்: https://youtu.be/21tZWM5l7xY?si=QT-vovbkvtTwAIPZ
எப்படியாவது தமிழ்நாட்டை இன்னொரு அயோத்தியாக மாற்ற வேண்டும், மதக்கலவரத்தை தூண்ட வேண்டும், ரத்த ஆறு ஓட வேண்டும் என்று சங்கிகள் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிற இந்த வேலையில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மட்டுமல்லாது திருப்பறங்குன்றத்தில் நடந்ததை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்..
பெரும் பொருட்செலவில் கடன் வாங்கி இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
தோழர்கள் கீழே உள்ள QR codeல் தங்களால் இயன்றதை கொடுத்து அவருடைய பொருளாதார சிக்கலில் துணை நிற்க வேண்டும்..
இதுபோன்று ஒரு ஆவணப்படம் வெளிவருவது என்பது குதிரைக்கொம்பு.. மிக நேர்த்தியாக இப்படத்தை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துகள்..

- U2 Brutus Minor Veeramani
திருப்பரங்குன்றம் – தொப்புள்கொடி உறவும் மரபும் – ஆவணப்படம்: இந்நாட்டில் மதநல்லிணக்கத்தை பேணும் முக்கிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. அதில் ஒரு தற்காலிக திருப்பமாக.. திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை உருவானது. அது அரசியலாக்கப்பட்டு.. நீதிமன்றம் வரை சென்றது. உச்ச இறுதித்தீர்ப்பு இனி வரலாம். சிக்கந்தர் மலை என்பது ஸ்ரீகந்தர் மலையாக இருந்ததென புதுக்கதையும் உண்டு. ‘திருப்பரங்குன்றம் மலையின் உண்மையா வரலாறென்ன?’ என்பதை மட்டுமல்ல. சிக்கந்தர் தர்க்காவின் பின்னணி, திருப்பரங்குன்றம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்து – இஸ்லாமிய மதத்தினர் இடையே காலம் காலமாக இருந்து வரும் நட்புறவு, அப்பகுதிகளில் உள்ள இதர கோவில்கள் மற்றும் மசூதிகள் உருவானது பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள் என பலவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறது இந்த ஆவணப்படம். தொன்று தொட்ட காலம் முதல் இன்று உருவாக்கப்பட்ட சர்ச்சை வரை அனைத்தையும் தெளிவான விளக்கங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொல்லியல் ஆய்வாளர்கள், எதிர்க்கருத்து கொண்டோர் என எந்த பாகுபாடுமின்றி பலதரப்பினரின் பேட்டிகளையும் இப்படம் உள்ளடக்கியுள்ளது. அறக்கலகம் தயாரித்துள்ள ‘திருப்பரங்குன்றம் – தொப்புள்கொடி உறவும் மரபும்’ எனும் இந்த படைப்பை தவம் மற்றும் தமிழ்தாசன் ஆகியோர் மிகச்சிறப்பாக இயக்கியுள்ளனர். பிரபுவின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி. எடிட்டிங் மற்றும் ஸ்க்ரிப்ட்: காமாட்சி ராமன். தமிழ் ஆவணப்பட வரலாற்றில் மிகச்சிறப்பாக எடிட் செய்யப்பட்ட வெகுசில படைப்புகளில் இது நிச்சயம் இடம் பெறும். அவசியம் பார்க்கவும்.

Blue Sattai Maaran
திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் சமூகநீதி , மதச்சார்பின்மை,சமத்துவ, சனநாயக மரபுகளை அழித்து ஒரு பின்தங்கிய பிற்போக்கு அரசியலைத் திணித்துவிடலாம் என சநாதனிகள் ஒரு நீண்டகால வேலைத் திட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இரத்தமும் சதையுமாக கலந்திருக்கும் பன்மைத்துவப் பண்பாட்டு அடையாளங்களை வெறுப்பை விதைத்து ஒற்றைத்துவ சர்வாதிகாரக் கூட்டிற்குள் தமிழ் மக்களைச் சிறைப்படுத்த முயற்சித்துவரும் வேளையில் பொய்களை ஊடறுத்து வரலாறு ,பண்பாடு , அரசியல் தளங்களில் நிலவும் நல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிக்கும் ஆவணமாக திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளீர் “
எனும் தமிழ்ப்பண்பாட்டின் உயிர்நாடியை நிலைநாட்டிய படைப்பாளிகள் தவம் , தமிழ்த்தாசன் உள்ளிட்ட தோழர்களுக்கு வாழ்த்துகள் !
Kumaran

