Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Politics

அரசியல்

திருமா எனும் கோயபல்ஸ்Politics

திருமா எனும் கோயபல்ஸ்

தொடர்ந்து திருமா ஒரே விசயத்தை திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார். *விஜய்-க்கும் BJP-க்கும் சம்மந்தமில்லை. *விஜய் BJP-ஐ எதிர்க்கிறார். *விஜய் ஒரு மதச்சார்பற்ற நபர். இதைத்தான் திரும்ப திரும்ப எல்லா மேடைகளிலும் கல்யாண வீட்டிலும்கூட பேசிக்கொண்டிருக்கிறார். தவெக கூட்டணியில் விசிக இருக்கும்பொழுது திமுக-வை விமர்சித்து பேசலாம்.. அல்லது தவெக ஏதாவது திட்டங்களை கொண்டுவந்திருந்தால் அதை பற்றி பேசலாம்.. அல்லது தலித் மக்களின் தேவைகளை பற்றி பேசலாம்.. தலித் மக்களின் உரிமைகள் குறித்து பேசலாம்.. ஆனால் திருமா தொடர்ந்து நான் மேலே சொன்ன விசயங்களையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார். அதிலும் திமுக கூட்டணியில் இருக்கும்பொழுது எல்லா மேடைகளிலும் பாஜக-விற்கு எதிராக பாஜக-வின் திட்டங்களுக்கு எதிராக சனாதன பார்ப்பனியத்திற்கு, RSS-க்கு எதிராக பேசி முழங்கியவர் தவெக கூட்டணிக்கு போனதிலிருந்து எந்த மேடையிலாவது சனாதனம்,பார்ப்பனியம், வர்ணாஸ்ரமம்னு எதையாவது பேசி பாத்தீங்களா?? திரும்ப திரும்ப விஜய் RSS இல்லைனு மக்களை ஏமாற்ற இந்த யுக்தியை திருமா கையாளுகிறார். கோயபல்ஸ் யுக்தி.. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை மக்களை நம்ப வைப்பது.. இல்லையென்றால் ஏன் இதை போகின்ற இடங்களிலெல்லாம் பேசவேண்டும்? திருமாவிற்கு மக்களிடத்திலே பேச வேறு விசயமே இல்லையா? தமிழ்நாட்டில் பேசவேண்டிய பிரச்சனைகளே இல்லையா? தலித் மக்களுக்கு ஜாதிய தீண்டாமைகள் முற்றிலும் இல்லாமலாகிவிட்டதா? இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்பொழுது திரும்ப திரும்ப விஜய் BJP ஆள் இல்லைனு திருமா பேசுகிறார் என்றால் விஜய் BJP ஆள் என்பதை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்கான அஜெண்டாவை நேரேட்டிவை BJP திருமாவிடம் ஒப்படைத்திருக்கிறது.. விஜய் RSS ஆ இல்லையான்னு அவருடைய செயல்படுகளே சொல்லும்.. ச.ம-தில் பாஜக என்கிற பெயரை அண்ணன் வன்னி அரசு சொல்லும்பொழுது அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க சொன்ன தவெக BJP ன் B Team ஆ இல்லையா என்பதை மக்களிறிவார்கள். நாம் ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டிய அவசியமில்லைனு விஜய் சொன்னதிலிருந்து விஜய் BJP ஆளா இல்லையா என்பதை மக்களிறிவார்கள். FCRA க்கு எதிராக இதுவரை வாய் திறக்காத விஜய் BJPஆளா இல்லையா என்பதை மக்களிறிவார்கள். திருப்பரங்குன்றம் files க்கு தடை விதித்த தவெக BJP ஆளா இல்லையா என்பதை மக்களிறிவார்கள். சென்னை ஏர்போர்ட்டை தனியாருக்கு கொடுங்கள் என்று மோடிக்கு விஜய் கடிதம் எழுதியதிலிருந்து விஜய் BJP ஆளா இல்லையா என்பதை மக்களிறிவார்கள். திருமா திரும்ப திரும்ப பேசுவதால் பொய்யை உண்மையாக்கிவிட முடியாது. இது திருமா மீதான நன்மதிப்பை அறிவுசார் தளத்திலிருந்து விளக்கவே பயன்படும். ஏற்கனவே திருமா அறிவுசார் நபர்களிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார்.. மேலும் மேலும் இவ்வாறு பேசுவது இன்னும் அத்தூரத்தையே அதிகப்படுத்தும். TVK=BJP

Arakalagam·10 days ago·1 min read