ஆர்.எஸ்.எஸ்.ஸின் பண்பாட்டு அரசியல் வெகுவாகப் பலரால் திறனாய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூறாண்டுகளில் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியப் பெரு முதலாளிகளுடன் வெகு விரைவிலானக் கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது.
முன்பு காங்கிரசு வைத்திருந்த பெரு முதலாளிய வட்டத்தைத் தனக்கானதாக மாற்றியதிலும் பெரு முதலாளிகளிடம் இருந்து பணத்தை வாரிக் கொட்டிக் கொண்டு தன்னை வளப்படுத்திக் கொண்டது.
காங்கிரசுக்கு எதிராக தொடக்கத்தில் தன்னை சுதேசிப் பொருளியல் கொள்கையில் அக்கறை உள்ளதைப் போலக் காட்டிக் கொண்டாலும் மாறிய புதிய தாராளவாத பொருளியலின் ஓர் உறுப்பாய்த் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தன்னுடைய சுதேசி வேடத்தைக் கலைத்துக் கொண்டு புதிய தாராளமயத்தைத் திறந்து விடுவதற்கான வலுவான அடித்தளத்தைத் தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் அமைத்துக் கொண்டது.
தாராளமயத்தின் நலன்களை அறுவடை செய்த முதல் தலைமுறை உயர் நடுத்தர வகுப்பைத் தனது சித்தாந்தத்திற்கான அடியாள் படையாக வளர்த்துக் கொண்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியைத் தனக்கிருக்கக் கூடிய அரசியல் – அதிகார வகுப்புத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஊழலுக்கு எதிரான போர் , வளர்ச்சி , தேச முன்னேற்றம் போன்ற நாடகங்களைக் காட்டி தனது பாசிச அரசியல் முகத்திற்கு முலாம் பூசி தன்னை ஆட்சியில் அமர்த்திக் கொண்டது.
உலகப் பொருளியல் நெருக்கடிக்குப் பிறகு உருவான முதலாளிய வகுப்பின் தீவிர சுரண்டல் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் வலுவான ஒன்றிய அரசு என்ற பரப்புரையைச் செய்து 2014 ல் முதல்முறையாக பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கட்டிலுக்கு வந்தது.
கடந்த பத்தாண்டுகளில் தனது தீவிரமான முசுலீம் வெறுப்பு , பாபர் மசூதி , இராமர் கோயில் கட டுமானம் , காசுமீருக்கு சிறப்புரிமை ரத்து போன்ற இந்துராஷ்டிர நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது.
மறுபுறம் உழைக்கும் மக்களின் செல்வ வளங்களைக் கொள்ளையடித்து குசராத் பனியா முதலாளிகள் கையில் ஒப்படைக்கும் பணியைத் தீவிரமாக செயல்படுத்தியது. சூத்திர – பஞ்சம் மக்களின் செல்வங்களை, உடைமைகளைப் பறிக்க பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
நாட்டின் சிறு – குறு தொழில்களை அழித்ததுடன் கேள்வி கேட்பாரின்றி அதனை , அம்பானியின் சொத்துகளைப் பல மடங்கு பெருக்க இயற்கை வளங்கள் , மக்களுடைய சேமிப்பு , பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை அவர்களுக்குத் தாரைவார்த்தது.
வாரக் கடன்கள் எனும் பெயரில் மக்கள் சேமிப்புத் தொகையை கடன் நீக்கம் செய்தது.
வளரும் முதலாளியப் பிரிவினரை ஒன்றின் முகவாண்மை அமைப்புகளை வைத்து மிரட்டி கொள்ளைப்புறமாக தேர்தல் பத்திரங்கள் மூலமும் குறுக்கு வழியிலும் அவர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டிக்கொண்டது.
பனியா முதலாளிகளை வைத்து நாட்டின் செல்வ வளங்களைக் கட்டுப்படுத்த அதிகாரங்கள் குவிந்த ஒன்றிய அரசையும் , எதிர்க்கட்சிகள், மாநிலங்கள் எனும் சனநாயக அலகுகள் இல்லாத ஓர் ஒற்றைப் பாசிச அரசை நிறுவ நிதித்துறையைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தது.
ரிசர்வ் வங்கி , பொதுத்துறை வங்கிகள், நிதி அமைச்சகம் , வரி தொடர்பான முகவாண்மை அமைப்புகள் என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்மயமாக்கி மக்களின் பொருளாதாரத்தைச் சீரழித்தது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த உருமாற்றத் தன்மையைப் புரிந்துகொள்ளவும் அதனுடைய பாசிச நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முகவர்கள் பெருமுதலாளிகளுக்கு இடைத்தரகர்களாக பணிசெய்து வந்திருக்கின்றனர். அவர்களில் குருமூர்த்தி தவிர்க்க முடியாத ஆள். ஒரு தனிநபர் என்ற முறையில் அல்லாமல் பார்ப்பனிய வெறி ஊறிப்போன , பிறவிப் பெருமிதத்தில் திளைக்கும் குருமூர்த்தியைப் புரிந்துகொள்வதன் வழி இந்த நாட்டை யார் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்? உண்மையில் யார் கையில் அதிகாரம் இருக்கிறது? என்ற புரிதலுக்கு நாம் வர முடியும்
பார்ப்பன – பனியா சாம்ராஜ்ஜியத்தின் கூக்குரலை அறிய தஞ்சை நிகழ்ச்சிக்கு வாருங்கள் உரையாடுவோம்!
+ There are no comments
Add yours