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவுக்கான மாடு ஒரு இந்துவின் வீட்டிலிருந்துதான் ஆண்டாண்டு காலமாக வருகிறது!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் ஆண்டுதோறும் தவறாமல் ஒலிக்கின்ற பாடல் – “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்”!
30 ஆண்டுகளாக நாடகங்களில் தெருக்கூத்தில் முருகன் வேடம் தரிக்கும் ஒரு கலைஞரின் பெயர் ராஜா முகமது! ஷேக் சாகுல் ஹமீது என்ற அவரது இயற்பெயரை ‘இன்று முதல் உன் பெயர் ராஜா முகமது’ என்று அறிவித்தவர் கிருபானந்த வாரியார் அவர்கள். ‘ஏற்கனவே உள்ள முஸ்லிம் பெயரை மீண்டும் முஸ்லிம் பெயராகவே மாற்றுகிறீர்களே? நான் முருகன் வேடம் அல்லவா போடுகிறேன்?’ என்று கேட்டதற்கு முகமது என்பது முருகனின் பெயர் தான் என்று சொன்ன வாரியார் அதற்கு ஒரு விளக்கத்தையும் கூறியிருக்கிறார். ‘ கார்த்திகை பெண்கள் ஆறு குழந்தைகளாகப் பிறந்து வளர்ந்த முருக தெய்வத்தை தாங்களே வளர்த்திருந்தாலும் யார் வளர்த்த குழந்தை எதுவென்று தெரியாமல் விழித்து நிற்க அப்போது பார்வதி தேவி வந்து அவருக்கும் யார் எந்த குழந்தை என்று கண்டறிய முடியாமல் நின்ற நிலையில் பார்வதி தேவி சொல்கிறாராம்: ஆறுமுகமது ஒரு முகமதுவாக அந்த ஒரு முகமது ராஜா முகமதுவாக என்று அதனால் ராஜா முகமது முருகனின் பெயர் தான் நீ சிறப்பாக வருவாய்’ என்று வாழ்த்தினாராம் கிருபானந்த வாரியார்!
நாகூர் தர்காவில் இன்றும் இந்துக் குடும்பங்களை சேர்ந்த 3 பேர் பரம்பரை பரம்பரையாக தினமும் காலையும் மாலையும் மங்கள வாத்தியம் வாசித்து வருகிறார்கள். தங்களுக்குப் பிறகும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாகூர் ஆண்டவருக்கு இந்த மங்கள வாத்தியம் வாசிக்க வேண்டும் என்று நாகூர் ஆண்டவரையே வேண்டி வணங்கி நெற்றியில் திருநீறு தரிக்கிறார்கள்!
ராமநாதபுரம் வைகை கிராமத்தைச் சேர்ந்த முத்தாலம்மன் கோவிலின் கருவறைக்கு பின்னால் வெட்ட வெளியில் தர்கா ஒன்று அமைந்துள்ளது. அதன் கதை என்னவென்று அந்த பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் தர்காவிற்கும் தினமும் பூசை செய்பவர் சொல்கிறார்: “வெகு தொலைவில் இருந்து வந்த இஸ்லாமிய துறவி ஒருவர், முத்தாலம்மனாக வீற்றிருக்கும் பத்ரகாளி அம்மனுக்கு முன்னால் வந்து தஞ்சம் அடைய, எனக்குப் பின்னால் இடம் இருக்கிறது. நீ அங்கே இருந்து கொள். என்னை வணங்குவோர் உன்னையும் வணங்குவார்கள் என்று வாக்குச் சொல்ல அந்த துறவி அங்கேயே அடக்கமாகிறார்.” அன்று முதல் இன்றுவரை அங்கு வரும் இந்துக்களும் இஸ்லாமியரும் அம்மனையும் வணங்குகின்றனர். அங்கே அடக்கமாகியுள்ள ‘முத்தால ராவுத்தை’யும் வணங்குகின்றனர்.
இன்னும் பல உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. முழுவதுமாகப் பாருங்கள். நான் சொன்னது 10% தான். இன்னும் 90% உங்கள கண்களைக் கலங்க வைக்க ஆவணப்படத்தில் காத்திருக்கின்றது. #thiruparankundramfiles
இணைப்பு கமெண்டில்.
( மேலும் 1½ ஆண்டுகால உழைப்பில் தமிழ்நாடு கேரளாவென்று அலைந்து, பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தோழர்கள் தங்களால் ஆன பொருளாதார உதவியை வழங்கும் படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வழங்க விரும்புவோர் .

Leave a Reply