குரு மூர்த்தி RSSஇன் நிழல் அதிகாரம்

தமிழ்நாட்டு அரசியலில் எந்தக் கட்சியிலும் முதன்மை பொறுப்பு வகிக்காத ஒரு நபர் நடத்தக் கூடிய துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்வு ஏன்? ஒன்றிய அமைச்சர் முதல் தமிழ்நாட்டில் ஆளும் ஆளத் துடிக்கிற கட்சிகளின் கவனத்தினை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.


அரசியலில் RSSன் சித்தாந்த்த்தையும் பொருளியல் உறவுகளில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஆழமான தொடர்புகளையும் நீதிபதிகள் முதல் அரசின் உயர் பதவிகளில் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் வரை குருமூர்த்தியின் கண் அசைவிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஒரு தற்செயல் நிகழ்வாக அல்லது ஒரு தனிமனித செல்வாக்காகக் கடந்து போகும் ஒன்றாகக் கருத முடியாது என்பதற்காகத் தான் கேரவன் இதழின் முன்னாள் ஆசிரியரான வினோத். கே. ஜோஷ் குருமூர்த்தி தொடர்பாக ஒரு முழுநீளக் கட்டுரைக்காகப் பலரிடம் தொடர்பு கொண்டார்.

எவரும் ஒப்புக் கொள்ளாத சூழலில் ஒரு இளம் பெண் ஊடகவியலாளரான சுஜாதா சிவஞானம் குருமூர்த்தி தொடர்பான கட்டுரைக்கு பொறுப்பேற்றதோடு அவருடைய அதிகார வகுப்புத் தொடர்புகளையும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முதற்கொண்டு பார்ப்பன சாதி மேலாதிக்க வெறி வரை பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி Gurumoorthy The sangh’s fixer எனும் கட்டுரைத் தொகுப்பை கேரவன் இதழ் சார்பாகக் கொண்டு வந்தார்.


கேரவனின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் தமிழ்ப்புலம் 8 மாதங்களுக்கு முன்னமே வெளியிட்டு பரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. குருமூர்த்தியையும் அவர் போன்ற கருத்துருவாக்க அடியாட்களை அவர்களின் திரைமறைவிலான செயல்பாடுகளை புரிந்துகொள்ள இந்நூல் உதவும் என்பது மிகையாகாது.

குமரன்[அரசியல் செயற்பாட்டாளர்].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *