திருப்பரங்குன்றம் வழக்கு: உள்ளடி வேலை செய்கிறதா தவெக அரசு?

1\. மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் முன் இந்து சமய அறநிலையத்துறையின் எழுத்துப்பூர்வ நிலைப்பாட்டின்படி, தர்கா அருகில் இருக் கப்கக்கூடிய கிரானைட் தூண் கோயிலுக்குச் சொந்தமானது என்ற நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவெக அரசு இஸ்லாசாமியார்களின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பது ஏன்?
2\. உச்சநீதிமன்றத்தில் புதிய நிலைப்பாட்டை எடுக்க யார் நிர்பந்தம் தந்தது?
3\. நேற்று சிக்கந்தர் தர்காவுக்கும், தர்கா அருகிலுள்ள கல்தூணுக்கும் இடையிலான தூரத்தையும் அதிகரித்துச் சொல்கிறது தவெக அரசு! ஏன்?
4\. கார்த்திகை தீபம் ஏற்றும் இடமும், மோட்ச தீபம் ஏற்றும் இடமும் அருகருகே அமைந்திருக்க, இரண்டும் ஒன்றுதான் என்ற வாதத்தை இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் தவறாக முன்வைத்தது ஏன்?
5\. சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உரிய முறையில் வாதிடாமல் கோட்டை விட்ட, மூத்த வழக்கறிஞர் ஜெகதீப் குப்தா மற்றும் சேகர் நாப்டேவை இந்து சமய அறநிலையத்துறைக்கு மூத்த வழக்கறிஞர்களாக அமர்த்தியது ஏன்?
6\. TVK-வின் கரூர் வழக்கு, ஆதவின் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, TVK-ன் மற்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள், இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மிக முக்கிய வழக்கறிஞர்களான #அபிஷேக் மனுசிங்வி #கபில் சிபர்மணியம் #அரியமா சுந்தரம் உள்ளிட்டோர் ஆஜரானபோது, தமிழ்நாட்டின் மிக முக்கிய வழக்கான திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிபதிகள் கேட்கும் வகையிலான வாதங்களை முன்வைக்கக்கூடிய, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமிக்காதது ஏன்?
7\. நேற்றைய திருப்பரங்குன்றம் வழக்கின் வாதத்தில், இந்து சமய அறநிலையத்துறை தவறாக வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே சில நிமிடங்கள் மட்டுமே பேசியது ஏன்?

இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத ஒரு பிரச்சனையை புதிதாக உருவாக்கி, திருப்பரங்குன்றம் வழக்கிற்கு இன்று உச்சநீதிமன்றத்தில் குழி பறித்திருக்கிறது விஜய் அரசு.
பார்க்க: http://scobserver.in
மருதையன்.
Comments (...)
You must be logged in to leave a comment.



