Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Tamil Nadu

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஏன் பெரியார் சிலையை வைக்கக்கூடாது? ராம ரவிக்குமாருக்கு, அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் கண்டனம்!

A

Arakalagam

August 14, 2026Updated September 15, 20261 min read10 views
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஏன் பெரியார் சிலையை வைக்கக்கூடாது? ராம ரவிக்குமாருக்கு,  அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் கண்டனம்!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு

திருவண்ணாமலை மாவட்டம் - 90474 00485.

பத்திரிகை செய்தி

நாள் : 13.08.2026

தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றக் கோரி, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்துக்கு முயற்சித்த ராம ரவிக் குமார் தாக்கல் செய்த வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூா் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படும், தந்தை பெரியாா் சிலையை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உள்ளார். இந்த மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான தவெக அரசின் வழக்குரைஞா், தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் உள்ள பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயில் நிலத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளோம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

அதன் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் தந்தை பெரியாா் சிலை வைக்கப்பட்டுள்ளதா என திருவையாறு வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர்.

கோயில் நிலத்திலோ அல்லது பொதுநிலத்திலோ, யார் சிலை இருக்க வேண்டும் என்பதை ராம ரவிக்குமார் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாட்டின் கோயில்களில், பெரும்பான்மை இந்து மக்கள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக போராடி ஆலய சமத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். ராம ரவிக்குமார் இருக்கும் சங்பரிவார் அமைப்பினர் எவரும் போராட்ட வில்லை.

கோயில்களில் அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராக வேண்டும், நம் தாய் மொழியாம் அன்னை தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டும் என்பதற்காக களமாடியவர் தந்தை பெரியார். அவரின் சிலையை கோயில் நிலத்தில் வைக்காமல் வேறு யார் சிலையை வைப்பது? இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சனாதான கொடுமையால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உழன்று கொண்டிருந்த போது, அதற்கு எதிராக போராடி நம் மக்களின் வாழ்வுரிமையை மீட்க, எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் தந்தை பெரியார். இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் இறைவன் செயல் தானே? அவன் இன்றி அணுவும் அசையுமோ?

கோயில் நிலங்கள் அனைத்தும் மக்கள் நிலங்கள் தான். மக்களின் உரிமைக்காக போராடிய தலைவரின் சிலையை அங்கு வைக்காமல் எங்கு வைப்பது? தஞ்சை மாவட்டம் கண்டியூர், பிரம்மசிரக் கண்டீஸ்வரர், கோயில் நிலத்தில் தந்தை பெரியாரின் சிலை இருக்க, இந்த சமய அறநிலைத்துறை உரிய அனுமதி வழங்க வேண்டும்.

வழக்கை தொடுத்த, ராம ரவிக்குமார், மதுரை மாவட்டம் எழுமலை உத்தப்புரத்தில், வாழும் தேவேந்திரர், அருந்ததியர் மக்களை கோயிலில் பொங்கல் வைக்க விடாமல் தடுக்கும் சாதி, தீண்டாமைக்கு துணை போவதை முதலில் நிறுத்தட்டும். பிறகு பேசலாம் தந்தை பெரியார் பற்றி! 2008முதல், இன்று வரை படித்து முடித்து, அர்ச்சகர் பணிக்காக காத்து நிற்கும், 500க்கும் மேலான அனைத்து சாதி இந்து மாணவர்களின், வாழ்வுரிமைக்காக என்றாவது பேசியிருக்கிறாரா ராம ரவிக்குமார்? கருவறை தீண்டாமையை இன்று வரை அமுல்படுத்துவது அவரின் அமைப்பு தானே? கோயில்பற்றியும், இந்துக்கள் பற்றியும் பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? வர்ணாசிரம சனாதனத்தின், அடையாள செயல்படும் ராம் ரவி குமாரை தமிழக மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

எனவே,தந்தை பெரியார் சிலை குறித்த பிரச்சனையில் தவெக அரசு, கோயில் நிலத்தில் சிலை வைக்க உரிய அனுமதி கொடுப்பதுடன், நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்து வழக்கை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என்று கோருகிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர்,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

Comments (...)

You must be logged in to leave a comment.

Related News

அரியலூர் அதிர்ச்சி: டாஸ்மாக் எதிர்ப்பு மறியலில் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 3 மாணவர்கள் படுகாயம்!Tamil Nadu

அரியலூர் அதிர்ச்சி: டாஸ்மாக் எதிர்ப்பு மறியலில் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 3 மாணவர்கள் படுகாயம்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதில் 3 மாணவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Arakalagam·3 months ago·1 min read
தென்னகத்தின் 'இசைக்குயில்' எஸ். ஜானகி காலமானார்: திரையிசையில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது!Tamil Nadu

தென்னகத்தின் 'இசைக்குயில்' எஸ். ஜானகி காலமானார்: திரையிசையில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது!

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் அன்போடு 'ஜானகி அம்மா' என்று அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி (88), வயது மூப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக மைசூருவில் காலமானார்.

Arakalagam·3 months ago·1 min read
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: Tamil Nadu

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்து வருகிறார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழகப் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார மானியத்துக்காக மட்டும் ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பயிர்க் கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதன் விவரம்: சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Arakalagam·about 2 months ago·1 min read
கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !Tamil Nadu

கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !

பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞரை நினைவு கூர்கிறோம்! 17 ஆண்டுகளாக காத்திருக்கும் 178 மாணவர்களுக்கும், 2021-லிருந்து படித்து முடித்த 400 மாணவர்களுக்கும் உடனே பணிநியமனம் வழங்க வேண்டும்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் 128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம் - 90474 00485.

Arakalagam·about 1 month ago·1 min read
Support Independent Journalism

Help Us Tell the Stories That Matter

Arakalagam is powered by readers like you. Your support keeps our journalism free, independent, and accessible to all.